Azhagi Facebook Group
Songs of Consciousness - in Tamil and Hindi
Overview - when were the songs (of Consciousness) written, tunes composed, why 'of Consciousness', etc.
|
Set 1 (2019) - Click here to see details |
|
Saranagathi adaindhoam சரணாகதி அடைந்தோம் |
Click here to see the lyrics | s1mt |
சரணாகதி அடைந்தோம் உந்தன் பாதங்களில் நற் பாதங்களில் பொற் பாதங்களில் அடைந்தோம் சரணாகதி காலையில் எழுந்ததுமே வணங்கிடுவோம் மாலை வரையிலும் நினைத்திடுவோம் இரவு தொடங்கும்வரை த்யானம் செய்வோம் நள்ளிரவு தொடங்கும்வரை த்யானம் செய்வோம் கனவிலும் உன் உருவே பார்த்திருப்போம் சரணாகதி சரணாகதி சரணாகதி சரணாகதி அடைந்தோம்.....
|
elloarukkum Pillai avan Ganapathi எல்லோருக்கும் பிள்ளையவன் கணபதி |
Click here to see the lyrics | s1mt |
எல்லோருக்கும் பிள்ளையவன் கணபதி செல்வ கணபதி கஜமுக நாயகன் அதிபதி உலக அதிபதி வினைகளை அறுத்து ஜெயத்தினைத் தருபவன் அவனே அவனே அவன் திருவடியில் நம் சிரம் வைத்து என்றும் சரணே சரணே
|
Kandadhum Konjum azhagai கண்டதும் கொஞ்சும் அழகை |
Click here to see the lyrics | s1mt |
கண்டதும் கொஞ்சும் அழகைக் கொண்டவன் அவனே அவனே எந்தனக்குக் கந்தனின் அருளும் என்றுமே உண்டே உண்டே முருகருக்கென் உடல் பொருள் ஆவி மூன்றுமே தருவேன் தருவேன்
|
Naanum Sivane avanum ivanum Sivane நானும் சிவனே அவனும் இவனும் சிவனே |
Click here to see the lyrics | s1mt |
நானும் சிவனே அவனும் இவனும் சிவனே யாவும் சிவமே அண்டம் முழுதும் சிவமே ஜெயமே ஜெயமே இதனை யுணர்ந்தால் ஜெயமே அச்சம் இச்சம் இல்லா நிலை இது ஒன்றே அச்சமும் இச்சமும் இல்லா நிலை இது ஒன்றே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
|
Chinnanjiru Vidhaiyittu சின்னஞ்சிறு விதையிட்டு |
Click here to see the lyrics | s1mt |
சின்னஞ்சிறு விதையிட்டு ஆலமரத்தையே நாம் ஆக்கலாம் உருவாக்கலாம் சின்னஞ்சிறு உள்ளங்கையில் ஆழ்கடலையே நாம் அடக்கலாம் அட அடக்கலாம் சின்னஞ்சிறு கண்களுள்ளும் அண்டத்தையே சுருக்கி விரிக்கலாம் அட விரிக்கலாம் சின்னஞ்சிறு நாமம் சொல்லி பெரும்பொருள் இறையையே அடையலாம் நாம் அடையலாம் இறுதியாய் உறுதியாய் அறுதியாய் அடையலாம் அடையலாம் அடையலாம்
|
Niththam Manadhai Suththam Seidhu நித்தம் மனதை சுத்தம் செய்து |
Click here to see the lyrics | s1mt |
நித்தம் மனதை சுத்தம் செய்து எண்ணம் அகற்ற யுத்தம் செய்து சத்தம் இல்லா நிலையை எய்துவோம் சச்சிதானந்தத்தை என்றும் பருகுவோம் ஒரு முடிவில்லாமல் என்றும் பருகுவோம் ஓம் ஓம்
|
Katravai Yaavum Kazhivu endrunar கற்றவை யாவும் கழிவு என்றுணர் |
Click here to see the lyrics | s1mt |
கற்றவை யாவும் கழிவு என்றுணர் உலகறி வனைத்தும் வீண் என்றுணர் இவையழிந்த நிலையே உண்மை என்றுணர் இவ்வுண்மையை உணர்வதே இலக்கு என்றுணர் உற்றார் உறவினர் முற்றும் துறந்து சுற்றம் சூழல் முழுதும் மறந்து சற்றும் விடாது தியானம் செய்தால் தியானிப்பவரும் தியானித்ததுவும் ஒன்றாகிடுமே ஒன்றிய நிலையில் இறையும் நாமும் ஒன்றில் ஒன்றே Note: It so happened that I sang and recorded the above song alone on 06-April-2025 (Sri Rama Navami), at around 1.50pm.
|
Set 2 (2024) - Click here to see details |
|
Prema Samundar Karuna Sagar |
Click here to see the lyrics | s2mt |
Prema Samundar Karuna Sagar Hamara Sayee Jai Krishna Rama Govinda Radhe Shyama Govinda NamaShivaya Govinda Alla Eshu Govinda Buddha Zorashtra Govinda Karthik Vinayak Govinda
|
Mooshika Vahana Mayura Vahana |
Click here to see the lyrics | s2mt |
Mooshika Vahana Mayura Vahana Ganapathi Muruga Shivaya Narayana Durga Lakshmi Bhavani Saraswathi Sarva Devo Devi Mera Baba
|
HariHara Shivam |
Click here to see the lyrics | s2mt |
HariHara Shivam HariHara Shivam Sayee Ram Sayeee Ram Bolo Bolo Bolo Bolo Hara Hara Hara Hara Mahadev Bolo Bolo Bolo Bolo Hara Hara Hara Hara Mahadev
|
Sathyam Shivam Sundaram Sayee |
Click here to see the lyrics | s2mt |
Sathyam Shivam Sundaram Sayee Sathyam Shivam Sundaram Sayee Sai Rama Rama Sai Krishna Sai Sai Krishna Krishna Sai Rama Sai Sai Sita Rama Sita Sita Rama Sai Radhey Krishna Radhey Radhey Krishna
|
Bakthi Maela Bakthi Kondu பக்தி மேல பக்தி கொண்டு |
Click here to see the lyrics | s2mt |
பக்தி மேல பக்தி கொண்டு சாயியை நாமும் ஹ்ருதயத்திலே பதிந்து கொண்டால் அருள்மழை நாளும் சரணமே சாயி க்ஷணமும் ஸ்மரணமே சாயி விடுதலை நமக்கும் நிச்சயம் பாருங்க சாமி ஶிர்டி சாயிதான் பர்தி ப்ரேம சாயி, ஶிர்டி சாய்தான் பர்தி ப்ரேம சாயி அட பர்தி சாய்தான் ப்ரேம ஶிர்டி சாயி சொல்லுங்க பர்தி சாயிதான் ப்ரேம ஶிர்டி சாயி Bakthi maela bakthi kondu saayiyai naamum Hrudhayaththilae padhindhu kondaal aruLmazhai naaLum charaNamae saayi kshaNamum SmaraNamae saayi vidudhalai namakkum nichchayam paarunga saami Shirdi saayithaan Parthi Praema saayi, Shirdi saayithaan Parthi Praema saayi ada Parthi saayithaan Praema Shirdi saayi sollunga Parthi saayithaan Praema Shirdi saayi
|
Bhandari Baba Nithya Niranjana Baba |
Click here to see the lyrics | s2mt |
Bhandari Baba Nithya Niranjana Baba Alakh Niranjana Baba Bhava Baya Banjana Baba Bolo Bolo Sayee Bolo Bolo Rama Bolo Krishna Bolo Narayana Bolo
|
Prema Swarupa Parthi Nivasa |
Click here to see the lyrics | s2mt |
Prema Swarupa Parthi Nivasa Shirdinatha Jai Madhava Keshava Murali Manohara Vaikundanatha Jai Hara Hara Shiva Shiva Shambo Shankara Kailasanatha Jai Narayana Shiva Shivaya Giridhara Alakh Niranjana Jai
|
Darshan Sparshan Sambashan |
Click here to see the lyrics | s2mt |
Darshan Sparshan Sambashan Sairam Narayana Bol Nama Shivaya Bol Rama Bol Krishna Bol Alla Eshu Bol
|
Sayee Sundara Baba |
Click here to see the lyrics | s2mt |
Sayee Sundara Baba Murali Mohana Baba Krishna Madhava Madhava Krishna Madhava Krishna Krishna Madhava
|
Krishna… Krishna… Krishna….... Krishna… |
Click here to see the lyrics | s2mt |
Krishna… Krishna… Krishna….... Krishna… Krishna Bolo Krishna Bolo Krishna Bolo Bolo Krishna Bolo Krishna Bolo Krishna Narayana Krishna Madhurapuri Krishna Radhey Rani Krishna Gopikaon ke Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Bolo Krishna Bolo Krishna Bolo Bolo Krishna Bolo Krishna Bolo Krishna
|
Guru Pada Charanam Bhava Baya Haranam |
Click here to see the lyrics | s2mt |
Guru Pada Charanam Bhava Baya Haranam Janma Mrutyu Chakra Vicchhinnam Sundara Sugandam Parama Pavanam Janma Mrutyu Chakra Vicchhinnam
|
Baba Baba Hamara Baba |
Click here to see the lyrics | s2mt |
Baba Baba Hamara Baba Shambo Durge Gajavadana Karthikeya Rama Sita Krishna Radha Rama Krishna
|
Jai Jai Jai Baba Ki Jai |
Click here to see the lyrics | s2mt |
Jai Jai Jai Baba Ki Jai Deena Dayalan Ki Jai Jai Jai Jai Jai Baba Ki Jai Deena Dayalan Ki Jai Jai Venkata Ramana Sankata Harana SriRanganathan Ki Jai Jai
|
Brindhavanaththil oru Nandhakumaaran பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரன் |
Click here to see the lyrics | s2mt |
பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரன் நம் குட்டிக் கண்ணன் நம் செல்லக் கண்ணன் குழலூதும் கிருஷ்ணன் அவன் நீல மேக வர்ணன் வெண்ணை தின்ற கள்வன் அவன் கோபியரின் பிரியன் birundaavanaththil oru nandhakumaaran nam kuttik Kannan nam chellak Kannan baba Kuzhaloodhum kirushNan avan neela maega varNan veNNai thindra kaLvan avan Gopiyarin piriyan
|
Muruga Muruga Muruga முருகா முருகா முருகா |
Click here to see the lyrics | s2mt |
முருகா முருகா முருகா வருவாய் வருவாய் வருவாய் எங்கள் தந்தை நீயே எங்கள் தாயும் நீயே முருகா முருகா முருகா வருவாய் வருவாய் வருவாய் ப்ரேம சாயி பாபாவாக வருவாய் வருவாய் வருவாய் விரைவில் வருவாய் வருவாய் விரைவாய் வருவாய் வருவாய் muruga muruga muruga varuvaai varuvaai varuvaai engaL thandhai neeye engaL thaayum neeye muruga muruga muruga varuvaai varuvaai varuvaai prema sai baabavaaga varuvaai varuvaai varuvaai viraivil varuvaai varuvaai viraivaai varuvaai varuvaai
|
Harahara Arohara Sayeeyaam ஹரஹரா அரோஹரா ஸாயியாம் |
Click here to see the lyrics | s2mt |
ஹரஹரா அரோஹரா ஸாயியாம் தீவினைகளை அறுக்கும் முருகராம் கோபியர் போல் மனதை மாற்றும் க்ரிஷ்ணராம் ஸச்சிதானந்தத்தையே தரும் ஹரிஹரனாம் Harahara Arohara Sayeeyaam TheevinaigaLai aRukkum murugaraam Gopiyar poal manadhai maatrum krishnaraam Sachchitanandhaththaiye tharum hariharanam
|
Haraharaa Aroharaa Murugaraam ஹரஹரா அரோஹரா முருகராம் |
Click here to see the lyrics | s2mt |
ஹரஹரா அரோஹரா முருகராம் தீவினைகளை அறுக்கும் அருகராம் வள்ளி தெய்வயானையின் துணைவராம் முத்தமிழை நமக்களித்த அழகராம் தாமரை போல் மனதை மாற்றும் கந்தராம் ஸச்சிதானந்தத்தையே தரும் குருபரனாம் சாயி ஸச்சிதானந்தத்தையே தரும் சரவணனாம் Haraharaa Aroharaa murugaraam TheevinaigaLai aRukkum arugaraam Valli Dheivayanaiyin Thunaivaraam Muththamizhai namakkaLiththa azhagaraam Thaamarai poal manadhai maatrum kandharaam Sachchitanandhaththaiye tharum guruparanaam saayee Sachchitanandhaththaiye tharum saravaNanaam
|
Brahmavum avare Vishnuvum avare Shivanum avare Jai ப்ரஹ்மாவும் அவரே விஷ்ணுவும் அவரே ஶிவனும் அவரே ஜெய் |
Click here to see the lyrics | s2mt |
ப்ரஹ்மாவும் அவரே விஷ்ணுவும் அவரே ஶிவனும் அவரே ஜெய் நம் ஸாயிதான் எல்லா கடவுளும் ஜெய் பார்வதியும் அவரே பிள்ளையாரும் அவரே ஸ்கந்தரும் அவரே ஜெய் நம் ஸாயிதான் எல்லா கடவுளும் ஜெய் நாராயணனும் அவரே ராமா கிருஷ்ணரும் அவரே லக்ஷ்மிதேவியும் அவரே சரஸ்வதிமாவும் அவரே Brahmavum avare Vishnuvum avare Shivanum avare Jai nam Saayithaan ellaa kadavuLum Jai Parvathiym avare Pillaiyarum avare Skandharum avare Jai nam Saayithaan ellaa kadavuLum Jai Narayananum avare Rama Krishnarum avare LaskhmiDeviyum avare SaraswathiMavum avare
|
vaa vaa kandhaa kumaraa வா வா கந்தா குமரா வடிவேலா |
Click here to see the lyrics | s2mt |
வா வா கந்தா குமரா வடிவேலா உந்தன் கால்களை நானுமழுத்திப் பிடிக்கலாமா பிடித்தபின் பிடித்தபடியே இருக்கலாமா நீயும் நிச்சயம் உய்விப்பாய் என நம்பலாமா vaa vaa kandhaa kumaraa vadivaelaa undhan kaalgaLai naanumazhuththip pidikkalaamaa pidiththapin pidiththapadiyae irukkalaamaa neeyum nichchayam uyvippaai ena nambalaamaa Note: The above Divine song was showered by my Beloved Baba Murugar at 2.20am on 14-Sep-2024. Whaaat a lovvvvvvvvvvvvvely song... All Glory and Thanks to my Beloved Baba Murugar. Sairam..... Jai Sairam..... Jai Sri Murugar! Sairam..... Sairam..... Sairam.....
I did sing the above song on 14-Sep-2024 as I was sleeping in my bed itself and whatsapped it to meera at 2.23am. You may please see the screenshot below, if interested. Today, 06-April-2025 (Sri Rama Navami), sang the above beauuuuuuuuuutiful song again and uploaded it herein.
![]()
|
Gowri Karunakari |
Click here to see the lyrics | s2mt |
Gowri Karunakari Sundari Ranjani Guna Manjari Janani Dasha Bhuja Dharini Bhavini Tribhuvana Palini Alakh Niranjani
|
Raja Rajeshwari Prema Swaroopini |
Click here to see the lyrics | s2mt |
Raja Rajeshwari Prema Swaroopini Akhilandeshwari Hrudaya Nivasini Veena Vadini Tripura Sundari Parthi Pureeshwari Asura Vinashini Jaya Jaya Shivani
|
Babavin PadhangaLai Charanadaivoam பாபாவின் பதங்களை சரணடைவோம் |
Click here to see the lyrics | s2mt |
பாபாவின் பதங்களை சரணடைவோம் மறு ஜென்மம் என்பதையே மறந்திடுவோம் ஷிரிடி பாபா பர்திபுரி பாபா ப்ரேம ஸாயி பாபா அளவில்லா அன்பு எல்லையற்ற கருணை ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே Babavin PadhangaLai Charanadaivoam maRu jenmam enbadhaiye maRandhiduvoam Shirdi Baba ParthiPuri Baba Prema Sai Baba aLavillaa anbu ellaiyatra karuNai aanandham aanandham aanandhame
|
Vittala Vittala Vittala |
Click here to see the lyrics | s2mt |
Vittala Vittala Vittala Jaya Hari Vittala Baktha Sakha Panduranga Deena Sakha SaiRanga Pandarpura Vittala Parthipura Vittala Shirdi Sai Vittala Prema Sai Vittala
|
Maruthi Raya Anjaneya |
Click here to see the lyrics | s2mt |
Maruthi Raya Anjaneya Jai Hanuman Jai Hanuman Rama Baktha Rama Dasa Rama Dhoota Jai Hanuman Rama Bolo Raamaa Bolo Rama Bolo Raamaa Bolo Hari Hari Hari Hari Rama Bolo Jai Jai Jai Jai Rama Bolo Narayana Hari Rama Bolo Narayana Hari Rama Bolo Rama Bolo Ramaa Bolo Rama Bolo Ramaa Bolo Hari Hari Hari Hari Rama Bolo Jai Jai Jai Jai Rama Bolo Hari Hari Hari Hari Rama Bolo Jai Jai Jai Jai Rama Bolo Narayana Hari Rama Bolo Rama Bolo Raamaaa Bolo Narayana Hari Rama Bolo Rama Bolo Raamaa Bolo Rama Bolo Raamaaa Bolo Rama Bolo Raamaa Bolo Rama Bolo Raamaaa Bolo Rama Bolo Raamaa Bolo Rama Bolo Raamaaa Bolo
|
Mandir Masjid Gurudwara Girjaghar |
Click here to see the lyrics | s2mt |
Mandir Masjid Gurudwara Girjaghar In Sab Me Sayee Hai In Sab Me Hamaraa Sayee Hai Shiva Ho Tum Shiva Ho Tum Shiva Ho Tum Allah Ho Tum Allah Ho Tum Allah Ho Tum Allah Ho Tum Nanak Ho Tum Nanak Ho Tum Nanak Ho Tum Nanak Ho Tum Jesus Ho Tum Nanak Ho Tum Jesus Ho Tum Shiva Ho Tum Allah Ho Tum Nanak Ho Tum Jesus Ho Tum Nanak Ho Tum Jesus Ho Tum Note: Girjaghar (girjāghar) means Church (Click here)
|
Baba namadhu arumarundhu பாபா நமது அருமருந்து |
Click here to see the lyrics | s2mt |
பாபா நமது அருமருந்து ஞானம் அளிக்கும் ஒளிவிளக்கு ஜனன-மரண சுழற்சி அறுத்து நமக்கு மோக்ஷத்தையே அருளும் பேரமுது Baba namadhu arumarundhu Gnanam aLikkum oLiviLakku Janana-marana suzhaRchi aRuththu namakku Mokshaththaiye aruLum paeramudhu
|
Daya Karo Daya Karo Baba |
Click here to see the lyrics | s2mt |
Daya Karo Daya Karo Baba Janana-Marana Chakra Kaatane Ki Daya Karo Daya Karo Baba
|
Shirdi Sai Parthi Sai Prema Sai |
Click here to see the lyrics | s2mt |
Shirdi Sai Parthi Sai Prema Sai Alla Eshu Buddha Zorashtra Nanak Sai Shirdi Sai Parthi Sai Prema Sai Alla Eshu Buddha Zorashtra Nanak Sayee… Krishna Sai Rama Sai ShivaHari Sai Krishna Sai Rama Sai ShivaHari Sai Ganapati Sai Muruga Sai Durge Sai Bolo Ganapati Sai Muruga Sai Durge Sai
|
Shirdi Sai Parthi Sai Prema Sai Jaya Om |
Click here to see the lyrics | s2mt |
Shirdi Sai Parthi Sai Prema Sai Jaya Om Narayana Narayana Narayana Hari OM Bolo Sai Bolo Shiva HariHara Bolo Ramachandra Bolo Anjaneya Bolo Radhe Krishna Bolo Alla Eshu Bolo
|
Set 3 (2021) - Click here to see details |
|
Saththanavar avar Muththanavar சத்தானவர் அவர் முத்தானவர் |
Click here to see the lyrics | s3mt |
சத்தானவர் அவர் முத்தானவர் சத்தியத்தின் அழியா வித்தானவர் தத்தம் 'தான்'-இல் நிலைத்திட அவரவர் நித்தம் சத்சங்கம் சளைக்காமல் அருள்பவர் சத்தானவர் அவர் முத்தானவர் சத்தியத்தின் அழியா வித்தானவர் 'சத்' ஆனவர் அவர் முத்தானவர் சத்தியத்தின் அழியா வித்தானவர் முக்தியை எவரும் எளிதில் பெறவே சக்தியும் அவரே அசலமும் அவரே பக்தியில் அவரடி சரண் புகுவோம் அதுவேயாம் சிவனடியும் என்றுணர்வோம் Note: Written, tuned and sung in 2021.
|
ezhundhavudan Ninaivalaigal Vaendaam எழுந்தவுடன் நினைவலைகள் வேண்டாம் |
Click here to see the lyrics | s3mt | Watch the song in youtube |
ஓம் ஓம் ஓம்... சத்குருவின் வாக்கதுவே பேச்சு அவர் சொல்லே நமக்கெல்லாம் மூச்சு அருணாசல இரமணர் அவரின் மொழியே சத்ய யுக பிறப்பிற்கு வழியே 1) எழுந்தவுடன் நினைவலைகள் வேண்டாம் திட்டமிடல் வேண்டவே வேண்டாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 2) சென்றததில் நீ தோய வேண்டாம் கற்பனை சஞ்சாரம் வேண்டாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 3) உள் பேச்சு விவகரிப்பு வேண்டாம் வெளியிலும் உறவாட்டம் வேண்டாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 4) விழிப்பு நிலை யாவுமே மனிதா (வெறும்) இரட்டை உணர்ச்சிகளின் கூத்து 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 5) எனதெ னக்கு 'நான்' பாவ கிளைகள் வெட்டி எறி வேரோடு, களைகள் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 6) 'நான்' பாவமே உன் முதல் எதிரி தகர்த்தே வதம்செய் அதை நீ 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 7) 'தான்' மட்டுமே இங்கு உண்டு (எனில்) 'நான்' என்ற தனிப்பொருளும் உண்டோ? 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 8) ஆளென்றே இல்லை யென் பதனால் எண்ணங்கள் உணர்ச்சிகள் பொய்யே 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 9) ஆளே யிங்கு பொய்யன் யென் பதனால் புத்தியும் சுவாசமுமே இலையே 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 10) ஆள் ஒன்றே இல்லாத போழ்து (அந்த) அண்டம் மட்டும் விதிவிலக்கா என்ன! 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 11) அது இது என்றெல்லாம் இல்லை ஒட்டு மொத்த அண்டமுமே பொய்மை 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 12) இல்லாத மனமே பிரபஞ்சம் (எனில்) பிரபஞ்சம் முழுவதுமே மாயம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 13) இருப்பதோ ஒரு பொருளே அன்றோ (எனில்) இவரவர்க் கோர் ஞானமென் றுளவோ? 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 14) 'தான்'-ஆகவே இங்கு எல்லாம் (எனில்) ஞானம் "அடைதல்" என்று உண்டோ? 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 15) சகஜமே சமாதி ஓ மனிதா! வேறு எல்லா சமாதியுமே சும்மா 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 16) ஆழ் உறக்கம் போல்தானே 'தான்'-ஆம் (அது) பிறப்பு இறப்பில்லா பொருளாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 17) ஆழ் உறக்கம் போல்தானே 'தான்'-ஆம் (அதில்) அசைவும் ஓசையுமே இலையாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 18) ஆழ் உறக்கம் போல்தானே 'தான்'-ஆம் (ஓர்) விருப்பும் வெறுப்புமிலா நிலையாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 19) ஆழ் உறக்கம் போலேதான் 'தான்'-ஆம் அது இணையில்லா முழுமுதல் அன்பாம் 'தான்-தான்'-இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் 20) பேரிருப்பும் பேரறிவும் அதுவே பேருணர்வும் என்றென்றும் அதுவே 'தான்-தான்'இல் அப்படியே நின்றே வாழ்வு தனில் நீ மிதந்து செல்வாய் தாமரை போல் நீ மிதந்து செல்வாய் சத்குருவின் வாக்கதுவே பேச்சு அவர் சொல்லே நமக்கெல்லாம் மூச்சு அருணாசல இரமணர் அவரின் மொழியே சத்ய யுக பிறப்பிற்கு வழியே ஓம் ஓம் ஓம்... Note: Written, tuned and sung in 2021.
|
Punidham Punidham Satguruvin Sannidhi புனிதம் புனிதம் சத்குருவின் சந்நிதி |
Click here to see the lyrics | s3st | Watch the song in youtube |
கருணை பேரன்பு சத்குருவின் சந்நிதி ஞானம் ஆனந்தம் சத்குருவின் சந்நிதி அமைதி பேரசலம் சத்குருவின் சந்நிதி புனிதம் புனிதம் சத்குருவின் சந்நிதி அழகோ அழகு சத்குருவின் சந்நிதி மகிழ்ச்சி ததும்பும் சத்குருவின் சந்நிதி சத்தியம் நித்தியம் சத்குருவின் சந்நிதி புனிதம் புனிதம் சத்குருவின் சந்நிதி குருபார்வை பரவசம் சத்குருவின் சந்நிதி தாய்தந்தை பெரும்சுகம் சத்குருவின் சந்நிதி சேய்நம்மைத் தாலாட்டும் சத்குருவின் சந்நிதி புனிதம் புனிதம் சத்குருவின் சந்நிதி விசாரம் துலங்கும் சத்குருவின் சந்நிதி சகஜம் சம்பூர்ணம் சத்குருவின் சந்நிதி 'தான்-தான்' திளைத்திடும் சத்குருவின் சந்நிதி புனிதம் புனிதம் சத்குருவின் சந்நிதி பேரறிவு மழைச்சாரல் சத்குருவின் சந்நிதி பேருணர்வுப் பெருங்கடல் சத்குருவின் சந்நிதி பேரிருப்பின் பிரம்மாண்டம் சத்குருவின் சந்நிதி புனிதம் புனிதம் சத்குருவின் சந்நிதி Note-1: The above song has been sung in the tune of 'Paramam Pavithram Baba Vibuthim' Sai Bhajan song. Note-2: Written and sung in 2021.
|
O Rama! ஓ ராமா! |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
ஓ ராமா! ஜெகத்தை ஆளும் தெய்வமே! நீ என்னுள் 'தான்'-ஆய் வாழும் பிம்பமே! ஓடினேன் ஆடினேன் உன்னை மறந்து தேடி நான் தெளிந்தேன் 'தான்'-ஐ உணர்ந்து உள்ளங் கையில் நீ நெல்லிக் கனி போல் ஊறாதோ பேராற்றல் 'தான்'-ஆய் நிலைத்து வாராதோ பேரின்பம் என்றும் முளைத்து பார் ஆளும் கண்ணா எந்நாளும் என்னில் 'தான்'-ஆய் நீ கோலோச்சுவாய் (ஓ ராமா!) ஜென்மப் பதிவை நீ வேரு அறுத்தால் அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும் எந்நாளும் 'தான்'-இல் நான் நின்று மகிழ்வேன் பற்றுள்ள என்னை பற்றற்று மாற்ற எப்போது அருள் செய்வாய் நீ! Note-1: The above song was written by my better-half, in 2021, to the tune of the yesteryear famous song 'O Nenje' Note-2: Sung in 2021
|
en appa - avar oru Kuzhandhai என் அப்பா - அவர் ஒரு குழந்தை |
Click here to see the lyrics | s3mt | Watch the song in youtube |
என் அப்பாவின் சிரிப்பு - பராபரன் பிறப்பு என் அப்பாவின் சிரிப்பு - பராபரை இருப்பு என் அப்பாவின் சிரிப்பு - ஞானத்தின் விரிப்பு என் அப்பாவின் சிரிப்பு - சமாதியின் சஞ்சரிப்பு என் அப்பாவின் கண்கள் - பாசத்தின் பிறப்பு என் அப்பாவின் கண்கள் - நேயத்தின் இருப்பு என் அப்பாவின் கண்கள் - மெய்ஒளியின் விரிப்பு என் அப்பாவின் கண்கள் - ஆழ்உறக்க சஞ்சரிப்பு என் அப்பாவின் வதனம் - கதிரவனின் பிறப்பு என் அப்பாவின் வதனம் - முழுநிலவின் இருப்பு என் அப்பாவின் வதனம் - நட்சத்திர விரிப்பு என் அப்பாவின் வதனம் - பிரபஞ்சத்தின் சஞ்சரிப்பு என் அப்பாவின் கைகள் - அரவணைப்பின் பிறப்பு என் அப்பாவின் கைகள் - அபயத்தின் இருப்பு என் அப்பாவின் கைகள் - பேரருளின் விரிப்பு என் அப்பாவின் கைகள் - திருமந்திர சஞ்சரிப்பு என் அப்பாவின் பதங்கள் - கங்கைநதி பிறப்பு என் அப்பாவின் பதங்கள் - நிலமகளின் இருப்பு என் அப்பாவின் பதங்கள் - சர்வலோக விரிப்பு என் அப்பாவின் பதங்கள் - நம்இதயங்களின் சஞ்சரிப்பு என் அப்பாவின் உள்ளம் - 'சத்-சித்'இன் பிறப்பு என் அப்பாவின் உள்ளம் - சகஜத்தின் இருப்பு என் அப்பாவின் உள்ளம் - கமலத்தின் விரிப்பு என் அப்பாவின் உள்ளம் - குழந்தையின் சஞ்சரிப்பு Note: Written, tuned and sung in 2021.
|
adangu Manidha Neeyum adangu adangu அடங்கு மனிதா நீயும் அடங்கு அடங்கு |
Click here to see the lyrics | s3mt | Watch the song in youtube |
கனவு கூட உன் உடலை மதிக்கவில்லையே மனிதா
கனவும் உன் அண்டத்தை எட்டி உதைத்ததே ஓ மனிதா!
இன்னுமா அடங்கவில்லையுன் விழிப்புநேர பிடிப்பு
ஓ! இன்னுமா அடங்கவில்லையுன் விழிப்புநேர பிடிப்பு
அடங்கு மனிதா நீயும் அடங்கு அடங்கு
கால தேசம் தானே உந்தன் விலங்கு விலங்கு
அடித்து அடித்து சொன்னாலும் புரியாதா உனக்கு
இடிபோல் இடித்து உரைத்தாலும் உறைக்காதா உனக்கு
முடி விழுந்தும் வலு விழந்தும் உடம்புதானா பெரிசு
உனக்கு உடம்புதானா பெரிசு
அடங்கு மனிதா நீயும் அடங்கு அடங்கு
கால தேசம் தானே உந்தன் விலங்கு விலங்கு
உடும்பு போல உடம்பை நீயும் விடுவதாக இல்லை
இப்படியே இருந்தால் உனக்கு விடுதலையும் இல்லை
உலகறிவும் புத்தியு முன்னைக் கவிழ்த்திடும் எளிதாக
ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை ரொம்ப ரொம்ப ஜாக்கிரதை
அடங்கு மனிதா நீயும் அடங்கு அடங்கு
கால தேசம் தானே உந்தன் விலங்கு விலங்கு
ஆண்டியாக இருந்தாலும் கனவினில் அவன் ராஜா
ராஜாவாக இருந்தாலும் (ஆழ்)உறக்கத்தில் அவன் ஆண்டி
இந்த மூன்று நிலையும் தாண்டி தோண்டி கடக்கணுமே உள்ள
இந்த மூன்று நிலையும் தாண்டி தோண்டி கடக்கணுமே உள்ள (அதுக்கு)
அடங்கணும் மனிதா நீயும் அடங்கணும் மனிதா
காலதேசம் பொய்யென்று நல்லா விளங்கணும் மனிதா
உனக்கு விளங்கணும் மனிதா
அடங்கணும் மனிதா முதலில் அடங்கணும் மனிதா
நீ அடங்கணும் மனிதா முதலில் அடங்கணும் மனிதா
My humble translation of the above song, in 2021
--
Even your dream utterly disregarded your body!
It just footballed out your universe! Just like that!
But yet, you still hold on firmly to your flimsy waking state, unabatedly. Is it not?
O! you just cannot let go off your waking state allurements. Is it not?
Humble up, my dear! Humble up!
You are just a mere pitiful prisoner in a time-space illusion!
You will not understand even if hammered down and drilled into your head. Right?
You are so thick-skinned that you will continue to reject all the thunderous gnanic fiery words of wisdom (of our sages, saints, rishis and mahans). Right?
Withering hairs and loosening vigour are not enough to bring down your glorification of/for your body. Right?
Humble up, my dear! Humble up!
You are just a mere pitiful prisoner in a time-space illusion!
Like the monitor lizard's strong hold, your body has become your stranglehold. Alas!
If you continue to remain so, no freedom for you ever, my dear! No freedom for you!
Worldly knowledge and intelligence will trounce you easily
Beware Beware Beware Beware!
Be extremely extremely extremely careful in dealing with them
{They are so deceitful in giving you that false individual identity {called 'person'} when you do not even exist, in reality}
Humble up, my dear! Humble up!
You are just a mere pitiful prisoner in a time-space illusion!
Even being a pauper, in his dream he is a mighty king!
Even being a mighty king, in his deep sleep he is just a NOTHINGNESS
You need to dig in and transcend these three states (waking, dreaming and deep sleep) and dive deep deep deep in (to the 4th Turiya state - of eternal STILLNESS and SILENCE)
And for that....................................................................
You need to humble up, my dear! You need to Humble up!
As your very first step, you need to Humble up, my dear! Humble up!
You need to deeply and profoundly understand and imbibe the fact that time and space are mere illusions (and thus "you, your cosmos and waking state" too - fully and wholly, without a trace of doubt - mere illusions)
As your very first step, you need to Humble up, my dear! Humble up!
You need to Humble up, my dear! You need to Humble up!
--
Note: Written, tuned and sung in 2021.
|
Sagajam Vaenduma? சகஜம் வேண்டுமா? |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... யோகா, தியானம், குண்டலினி யாவும் மெத்தக் கடினம் யோகா, தியானம், குண்டலினி யாவும் மெத்தக் கடினம் இங்கு சும்மா இருத்தல் மட்டுமே யோகம் மெத்தச் சுலபம் இங்கு சும்மா இருத்தல் மட்டுமே யோகம் மெத்தச் சுலபம் நம்பும் உளம் இருந்தாலே போதும், குரு திருப்பாதம் வந்து அடங்கிடுவாயே அது உறுதி(நிச்சயம்). "உறுதி"(திடம்). சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... "வெட்கங் கெட்டுதல் பெருமை" என்று சொல்லிக் கொடுத்திடும் பள்ளி இது சூடு ரோஷம் சொரணைக்கெல்லாம் இந்தப் பள்ளியில் இடம் ஏது? அட, "ஆளே இல்லப்பா, சும்மா இரு"-ன்னு சூளுரைக்கும் கோவில் இது. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... 'நான்'-ஐக் கொன்று தின்று விழுங்கும் 'சும்மா' இருக்கும் சக்தி இது 'தான்'-இல் தோய்ந்து அசல மௌனத்தில் அடைந்தே கிடக்கும் சிவம் இது குருவே 'தான்'-ஆம் அவரடி சரணம் என்றே இருக்கும் பக்தி இது. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... யோகா, தியானம், குண்டலினி யாவும் மெத்தக் கடினம் இங்கு சும்மா இருத்தல் மட்டுமே யோகம் மெத்தச் சுலபம் நம்பும் உளம் இருந்தாலே போதும், குரு திருப்பாதம் வந்து அடங்கிடுவாயே அது உறுதி(நிச்சயம்). "உறுதி" (திடம்). சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி..... சகஜம் வேண்டுமா? 'தான்'இல் நிற்க வா. குரு சந்நிதி, என் குரு சந்நிதி, நம் குரு சந்நிதி..... ஓம்....................................... Note-1: Tune is that of the yesteryear famous song 'vetri vaendumaa poattup paaradaa' Note-2: Written and sung in 2021.
|
Romba Sulabame ஆன்மவித்தையே, ஐயே ரொம்ப சுலபமே! |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
ஆன்மவித்தையே, ஐயே ரொம்ப சுலபமே! ஆன்மவித்தையே அது ரொம்ப சுலபமே கையை காலை மடக்கி ஆசனம் செய்யத் தேவையில்லை உடம்பை இறுக்கி கண்ணை சுருக்கி தியானம் தேவையில்லை மூச்சைப் பிடிச்சு வயிறை இழுத்து சக்கரம் தேவையில்லை ஆன்மவித்தையே, ஐயே ரொம்ப சுலபமே! ஆன்மவித்தையே அது ரொம்ப சுலபமே சும்மா இருக்கும் சுகத்தைப் பாரு நாளும் பொழுதுமே (வேறு) எதுவும் எப்பவும் செய்யவே வேண்டாம் யாரும் எவருமே ஆழ்உறக்க நிலை போல்தான் 'தான்'-இன் தன்மையும் தினம் தினம் "அதை" கோட்டை விடாதே ஆன்மவித்தையே, ஐயே ரொம்ப சுலபமே! ஆன்மவித்தையே அது ரொம்ப சுலபமே கையை காலை மடக்கி ஆசனம் செய்யத் தேவையில்லை உடம்பை இறுக்கி கண்ணை சுருக்கி தியானம் தேவையில்லை மூச்சைப் பிடிச்சு வயிறை இழுத்து சக்கரம் தேவையில்லை ஆன்மவித்தையே, ஐயே ரொம்ப சுலபமே! ஆன்மவித்தையே அது ரொம்ப சுலபமே இந்தப் பயிற்சி அந்தப் பயிற்சி யாவும் வீணப்பா உன் காசு மட்டும்தானே அங்கு விரைவில் விரயம்பா ஞானி சந்நிதி ஒன்று மட்டுமே என்றும் நிம்மதி உடன் உடன் அங்கு சரணம் உன்மதி ஆன்மவித்தையே, ஐயே ரொம்ப சுலபமே! ஆன்மவித்தையே அது ரொம்ப சுலபமே செடி இருந்தால் களை இருக்கும் இயற்கை விதியிலே நினைவிருந்தால் பதிவிருக்கும் ஜென்ம நதியிலே முழுசரணம் பதிவழித்தா ட்கொள்ளும் நொடியிலே 'தான்-தான்' ஒளிரும் "அது" மிளிரும் கதியிலே ரொம்ப சகஜமே "அது" ரொம்ப சகஜமே ரொம்ப சகஜமே, ரொம்ப ரொம்ப ரொம்ப சகஜமே Note-1: Tune is that of the yesteryear famous song 'manidhan enbavan dheivam aagalaam' Note-2: Written and sung in 2021.
|
Charanam Guruve Charanam சரணம் குருவே சரணம் |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
சரணம் குருவே சரணம் சரணம் திருவே சரணம் காணும் தெய்வம் குருவின் உருவம் ஞானம் ஆழம் குருவின் அருவம் குருகுலம் நுழைந்தால் குழந்தையின் இல்லம்! நினைவினில் கொஞ்ச அவரேநம் செல்லம்! பெரும்பாசக் கடல் அல்லவோ! நம்உடல் அவர்க்கே நன்மதி அவர்க்கே சுவாசமும் அவர்க்கே வாழ்வே அவர்க்கே பகல் இரவு அவர் துணையன்றோ! காணும் தெய்வம் குருவின் உருவம் ஞானம் ஆழம் குருவின் அருவம் சரணம் குருவே சரணம் சரணம் திருவே சரணம் அசலமும் அவரே! அசைவிலும் அவரே! பேச்சிலும் அவரே! மௌனமும் அவரே! பேருணர்வின் இருப்பல்லவோ! தாயும் அவரே! தந்தையும் அவரே! சேயும் அவரே! யாவும் அவரே! பேரிருப்பின் வடிவம் அன்றோ! காணும் தெய்வம் குருவின் உருவம் ஞானம் ஆழம் குருவின் அருவம் சரணம் குருவே சரணம் சரணம் திருவே சரணம் ஒவ்வொரு மொழியும் ஞானத்தின் பிழம்பு இடிபோல் முழங்கும் மரணத்தை முழுங்கும் பேரறிவின் செழுஞ்சுடர் அல்லோ! பிரபஞ்சமும் அவரே! பிரளயமும் அவரே! ஷக்தியும் அவரே! ஷிவமும் அவரே! உருவருவ அருவுருவன்றோ! காணும் தெய்வம் குருவின் உருவம் பிரம்மாண்ட ஞானம் குருவின் அருவம் சரணம் குருவே சரணம்... சரணம் திருவே சரணம்... பிரம்மாண்ட பாசம்... உருவே சரணம்..... பிரம்மாண்ட ஞானம்... அருவே சரணம்..... சரணம் சரணம்... திருவே சரணம்... சரணம் சரணம்... குருவே சரணம்... Note-1: Tune is that of the yesteryear famous song 'malare kurinji malare' Note-2: Written and sung in 2021.
|
Nam Satguru Mahimai நம் சத்குரு மஹிமை |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
நம் சத்குரு மஹிமை பிரபஞ்சம் முழுதும் சூழ காலம் என்ன தேசம் என்ன எந்நேரமும் எங்கெங்கிலும் ஒலிக்கும் ஜொலிக்கும் திகழும் நம் சத்குரு மஹிமை தேசம் என்ன காலம் என்ன எங்கெங்கிலும் எந்நேரமும் நம் சத்குரு..... அவர் பார்வையில் தாயின் அன்பில் அவர் குரலில் தந்தையின் கனிவில் அவர் பார்வையில் தாயின் அன்பில் அவர் குரலில் தந்தையின் கனிவில் 'நான்' பாவம் அற்று மறைந்திடுமே 'தான்' சொர்க்கம் முற்ற நிறைந்திடுமே 'நான்' பாவம் அற்று மறைந்திடுமே 'தான்' சொர்க்கம் முற்ற நிறைந்திடுமே வானுறை தேவரும் வியக்கும் இறையே "அது""தானே" நம் சத்குரு..... வெறும் பேச்சில் யார்க்கென்ன சுகம் அரும் பொக்கிஷம் உள்ளில் நிஜம் வெறும் பேச்சில் யார்க்கென்ன சுகம் அரும் பொக்கிஷம் உள்ளில் நிஜம் கடைந்துள்ளே நாமும் நிலைத்திடுவோம் வெளி உலகில் சகஜமாய் உலவிடுவோம் கடைந்துள்ளே நாமும் நிலைத்திடுவோம் வெளி உலகில் சகஜமாய் உலவிடுவோம் சுலபமே சுலபமே அதிசு லபமே ஆன்ம ஜெயம்! நம் சத்குரு..... நம் சத்குரு மஹிமை பிரபஞ்சம் முழுதும் சூழ காலம் என்ன தேசம் என்ன எந்நேரமும் எங்கெங்கிலும் ஒலிக்கும் ஜொலிக்கும் திகழும் நம் சத்குரு மஹிமை தேசம் என்ன காலம் என்ன எங்கெங்கிலும் எந்நேரமும் நம் சத்குரு..... Note-1: Tune is that of the yesteryear famous song 'oru vaanavil poalae' Note-2: Written and sung in 2021.
|
Anmaavinil adhu Kaadhal ஆன்மாவினில் அது காதல் |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
Important: The following song was not written by me but by my SatGuru Himself. He wrote it (in the way you find it below with all those "dot dot dot"s), sang it, sent it to me and asked me to sing it and send back to Him. Such a loving Satguru.
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்
அன்பினிலே அது வா..ழு…தல்…ல்
பேசாததில் தன்னில் ஓய்தல்…. இப்-
பிறவியிலே தன்னை அறிதல்….
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்
அன்பினிலே அது வா..ழு…தல்…ல்
பேசாததில் தன்னில் ஓய்தல்…. இப்-
பிறவியிலே தன்னை அறிதல்….
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்
நிலைமைகளில் ஆழுறக்கமோ…
நேரங்களில் பொய் நினைவுகளோ…..
ஒ..ஹோ.. ஹோ.. ஒ..
ஒ.. ஒ.. ஒ.. ஒ.. ஒ.. ஒ.. ஒ..
ஒ.. ஒ.. ஒ.. ஒ.. ஒ.. ஒ.. ஒ..
ஒ.. ஒ.. ஒ.. ஒ..
ஒ.. ஒ.. ஒ.. ஒ..
நிலைமைகளில் ஆழுறக்கமோ…
நேரங்களில் பொய் நினைவுகளோ….
காதலிலே தன்னுள் களிக்குமோ….
காதலிலே தன்னுள் களிக்குமோ…. உள்-
பார்த்தலிலே பரிபூரணமோ…..
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்
அன்பினிலே அது வா..ழு…தல்…ல்
பேசாததில் தன்னில் ஓய்தல்…. இப்-
பிறவியிலே தன்னை அறிதல்….
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்
வா..ன்போல் சிறப்பதில் தூய்..மை - அது
தா..னாய் மலர்வதே உண்..மை
வா..ன்போல் சிறப்பதில் தூய்..மை - அது
தா..னாய் மலர்வதே உண்..மை
கோன்போல் ஆள்வதில் நேர்…மை
கோன்போல் ஆள்வதில் நேர்மை - அதைக்
கொள்வது தானே நம் மே..ன்…மை
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்
அன்பினிலே அது வா..ழு…தல்…ல்
பேசாததில் தன்னில் ஓய்தல்…. இப்-
பிறவியிலே தன்னை அறிதல்….
ஆன்..மாவினில் அது கா..தல்…ல்"
Note-1: Tune is that of the yesteryear famous song 'kaalangalil aval vasandham'
Note-2: Sung in 2021.
|
Vigngnaani arivai Nambi விஞ்ஞானி அறிவை நம்பி |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
விஞ்ஞானி அறிவை நம்பி
அஞ்ஞானி தொடர்ந்திடுவான்
மெய்ஞ்ஞானி(நம் சத்குரு) அருளை அண்டி
செஞ்ஞானி மலர்ந்திடுவான்
(குரு)கண்களின் தளிர் ஒளியில்
(நம்)எண்ணங்கள் மறைந்திடுமே
வெண்ணிலவின் குளிர் நிழலில்
('தான்') தன்னாலே அலர்ந்திடுமே
சத்குரு அருள்மொழிகள்
சிரத்தையாய் எழுதி வைத்தால்
கிரஹிப்போர்க்கு கதி பிறக்கும்
('அது') மறுபிறப்பை நமக்கறுக்கும்
Note-1: Tune is that of the yesteryear song 'kannile anbirundhal'
Note-2: Written and sung in 2021.
|
Ninaivugal Padhivugal நினைவுகள் பதிவுகள் |
Click here to see the lyrics | s3tt | Watch the song in youtube |
நினைவுகள் பதிவுகள்
பதிவுகள் நினைவுகள்
சக்கரமாய் சுழலும் ஜென்மங்கள்
கோடியே உடல்கள் கோலங்கள்
இன்னுமா...... கிறக்கம்........
இனியுமா...... உறக்கம்........
ஒரு ஜென்மத்தில் தாயாய்
மறு ஜென்மத்தில் சேயாய்
வேறு ஜென்மத்தில் தந்தையாய்
ஒரு ஜென்மத்தில் அரசன்
மறு ஜென்மத்தில் அசுரன்
வேறு ஜென்மத்தில் பாமரன்
ஆடைகள் பலவிதம் வேடங்கள் பலவிதம்
ஆசைகளோ இன்னும் ஓங்குதே வேகம் கூடுதே
பொருள் ஒன்றுதான் மனிதா
இருள் போக்கிடும் அரும்தாய்
அருள் வேண்டியே ஏங்குவாய்
வரும் ஓடியே அதுவாய் ('அது'வாய்)
அள்ளி அணைத்திடும் முழுதாய்
மறுஜென்மமே நீங்குமே
ஈடில்லா பேரன்பில் முடிவிலா ஆனந்தமே
இதுவேண்டுமா அல்ல தொடர்ந்து கழிநீரில் ஊறணுமா?
பொய்யண்டக் கழிநீரில் ஊறணுமா?
Note-1: Tune is that of the yesteryear famous song 'uravugal thodarkadhai'
Note-2: Written and sung in 2021.
|
Maname un ellai enna? மனமே உன் எல்லை என்ன? |
Click here to see the lyrics | s2tt |
மனமே உன் எல்லை என்ன? நீ தாண்டா விஸ்தாரமென்ன? விண்வெளியும்! பிறப்பிறப்பும்! உந்தன் மாயாஜாலந்தானென்ன! மனம் என்றொன்றில்லை உடல் உயிர் இல்லை சத்தியமே இந்தக் கூற்று படைப்பென்றொன்றில்லை அழிவும்தான் இல்லை நித்தியமே ‘அதை’ப் போற்று நீர்க்குமிழ் கானல்நீர் போன்ற நிலையில் நீ அதை உணர்கையில் மனம் சாகையில் உடன் ஞானம் ஜ்வலிக்குமே! பிறப்பென்றொன்றில்லை இறப்பென்றும் இல்லை இரண்டுமே வெறும் நினைவு அண்டமென்றொன்றில்லை பிரபஞ்சமும் இல்லை ஒட்டுமொத்தம் பெரும் கனவு கனவிலும் அன்பினில் தோய்ந்து மூழ்கினால் அந்த அன்பினால் மனம் கரைந்திடும் நீ சத்சித் ஆனந்தமே! Note-1: Actually, I wrote the above song in 2022 or so. And, recently (in Feb 2025), I read the following in a book I have (titled "dhinam oru dhyaanam") under the heading "மாயாஜாலம்" 'உலகமே ஒரு மாயாஜாலம். ஆனால் இது மாயாஜாலம் என்பது மனிதனுக்குப் புரியவில்லையே என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்' என்பார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் - அன்னை ஸ்ரீசாரதாதேவி As one can observe, Consciousness being TRUTH, it tells the same thing# at all times. (#) i.e. Cosmos is just a magical stuff Note-2: Tune is that of the yesteryear song 'nenje un aasai enna?' Note-3: Sang the above song in 2023 or so.
|
Naanum illai Neeyum illai நானும் இல்லை நீயும் இல்லை |
Click here to see the lyrics | s3tt |
நானும் இல்லை நீயும் இல்லை
இந்த உலகம் இல்லை அண்டம் இல்லை
மாயம் எல்லாம் மாயம்
எனினும் சர்வம் பிரம்ம மயம்
வா வா மனிதா வா வா
குரு சன்னிதிக்கு நீ வா வா
நீயோ பாவம் உழல்கிறாய் உலகில்
'நான்' பாவம் கரைந்து மறைந்திடும் வரையில்
பிறப்பிறப்பு சுழல் அதே அண்டம் மீண்டும் மீண்டும்
குரு சன்னிதி வரும் வரையினில் தொடரும்
குருவின் பார்வை பெரிதும் தேவை
அவர் அருகாமை உன் பாக்கியம் மேன்மை
வா வா உடனே வா வா வா வா
குருவின் அருகில் இருந்ததை ('அதை') அடைந்திடு
நானும் இல்லை நீயும் இல்லை
இந்த உலகம் இல்லை அண்டம் இல்லை
மாயம் எல்லாம் மாயம்
எனினும் சர்வம் பிரம்ம மயம்
வா வா மனிதா வா வா
குரு சன்னிதிக்கு நீ வா வா
பிறந்தோம் வளர்ந்தோம் திருமணம் பிள்ளை
மூன்றாம் கால்-வரை பல்முனை தொல்லை
தொடரும் கதை இது விடிவுதான் எங்கு
குரு சன்னிதி வந்தால் அவிழ்ந்திடும் விலங்கு
சூரிய கதிரோ பூமி வரையிலும் (ஆனால்)
சூரியன் உள்ளே பூமி இல்லை (அதுபோல்)
ஆன்ம சக்தியும் பிரபஞ்சம் முழுவதும் (ஆனால்)
ஆன்மா உள்ளே பிரபஞ்சம் இல்லை
மாயம் எல்லாம் மாயம் மாயம்
எனினும் சர்வமும் ப்ரஹ்மத்தின் மயமே
நானும் இல்லை நீயும் இல்லை
இந்த உலகம் இல்லை அண்டம் இல்லை
மாயம் எல்லாம் மாயம்
எனினும் சர்வம் பிரம்ம மயம்
வா வா மனிதா வா வா
குரு சன்னிதிக்கு நீ வா வா
Beloved Baba Says:
“The Self-God” is within man. You are that Self; all else is illusion of the mind’s creation, the mind that creates, preserves and destroys.
அன்னை ஸ்ரீசாரதாதேவி:
'உலகமே ஒரு மாயாஜாலம். ஆனால் இது மாயாஜாலம் என்பது மனிதனுக்குப் புரியவில்லையே என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்' என்பார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்
Beloved Baba:
When you enter a cinema theatre, you find a white screen. Merely watching the screen does not satisfy you. Once the show commences, you find different scenes projected on the screen. Without the screen, can you see the picture? No. But, when the picture is projected, though the screen exists, it is not seen; it merges itself with the picture. The screen exists all the time - before, during, and after the show. The Vedas declare: “Antar bahischa tat sarva vyapya Narayana stitaha (That all-pervasive God is present within and without).” As the screen is to the picture, so is the Atma to the creation. The screen of Atma is present within and around all beings and is the primordial basis for the entire creation. Therefore, it is said, Sarvam Vishnumayam Jagat (Divinity pervades everywhere). Divinity is present in the “picture”, around the “picture”. So, who can know the form of such a Divinity? On the screen of Love, you find the picture of the universe. This Love is present in the name of Atma in all beings.
Note-1:
'vaa vaa manidhaa vaa vaa' was originally 'vaadaa raajaa vaa vaa'. My anna told me (after reading the original) that instead of 'vaadaa raajaa vaa vaa', it could have been some other apt words. So, I changed the line to 'vaa vaa manidhaa vaa vaa'. But, in my rendering it is still 'vaadaa raajaa vaa vaa' only. I shall render the song again with the changed words, when time permits. I sang this song in 2024. I wrote it some time in 2022 or so.
Note-2: Actually, I wrote the above song in 2022 or so. Sang it in 2024.
|
Paaru Maname Paaru பாரு மனமே பாரு |
Click here to see the lyrics | s3tt |
பாரு மனமே பாரு
உள்ளின் இண்டு இடுக்கெல்லாம் பாரு
ஆசை ஓசை எதுவும் கேட்டால்
பாசக்கயிறை வீசு (அதன் மேல்)
பாசக்கயிறை வீசு
எண்ணத்தில் பின்னி புத்தியில் சிக்கி
ஜென்மத்தில் சுழலும் மனிதா!
இந்தத் தொடரும் கதைக்கு 'முற்றும்' சொல்ல
உத்தேசம் உனக்கு இல்லையா!
உள்ளத்தில் தூய்மை பொன்னாகும்
அது உண்மையின் பாதைக்குக் கண்ணாகும்
இதைப் புரிந்த மனக் கண்ணாடியின் மேலே
அழுக்கு எப்படி உட்காரும்?
எங்கிருந்து வந்து குடியேறும்?
ஆயிரம் அழுக்கு உள்ளத்தில் இருக்க
கோயில்கள் குளங்கள் எதற்கு
சும்மா இருத்தல் மட்டுமே போதுமே (நாளும்)
மாற்று மருந்து அதற்கு
வாசனை யாவும் ஓடிவிடும்
உனைக் கண்டாலே பயந்து ஒளிந்திடும்
எஞ்சும் 'தான்'-இன் தூய்மையே பேருணர்வும்
பேரறிவில் நின்ற பேரிருப்பும்
அன்பில் ஒடுங்கும் சத்தியமும்
{
சும்மா இருத்தல் - to practise being 'just be' (without thoughts), relaxedly and naturally - 24*7; To start with, for half an hour daily - just after getting up in the morning and just before going to sleep - prefarably sitting; if not, lying down (but remaining alert not to fall asleep)
'தான்' - Atma, the true SELF, Brahmam (as opposed to the false feeling that this 'body-mind-breath-intelligence-bliss' bundle is true)
'நான்' பாவம் (bhaavam) - the wrong idea (for jenmas and jenmas and jenmas) that one's body/mind/etc. is real.
பேரிருப்பு பேரறிவு பேருணர்வு - SatChitAnanda
}
Note-1: Tune is that of the yesteryear famous song 'ஆறு மனமே ஆறு' (aaRu maname aaRu)
Note-2: Written and sung in 2021.
|
unmai Thalluraan Poyya alluraan உண்மை தள்ளுறான் பொய்ய அள்ளுறான் |
Click here to see the lyrics | s3tt |
உண்மை தள்ளுறான் பொய்ய அள்ளுறான் அண்டசராசர சகதியிலே ஜென்ம ஜென்மமாய் மயங்கி அணங்குறான் ஊறிப்போன 'நான்' பாவத்திலே பிறந்து இறக்கிறான் இறந்து பிறக்கிறான் எண்ணம் உணர்ச்சியில் வாடுறான் அறிந்தும் மறுக்கிறான் புரிந்தும் மறக்கிறான் ஞானி சொல்வதை ஏனடா செஞ்ஞானி சொல்வதை ஏனடா மூச்சுப் பயிற்சிகள் தியான உயர்ச்சிகள் யாவும் இறுதியில் வீணடா 'தான்'-இல் தங்கி நீ இறையில் மூழ்கவே சும்மா இருத்தலே போதுண்டா அட சும்மா இருத்தலே போதுண்டா கனவு உலகிது புரிந்து உணர்ந்திடு ப்ரம்மம் ஒன்றுதான் மெய்யடா உள்ளில் திரும்பிடு புறத்தை உதறிடு ஜென்மம் அறுத்திடு மானிடா மறு ஜென்மம் அறுத்திடு மானிடா Note-1: Tune is that of the yesteryear famous song 'annan ennadaa thambi ennadaa' Note-2: I wrote the above song in 2022 or so. Sang it in 2024.
|
Bavaththai Nambaadhe பவத்தை நம்பாதே |
Click here to see the lyrics | s3tt |
பவத்தை நம்பாதே மோசம் போவாய் குருபதத்தை நம்புநீ மோக்ஷம் நேராய் எத்தனையோ ஜென்மம் எடுத்தாய் நீ எத்தனையோ உடலில் உழன்றாய் நீ (ஆனால்) குரு சன்னிதிக்கு வந்து விட்டாலோ மரணத்துக்கே மரண அடி காலையில் நீ எழுந்ததுமே கோடி கோடி எண்ணம் ஒரு எண்ணம் போக மறு எண்ணம் வந்து குடிபுகுவது திண்ணம் அப்பாடி அம்மாடி முடியலையே சாமி அம்மாடி அப்பாடி தாங்கலையே சாமி உனைத் துரத்தி துரத்தி துரத்தி அடிக்கும் நினைவுகளின் தொடர் சரவெடி பவத்தை நம்பாதே மோசம் போவாய் குருபதத்தை நம்புநீ மோக்ஷம் நேராய் எத்தனையோ ஜென்மம் எடுத்தாய் நீ எத்தனையோ உடலில் உழன்றாய் நீ (ஆனால்) குரு சன்னிதிக்கு வந்து விட்டாலோ மரணத்துக்கே மரண அடி பாலையிலே "தண்ணி காட்டும்" கானல் நீரைப் போல தோன்றி மறையும் எண்ணம் எதிலும் உண்மை துளியும் இல்ல வானம் போல தெரியும் யாவும் உண்மையில் உன் எண்ணம் நட்சத்திரக் கூட்டம் எல்லாம் மாயாஜால வர்ணம் அட சூரியன் இல்ல சந்திரன் இல்ல 'தான்' தவிர வேறெதும் இல்ல பவத்தை நம்பாதே மோசம் போவாய் குருபதத்தை நம்புநீ மோக்ஷம் நேராய் எத்தனையோ ஜென்மம் எடுத்தாய் நீ எத்தனையோ உடலில் உழன்றாய் நீ (ஆனால்) குரு சன்னிதிக்கு வந்து விட்டாலோ மரணத்துக்கே மரண அடி Note-1: Tune is that of the yesteryear famous song 'chiththiraich chevvaanam' Note-2: "தண்ணி காட்டும்" - showing the presence of water "தண்ணி காட்டும்" - deceiving as though water is present Note-3: I wrote the above song in 2022 or so. Sang it in 2024.
|
Sagajaththai Marandhadhum Enoa சகஜத்தை மறந்ததும் ஏனோ? |
Click here to see the lyrics | s3tt |
சகஜத்தை மறந்ததும் ஏனோ?
வீண் பிறப்பிலும் தவிப்பதும் ஏனோ?
அட ஜென்ம ஜென்ம ஜென்மமாய்
உலகினை நம்பி நீ வாடி வதங்குவதேனோ?
'நான்'-ஐ அறுத்து 'தான்'தனில் நிலைத்து
அன்பில் திளைத்து ஆனந்தம் களித்து
மறுஜென்மம் அதை அடியோடறுத்து
சுயமதில் ஒளிர் விடலாமே
அதற்கு தாபமே உனக்கிலையாமே
அட ஜென்ம ஜென்ம ஜென்மமாய்
உலகினை நம்பி நீ வாடி வதங்குவதேனோ?
உன்னின் சத்குரு உள்ளிலே இருக்க
புறத்தில் எதைத்தான் தேடுகின்றாயோ
மறத்துப் போன இதயங்கள் தானோ
அன்பையே மறந்ததும் ஏனோ?
அதற்கு பதிவுகள் காரணமாமோ?
அட ஜென்ம ஜென்ம ஜென்மமாய்
உலகினை நம்பி நீ வாடி வதங்குவதேனோ?
Note-1: Tune is that of the yesteryear famous song 'vaadikkai marandhadhum aeno?'
Note-2: பதிவுகள் - past registrations, carried over from jenma to jenma to jenma [lakhs of them]
Note-3: I wrote the above song in 2022 or so. Sang it in 2024.
|
sa-ri-ga-ma-pa-dha-ni-sa சரிகமபதநிஸ |
Click here to see the lyrics | s3tt |
சரிகமபதநிஸ
சரிகமபதநிஸ
குருவிடம் சரண் என்றால்
நம் வாழ்வே சங்கீதம்
குருவிடம் சரண் என்றால்
பின் வாழ்வே சங்கீதம்
குருவிடம் சரண் என்றால்
பின் இறை அரண் வாஸ்தவம்
ஹேஹே
குருவிடம் சரண் என்றால்
பின் இறை அரண் வாஸ்தவம்
சரிகமபதநிஸ
நம் வாழ்வே சங்கீதம்
தென்றல் வருடும் சுகம் போல
குருவின் உளத்தில் நம்உளம் தோய
காலமும் தேசமும் அங்கு கொஞ்சமும் இல்லையே
அண்டமும் பிரபஞ்சமும் அங்கு கெஞ்சியும் இல்லையே
குருவின் ஞானத்தில் அடங்கி பாசத்தில் கரைந்து
'நான்'-இன் பாவம் அழியும், 'தான்'-ஏ வழியும்
சரிகமபதநிஸ
சரிகமபதநிஸ
சரிகமபதநிஸ
நம் வாழ்வே சங்கீதம்
குருவிடம் சரண் என்றால்
நம் வாழ்வே சங்கீதம்
குருவிடம் சரண் என்றால்
பின் வாழ்வே சங்கீதம்
குருவிடம் சரண் என்றால்
பின் இறை அரண் வாஸ்தவம்
ஹேஹே
குருவிடம் சரண் என்றால்
பின் இறை அரண் வாஸ்தவம்
சரிகமபதநிஸ
நம் வாழ்வே சங்கீதம்
காந்தத்தைப் போல குரு இருக்க (தன்னுள்)
ஈர்த்திடுவார் நம்மை விட மாட்டார்
கருணையின் தாண்டவம் அவர் பூந்தளிர் கண்ணிலே
அருளிடும் ஆண்டவன் அவர் புரிந்தவர் நெஞ்சிலே
நம் தாபமும் பெருக பெருக்கெடுத்தோட
குருவைப் போல நாமும் இறையில் ஒன்றாய்
சரிகமபதநிஸ சரிகமபதநிஸ
சரிகமபதநிஸ என பாடுவோம் ஜாலியாய்
குருவிடம் சரண் என்றால்
நம் வாழ்வே சங்கீதம்
குருவிடம் சரண் என்றால்
பின் இறை அரண் வாஸ்தவம்
ஹேஹே
குருவிடம் சரண் என்றால்
பின் இறை அரண் வாஸ்தவம்
சரிகமபதநிஸ நம் வாழ்வே சங்கீதம்
Note-1: Tune is that of the yesteryear famous song 'pani vizhum malarvanam'
Note-2: I wrote the above song in 2022 or so. Sang it in 2024.
|
ulagaththai Nambadhe உலகத்தை நம்பாதே... |
Click here to see the lyrics | s3tt |
உலகத்தை நம்பாதே... வெற்றிக் கொடி கட்ட நினைக்காதே
நொடியினில் மரணப்பா உன் வெற்றியெல்லாம் கரணமப்பா
சுட்டறிவு கால் தூசு உன் புகழோ குப்ப மேல குப்ப மேடு
மனிதா!
அல்பங்களை தூக்கி வீசு உண்மய உள்ளுக்குள்ள நீ தேடு
நேரங்கள் மாறுதே கணமும் உன் மனமோ மாறலையே அணுவும்
காலங்கள் போகுதே தினமும் 'நான்' பாவமோ போகலையே அணுவும்
எண்ணங்கள் தள்ளியே சும்மா இருந்தால்
'தான்' தானாக ஓடி வந்து தாய்போல் அரவணைக்கும்
சொந்தமென்ன பந்தமென்னப்பா 'தான்'-இன் அன்பின் முன்னால் ஒண்ணுமில்லப்பா
மனிதா!
நண்பன் என்ன தொண்டன் என்னப்பா 'தான்'-இன் பணிவிற்கு ஈடு ஏதப்பா
பேரிருப்பு பேரறிவு பேருணர்வு 'தான்' பணிவன்பின் வெளிப்பாடு தானேப்பா
பேருணர்வு பேரிருப்பு பேரறிவு 'தான்' பணிவன்பின் வெளிப்பாடு தானேப்பா
இந்த சூக்ஷமம் புரிந்து அன்பில் நிறைந்தால்
அந்த அன்பே 'நான்'-ஐ மறைத்து 'தான்'-இன் உள் அழைத்துச் செல்லும்
பூரண அன்பே 'நான்'-ஐ மறைத்து 'தான்'-இன் உள் அழைத்துச் செல்லும்
{
பேரிருப்பு பேரறிவு பேருணர்வு - SatChitAnanda
'நான்' பாவம் (bhaavam) - the wrong idea (for jenmas and jenmas and jenmas) that one's body/mind/etc. is real.
}
Note-1: Tune is that of the yesteryear famous song 'aerikkarai poongaatre'
Note-2: I wrote the above song in 2022 or so. Sang it in 2024.
|
Jenma Jenmamaai Pirandhoam irandhoam ஜென்ம ஜென்மமாய் பிறந்தோம் இறந்தோம் நாம் |
Click here to see the lyrics | s3st |
ஜென்ம ஜென்மமாய் பிறந்தோம் இறந்தோம் நாம் இறைவனை அடைந்தோமா சொல் வெட்கக்கேடு மானக்கேடு வேறென்ன நான் சொல்ல நீயே சொல்லு அட வெட்கக்கேடு மானக்கேடு வேறென்ன நான் சொல்ல நீயே சொல்லு அட வேறென்ன நான் சொல்ல நீயே சொல்லு நாமத்தின் அருமையை அறிந்தும் நாமும் சொல்லாமல் இருப்பது எவ்விதத்தில் தர்மம் ஜெய ஜெய ஜெய ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய் ஜெய ஜெய ஜெய ராமா ஜெய் சொல்லுங்களேன் சொல்லுங்களேன் உண்ணாமல் ஓயாமல் சொல்லுங்களேன் நாமம் ஓயாது உறங்காது சொல்லுங்களேன் நாமத்தின் அருமையை அறிந்தும் நாமும் சொல்லாமல் இருப்பது எவ்விதத்தில் தர்மம் Note-1: Written and sung the above song in 2024. Note-2: The tune is based on this melting Odiya(Oriya) song here. I wrote as follows (as can be found here) and later on emailed the same to 'Media Group-SSSSO Odisha' at [email protected]. They replied lovingly too. -- "Pranasakha Bhagwan" (https://www.youtube.com/watch?v=sCrarHHx5p0) Sairam..... Jai Sairam..... Thanks a TONNNN.............. (infinitely, eternally) to our Beloved Swami for making me see/hear/read/drench in the abovementioned utmostly beautiful Divine song on the limitlessly eternally Supreme LOVE of our Beloved Swami, whose Compassion and Grace are unmatched. It was just just our Swami's sheer Grace## because of which I was able to see/hear/read this Divine song today morning. Sairam Sairam Sairam...................................................................................... Thanks a TONNNNNNN (infinitely, eternally) to you, SSSBG Odisha, for being the chosen instruments of our Beloved Swami in bringing out this eternally imperishable Divine song on the Glory of the unmatched LOVE of our Beloved Swami. Sairam Sairam Sairam...................................................................................... God Bless you! God Bless all! (##) Today morning, I went into youtube to see one other Divine song on our Beloved Swami. And, as the other song (Sri Sayeeshwaram - Sairam Sairam Sairam - 98th Birthday theme song, if I remember right) of our Beloved Swami completed, "Pranasakha Bhagwan" song got played next, automatically. As soon as the song started itself, my heart started melting. It continued to melt melt melt....................................................................... me, making me shed tears. Thank you eternally, Beloved Swami. Thank you eternally, SSSBG Odisha. Whaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaat a Divine song! - soulful lyrics, soulful music, soulful rendering and.......................... the unmatched beautiful moments of Swami with His endearing devotees - everything everything everything about this Divine song is so so so so so so soulful. Thank you, thank you, thank you, once again, Beloved Swami and SSSBG odisha. Sairam Sairam Sairam...................................................................................... "Love ALL Serve ALL" Love is God . Humility is Power Humility is God . Love is Power Lovingly and Most Humbly Yours viswanathan --
|
aridhe aridhe! Maanidap Piravi aridhe! அரிதே அரிதே! மானிடப் பிறவி அரிதே! |
Click here to see the lyrics | s3mt |
அரிதே அரிதே! மானிடப் பிறவி அரிதே! ஞானம் அடையாது இதை வீணடிப்பது கொடிதே! ஏனோ ஏனோ இந்த மனிதன் இதை அறிந்தும் வருகிறான் வாழ்கிறான் போகிறான் Note-1: Though such a short song, this song is packed with emotions, personally for me. It makes me feel soooo much. Note-2: Written, tuned and sung the above song in 2024.
|
eppa vidudhalaiyo? எப்ப விடுதலையோ? முருகா.................. |
Click here to see the lyrics | s3mt |
எப்ப விடுதலையோ? முருகா.................. (எனக்கு) எப்ப விடுதலையோ? பிரபஞ்சம் யாவும் பொய்யென அறிந்தும் உழலத்தான் வேண்டி உளதே தினமும் எப்ப விடுதலையோ? முருகா.................. (எனக்கு) எப்ப விடுதலையோ? எண்ணம் உணர்ச்சி பொய்யென புரிந்தும் உழலத்தான் வேண்டி உளதே தினமும் எப்ப விடுதலையோ? முருகா.................. (எனக்கு) எப்ப விடுதலையோ? புத்தி சுவாசம் பொய்யென தெரிந்தும் உழலத்தான் வேண்டி உளதே தினமும் எப்ப விடுதலையோ? முருகா.................. (எனக்கு) எப்ப விடுதலையோ? கர்த்தா நான் இல்லை நன்கே உணர்ந்தும் உழலத்தான் வேண்டி உளதே தினமும் எப்ப விடுதலையோ? முருகா.................. (எனக்கு) எப்ப விடுதலையோ? Note-1: I love this song very much. I believe all sincere seekers exhibit same or similar kinds of feelings. Sairam..... Note-2: Written, tuned and sung the above song in 2021.
Related pages - other azhagi.com pages which are closely related with this page, in one or other way.
First finalised on - date on which this web page got finalised first; more songs will get added in future.