face
Joining Azhagi Facebook Group . Posting in it thereafter
Related pages: contacts.azhagi.com, helptips.html, testimonials.azhagi.com
In case you have already joined the group, then kindly ignore steps 3, 4 and 5 below.


The process of joining 'Azhagi Facebook Group' and posting your testimonials/queries therein
In case you have already joined the group, then kindly ignore steps 3, 4 and 5 below.
- Log into your facebook account, if not already logged in.
- Visit https://www.facebook.com/groups/Azhagi
- Click the 'Join Group' button in the right side bottom of the Cover Photo (top banner) of the group.
- I will approve you once I see your JOIN request. Kindly wait until I see your request and approve you.
- After I approve, your membership of the group is confirmed. The 'Join Group' button will turn to an '+ Invite' button.
- Thereafter, you can make a post by clicking on 'Create a public post' space (which you can see under the 'About' link, under the cover photo), composing your post and finally clicking the 'Post' button. Alternatively, you can also write an email to Azhagi@groups.facebook.com with your testimonials/queries. But, I remember an user telling me in the past that this method does not work. So, only if you feel that you have no problems, try this alternate method. Otherwise not.
Note: Apart from posting your testimonials/queries as explained above, you may also try emailing your testimonials/queries to me at NobleHearted @ gmail dot com. You can get to see my email id if you click on the menu item 'Help->About Azhagi+' (in Azhagi+ application) too. - Once I see your post, I will reply to the same, mostly in Azhagi Facebook Group itself. But, sometimes, I might reply to you in Facebook Messenger too. Or, sometimes, I may opt to reply via Email too, in case you sent your testimonial/query via Email too (additionally, apart from posting it in the group).
- My response time may vary anywhere between 10 minutes to 1 hour to even 1 or 2 days, depending on my situation.
- If you wish to receive the notification on my reply, then please read my 'Note:' below and act accordingly. Also, to read one or more replies of mine to your query, kindly carefully look under your post to read ALL the comments under it (both mine and other members', if any). You may have to click on 'View X more comments' link if there are more comments and facebook shows only the last 2 or 3 comments.
- If you are in an urgency to receive my reply at the earliest, then email me your testimonials/query with basic details of yourself - who are you, what are you, your mobile no. (if you have no problems in sharing it; otherwise, I do not need this detail), for how many years you have been using Azhagi/Azhagi+, for what uses you have been employing Azhagi for (esp. if you are using Azhagi for spiritual/societal works, I would be immensely happy to hear about them. That's the primary purpose for which I wish to hear this detail from you). If you give me as many supporting technical details (e.g. your operating system) as possible along with your query, it will help me to reply you at the earliest. https://azhagi.com/helptips.html#details lists all the technical details I require you to send me so that it will be of help to me.
Note: If you do not have a facebook account OR even while having a facebook account, if you do not want to POST in the group because of certain reasons (privacy issues, etc.), then kindly please mention those reasons along with the details requested by me above and send me your query, both to my Email and Facebook Messenger (if you have facebook account). If you have a facebook account but do not know how to use Facebook Messenger, then mention the same and send your query to my Email alone. Thanks.


A very humble request: Kindly please do NOT post your first testimonial/query (or stand-alone testimonials/queries, later on) as a comment for some other post (whether it is a related post or not). Always please post your testimonials/queries as a separate post. An example for a separate post can be seen here and here. When you post your query as a separate post, my answer to it will serve as the answer to all those who have the same question in their minds and thus impart lots of goodness to the society. Similiarly, when you post your testimonial as a separate post, it will encourage and enthuse others a lot. It will help them to know more about the potential/benefits of Azhagi apps and share those information with many others so that more and more of the society get benefited. Thanks.


அழகி Facebook குழுமத்தில் இணைந்து பின்னர் அதில் உங்கள் கருத்தை/கேள்வியைப் Post செய்வது எப்படி?
- ஏற்கெனவே உள்நுழைந்திருக்காவிடில், உங்கள் Facebook கணக்கில் உள்நுழையுங்கள்.
- https://www.facebook.com/groups/Azhagi க்குச் செல்லுங்கள்
- குழுவின் மேல் பேனரின் (Cover Photo) கீழே, வலது பக்கத்தில் உள்ள 'Join Group' பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் JOIN கோரிக்கையைப் பார்த்தவுடன் நான் உங்கள் கோரிக்கையை ஒப்புக்கொள்வேன். நான் பார்த்து ஒப்புதல் அளிக்கும் வரை, சற்றே பொறுமையாக இருங்கள்.
- நான் ஒப்புதல் அளித்த பிறகு, குழுவில் உங்கள் உறுப்புரிமை (membership) உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாகி விடும்.
- அதன் பிறகு நீங்கள் https://www.facebook.com/groups/Azhagi சென்றீர்கள் என்றால், Cover Photo வின் கீழே, வலது அல்லது இடது பக்கத்தில் '+ Invite' என்று ஒரு பட்டனைக் காணப் பெறுவீர்கள். அதன் அடிப்பகுதியிலேயே , 'About' லிங்கின் கீழே, 'Create a public post' என்று எழுதப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்து அங்கே உங்கள் கருத்தை/கேள்வியை எழுதி 'Post' பட்டனைக் கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் ஒரு புது இடுகையை (New Post ஐ) 'Azhagi' முகநூல் குழுமத்தில் உடன் உருவாக்கலாம்.
குறிப்பு: மேற்கூறிய முறையில் உங்கள் கருத்தை/கேள்வியைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக, உங்கள் கருத்தை/கேள்வியை என் மின்னஞ்சலுக்கும் (NobleHearted @ gmail dot com) அனுப்பி வைத்தால் நலமாய் அமையும். என்னுடைய மின்னஞ்சலை நீங்கள் அழகி+இன் 'Help->About Azhagi+' செயலியின் மெனு ஐடத்தை க்ளிக் செய்வதின் மூலமும் அறியப் பெறலாம்.
மிகவும் பணிவான ஒரு வேண்டுகோள்:: தயவு செய்து உங்கள் முதற்முதல் கேள்விகளை/கருத்துக்களை (மற்றும் பின்னர் எழுத முற்படும் தனித்து நிற்கக் கூடிய [stand-alone] கேள்விகளையும்/கருத்துக்களையும் கூட) ஒரு புது Postஆக இடுங்கள். ஏற்கெனவே உள்ள ஒரு Postஇற்கு Commentஆக அவற்றை இடாதீர்கள். புது இடுகைக்கான மாதிரிகள் இங்கே மற்றும் இங்கே. புது இடுகையாக ஒரு கேள்வியை நீங்கள் Post செய்கையில், அதற்கான எனது பதிலானது உங்கள் கேள்வியையே தங்கள் மனதிலும் தாங்கி நிற்கும் பற்பலருக்கும் பதிலாய் அமைந்து பெரும் நன்மை பயக்கும். புது இடுகையாக உங்கள் நன்றியை/பாராட்டைத் தாங்கிய ஒரு கருத்தை நீங்கள் Post செய்கையில், அது, அதைப் படிக்கும் பலருக்கும் உத்வேகமாய்/உற்சாகமாய் அமையும். அழகியின் ஆற்றல்/பயன் குறித்து அவர்கள் மேலும் அறிந்து கொள்ள, அதை மற்ற பலருக்கும் எடுத்தியம்பி அவர்களும் அது மூலம் பயன்பெற, ஏதுவாய் அமையும். நன்றி.
- உங்கள் இடுகையை(Post-ஐ)க் கண்டவுடன், நான் அதற்கு 'Azhagi' ஃபேஸ்புக் குழுமத்திலேயே பதிலளிப்பேன். சில நேரங்களில், உங்கள் Facebook Messengerஇலும் அதற்கு பதில் அளிப்பேன். நீங்கள் உங்கள் கருத்தை/கேள்வியை என் மின்னஞ்சலுக்கும் அனுப்பியிருந்தால், சில நேரங்களில், Email-இலேயே கூட உங்களுக்குப் பதில் அளித்து விடுவேன்.
- என்னுடைய பதிலானது பத்து நிமிடத்திற்குள்ளாகவும் வரலாம்; ஒரு மணி நேரம் கழித்தும் வரலாம். என் நிலைமையைப் பொறுத்து, சில நேரங்களில், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகும் வரலாம்.
- நான் பதில் அளித்தபிறகு, என் பதிலுக்கான NOTIFICATION உங்களை வந்தடைய வேண்டுமெனில், கீழே "கவனிக்க:" என்பதின் கீழ் நான் எழுதியுள்ளதைப் படித்து, அதன்படி நடக்கவும்.. மேலும், உங்கள் கேள்விக்கான விடை 'ஒன்றுக்கும் மேலான' பதில்களாக (Commentsஆக) இருக்கலாம். எனவே, கவனம் செலுத்தி, 'View X more comments' என்று பார்க்க நேரிட்டால், அதைக் க்ளிக் செய்து, எல்லா Commentsஐயும் படிக்கவும்.
- உங்களுக்கு உடன் பதில் கிடைக்க வேண்டுமென்ற நெருக்கடி நிலைமை எனில் , நீங்கள் யார், எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், அலைபேசி எண் என்ன (பகிர்வதில் உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை என்னும் பட்சத்தில்; இல்லையென்றால், இத்தகவல் எனக்குத் தேவையில்லை), எத்தனை வருடங்களாக அழகியைப் பயன்படுத்துகிறீர்கள், எப்பணிகளுக்கெல்லாம் அழகியைப் பயன்படுத்துகிறீர்கள் (குறிப்பாக, ஆன்மீகம் மற்றும் சமூக நலன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அழகியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அது குறித்து அறிய என்றுமே எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்காகவே குறிப்பாக இத்தகவலைக் கேட்கிறேன்) என்கிற அடிப்படைத் தகவல்களுடன், உங்கள் கேள்வியை என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். எத்தனை விவரங்கள் தர முடியுமோ அத்தனை விவரங்கள் தந்தால்தான் என்னால் துரிதமாய் பதில் அளிக்க இயலும். https://azhagi.com/helptips.html#details பகுதியில் எவ்வகை விவரங்களையெல்லாம் எனக்கு நீங்கள் தெரியப்படுத்தினால் உதவியாய் இருக்கும் என்று பட்டியலிட்டுள்ளேன். பார்க்கவும்.
குறிப்பு: உங்களுக்கு முகநூல் கணக்கு இல்லை என்றாலோ (அல்லது) முகநூல் கணக்கு இருந்தும், சில காரணங்களால் (Privacy issue, etc.) முகநூலில் Post செய்ய முடியாத நிலைமை என்றாலோ, அக்காரணங்களைத் தெரிவித்து, மேலே நான் கேட்டிருக்கும் தகவல்களையும் பகிர்ந்து, எனக்கு உங்கள் கேள்வியை மின்னஞ்சல் ( மற்றும்) Facebook Messengerஇல் (முகநூல் கணக்கு இருப்பின்) அனுப்பவும். Facebook Messenger பயன்படுத்தத் தெரியாத நிலை எனில், அதனைத் தெரிவித்து, மின்னஞ்சலுக்கு மட்டும் உங்கள் கேள்வியை அனுப்பவும். நன்றி.


