Visit Azhagi's Facebook Group.

If possible, kindly please join the group so that I can answer all your queries therein. This is a very humble request from me, the author of Azhagi/Azhagi+.   My 100% free support             100+ Video Demos             Service to humanity   Visit Azhagi's Facebook Group.

If possible, kindly please join the group so that I can answer all your queries therein. This is a very humble request from me, viswanathan, the author of Azhagi/Azhagi+. Please remember - My support is 100% free. Ever.

thumb_up

பயனாளர்களின் பாராட்டுரைகள்
(ஒரு சில மாதிரி பாராட்டுரைகள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன)

Note: Testimonials in English - here | Testimonials for Azhagi Android App - HERE

'அழகி', உலகெங்குமிருந்து பல பாராட்டு மடல்களைப் பெற்றுள்ளது, பெற்று வருகிறது - அதன் எளிமையுடன் கூடிய பெரும் 'பயன்' குறித்து. அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு, கீழே. எல்லாவற்றுக்கும் கர்த்தா/காரணம் இறைவன் ஒருவனே. ஒரே இறைவனே. இறைவனுக்கு நன்றி. இறைவனுக்கே நன்றி.

அழகியைக் குறித்து நீங்களும் எதுவும் சொல்ல விழைந்தால், அதை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மிக்க பணிவன்புடன், விஸ்வநாதன்.பா


 • திரு. அன்பு, சென்னை
  தங்களின் அழகி தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தி நான் அடைந்த நன்மைக்குக் கைம்மாறு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்றாலும், எங்க அம்மா நினைவாக, அவர்களின் நினைவு நாளில், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், ஏழைகளுக்கு மதிய உணவு அளிப்பேன். அந்த சமயத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நினைப்பேன்.

  இதை நான் யாரிடமும் கூறியதில்லை, என் மனைவியிடம் கூட கூறியதில்லை. இந்த மின்னஞ்சல் மூலமாக ஏன் கூறுகிறேன் என்றால், இந்த மின்னஞ்சல், வானில் கலந்து, இறைவனை அடைந்து, எங்க அம்மாவைச் சந்தித்து, பின் உங்களை வந்தடையும்.

  நாம் அன்பு செய்யவே பிறந்தோம். கைகளால் தொடக்கூடிய, கண்களால் பார்க்கக்கூடிய மனிதனையே நேசிக்க முடியாதபோது கைகளால் தொடமுடியாத, கண்களால் பார்க்கமுடியாத இறைவனை நேசிக்க முடியுமா? நாம் அன்பு செய்யவே பிறந்தோம்.

  நன்றி. உங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் போல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 • திரு. வரகூரான் நாராயணன், சென்னை
  கிட்டத்தட்ட 1000 {பெரியவா}கட்டுரைகள் - அழகி மூலம் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது - 2011 முதல் இன்று வரை.

 • திரு. பரமசிவன் ஈஸ்வரன்
  ​எனக்கு லேப்டாப் யூஸ் பண்ணத் தெரிஞ்சப்ப இருந்து அழகி+ யூஸ் பண்ணிட்டிருக்கேன்.

  ஏன்னா, இதோட பொனெடிக் ட்ரான்ஸ்லேஷன் feature-க்கு நிகரா எந்த ஒரு PC/Android software-உம் கொடுக்கறதில்லை.

 • திரு. முத்துவேல், நெய்வேலி
  ஐயா,

  அற்புதமான படைப்பு.

  தமிழுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் பல வடிவங்கள் கொடுத்து வளர்த்ததுபோல் நவீன யுகத்தில் தங்கள் அர்ப்பணிப்பு வரலாற்று குறிப்பில் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி.

  முனைவர் பட்ட ஆய்வாளனான எனக்கு இதைவிட பெரிய வரப்பிரசாதம் வேறு எதுவும் இல்லை.

  சுருக்கமாகச் சொன்னால், புகுந்து விளையாடுகிறேன்.

  நன்றிகள் பல துணைவியாருக்கும்.

 • திரு. முத்துசாமி, ஈரோடு
  வணக்கம். அழகி+ இல் உள்ள வசதிகள் வேறு எந்த மென்பொருளிலும் இல்லை. பணம் செலுத்தி பயன்படுத்தும் மென்பொருட்களிலும் இந்த வசதிகள் இல்லை. நானும் நிறைய மென்பொருட்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டேன். அழகிக்கு நிகர் அழகிதான். அழகி சார் உழைப்பு அனைவருக்கும் பயன்படவேண்டும். நீங்கள் பயன்படுத்துவதுடன் அல்லாமல் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்கள் அருகில் பள்ளி கல்லூரிகள் இருந்தால் அவர்களிடமும் அழகி மென்பொருளைப் பற்றி தெரிவித்து அழகி+ மென்பொருளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் குறைந்த பட்சம் ஒருவருக்கு 10 பேரையாவது அழகி user-ஆக உருவாக்க வேண்டும். நன்றி.

 • திரு. ஹரிஹரன் உதயஷங்கர், சென்னை
  மிக எளிய ஆனால் வலிய சாதனம், அழகி.

  உங்களுக்கு விருப்பமான fontல், விருப்பமான keyboard layoutல் type செய்யலாம்.

  இது அழகியின் தனித்துவமான பயன்பாடு.

  வாழ்க வளர்க அழகி.

 • திரு. சரவணகுமார், ஈரோடு
  எனக்கு உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியவில்லை Viswanathan Balasubramanian.

  எனக்கு அழகி Software ஐ கிட்டத்தட்ட 8 வருசத்துக்கு முன்னமே தெரியும்.

  காசு குடுத்து வாங்குற Software தான் மக்களுக்காக பாத்து பாத்து வடிவமைக்கப்பட்டிருக்கும். மத்தது ஏதோ சாதாரணமாகத்தான் இருக்கும்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, என்னுடைய நினைப்பு எவ்வளவு தவறு என்பது உங்களுடைய Software ஐ உபயோகப்படுத்துனதுக்கு அப்புறம் புரிஞ்சிக்கிட்டேன்..

  எப்பப்பப்பா!!! எவ்வளவு ஒரு எளிமையாக உபயோகப்படுத்தக்கூடிய ஒன்று.. கணிப்பொறி சார்ந்த குறைந்த அறிவுள்ளவர் எவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் (Customizable) கொள்ளக்கூடிய வசதி..

  அந்த மென்பொருள் சார்ந்த அனைத்து வித கேள்விகளுக்கும் விடைகொண்ட ஒரு வலைத்தளம். இவ்வளவு உழைப்பும் ஒரு தனி மனிதனுடையதுன்னு நினைக்கிறப்ப தலை சுற்றுகிறது.

  இதுல மிகப்பெரிய விசயம் என்னன்னா நிறைய பேர்த்துக்கு உங்களுடைய மென்பொருள் இருப்பதே தெரியாது.. அப்படி தெரிஞ்ச சிலருக்கும் அதை சரியாக உபயோகிப்பது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள இயலாமல் (உண்மையில் என்னைப்போல் நேரம் ஒதுக்காமல்) கைவிட்டிருக்க வேண்டும்..

  ஒரு தமிழனுடைய மதிப்பு மிக்க உழைப்பு எப்படி வீணாகிக்கொண்டிருக்கின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. ஆனால் முழுவதுமாக வீணாகவில்லை. ஒருசிலர் உங்களின் மென்பொருளின் எளிமையை மற்றும் தரத்தை உணர்ந்து பயன்படுத்தி பயன் பெறுகின்றனர்..

  இனி வரும் காலங்களில் என்னால் இயன்ற அளவு எவ்வளவு தூரம் மக்களிடம் இதை எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச்செல்லுவேன்.

  நன்றி கலந்த வணக்கத்துடன்
  சரவணா

 • திரு. சக்திவேலு கந்தசாமி, சென்னை
  விலை கொடுத்து வாங்கிய புரோகிராம்கள் வேலை செய்யாதவிடத்திலும் தங்கள் விலையில்லா அன்புடைய எழுத்துருக்களைக் கொண்டு தட்டச்சு செய்யமுடிகிறது. அழகிக்கு நன்றி.

 • திரு. சுந்தர், சென்னை
  ... கடந்த 4 வருட காலமாக அழகி மென்பொருளை உபயோகித்து வருகிறேன். நான் சென்னை "......"யில் வசித்து வருகிறேன்.

  சுருக்கமாக ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்று நாங்கள் சாப்பிடும் உணவிற்கு நீங்கள்தான் பாதி காரணம். எப்படி வாழப் போகிறோம், எப்படி போட்டி போடப் போகிறோம், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்த எனக்கு உங்கள் அழகி மென்பொருள் உதவியால் நம்பிக்கை வந்தது. தமிழ் டைப் செய்யத் தெரியாத நான் இப்போது இரண்டு கல்லூரிகளின் பிராஜக்ட் ஒர்க் செய்யும் அளவிற்கு முன்னேறி உள்ளேன்.

  எங்கள் பகுதியில் நான் ஒருவன் மட்டும்தான் தமிழில் தட்டச்சு செய்து தருகிறேன் என்பதை நினைக்கும்போது, என்னுடைய வெற்றிக்கு முகம் தெரியாத நீங்கள்தான் காரணம்.

  நான் இறைவனை வேண்டுவது உங்களுடைய வியாதி முற்றிலும் குணமாக வேண்டும் என்பது. .......... நன்றி. வணக்கம்.

 • திரு. நாராயணன், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
  அய்யா,

  இது ஒரு தலைசிறந்த மென்பொருள்… வாழ்த்துக்கள்!

  தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழில் எழுத நினைப்பவர்களுக்கும், இது ஒரு வரப்பிரசாதம்.

  உங்களது சேவை தொடர எனது இனிய வாழ்த்துக்கள்.

  நாராயணன்.
  East Hartford, ஐக்கிய அமெரிக்க நாடுகள்.

 • திரு. ரகுவீரதயாள், சென்னை
  1000% true. I am a happy user since 2006.

  'யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடிய பாரதி இன்றிருந்தால், 'அழகிபோல் எளிய சிறந்த மென்பொருள் உலகெங்கிலும் கண்டிலேன்' என்று ஆனந்தப் பாட்டிசைத்திருப்பான்.

  தமிழ் மட்டுமில்லை உலகின் எம்மொழியிலும் அழகிகொண்டு எழுதலாம்.

 • திரு. ரகுவீரதயாள், சென்னை
  எங்கு வேண்டுமானாலும் உரக்கச் சொல்லுவேன், தமிழ்க் கணிணிக்கு அழகி ஒரு சிகரம் என்று. இதைப்போல் இன்னொன்று என்றும் எப்போதும் கிடையாது. அதேபோலவே திரு விஸ்வநாதன் போல உடனுக்குடன் உதவிக்கு வரும் மென்பொருள் டெவலப்பர் யாருமில்லை.

 • திரு. கணேசன் V, தமிழ்நாடு
  அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ்த் தாயின் வணக்கம்.

  தமிழுக்குத் தொண்டு செய்தோர்க்கு என்றும் தமிழ்த் தாயின் கருணை கிட்டும். இதில் கடுகு அளவும் பொய் இல்லை. ... ... இது முற்றிலும் உண்மை. உலகளாவிய தமிழ் மக்களுக்கும் பயன் மிக்க ஒரு மாபெரும் செயலே நீங்கள் உருவாக்கி இருக்கும் அழகி. வாழும் தமிழ் மக்களுக்கும் இனி வரும் வழிதோன்றல்களுக்கும் நீங்கள் வழங்கிய படைப்பு மகத்தானது.

  வாழ்க உங்கள் தொண்டு. வளர்க உங்கள் முயற்சி.

  ஆய கலையரசியின் ஆசியும் ஆண்டவனின் கடைக்கண்ணும் பட்டு நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன்.

  மிக்க நன்றி வணக்கம்.
  கணேசன்

 • திரு. ஆர்.முத்துசாமி, புஞ்சைபுளியம்பட்டி, தமிழ்நாடு
  மதிப்பிற்குரிய திரு.விஸ்வநாதன் சார் அவர்களுக்கு,

  வணக்கம். ... எனது இருப்பிடம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி. விவசாயக் குடும்பம்.

  தாங்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற நான் வணங்கும் அருள் மிகு பண்ணாரி மாரியம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  தங்களது அழகி இலவச மென்பொருளை எனது மூன்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளேன். அவர்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு இப்படி ஒரு மென்பொருள் இருந்தது இதுவரை தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்கள். ஒலியியல் குறிப்புச் செயலி உபயோகப்படுத்த மிக எளிதாக உள்ளதாக தெரிவித்தார்கள்.
  ... ...

  நான் இதற்கு முன்பு '.....' உபயோகப்படுத்தி வந்தேன். ஒரு நாள் தங்கள் அழகி மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று பயன்படுத்தி பார்த்தேன், அழகியிடம் கவிழ்ந்து விட்டேன். ...

  பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் கூட இந்த அளவுக்கு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! மேலும் அழகி மேன்மேலும் வளர தமிழ் அன்னை அருள் செய்யுமாக.

  அன்புடன்
  ஆர்.முத்துசாமி.

 • திரு. லா.க. கணேசன், ஐக்கிய அரபு நாடுகள் (UAE)
  அன்புள்ள விஸ்வநாதன் ஐயா அவர்களுக்கு,

  மிக மிக நன்றி. ”அழகி” தமிழுலகுக்கு ஒரு பொன் அணிகலன். உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க.

  அன்புடன்
  கணேசன்.லா.க

 • திரு. முத்து ஐயா, புது தில்லி
  நான் யு என் ஐ என்ற செய்தி நிறுவனத்தில் இருந்தபோது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடிந்தது. இப்போது தமிழிலும் எழுத வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவசியம் எழுதுவேன். அதுவும் அழகி தமிழ் வடிவம் மூலம் எழுத மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. இதற்குமுன் '.....'-இல் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் அது ஒரு எல்லைக் கோட்டுக்குள் இயங்குவதால் அதில் என்னால் அதிகம் பலனடைய இயலவுமில்லை, என் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆகையால், அழகி குழுமத்துக்கு மிகவும் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

 • திரு. C P சந்திரசேகரன், புனே, இந்தியா
  அன்புள்ள ஆசிரியருக்கு,

  எழுத்தறிவித்தவரை தமிழ் மொழி மிக உயர்ந்த ஒரு இடத்தில் "இறைவன்" என்ற அளவுக்குச் சொல்லியிருக்கிறது.

  நான் நேற்று தான் - எனது தந்தையாரின் தமிழ்ப் பாடல்களை எல்லோருக்கும் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் - தாங்கள் படைத்த "அழகி" மென்பொருளை கற்றுக் கொண்டேன். அந்த விதத்தில் நீங்கள் எனக்கு எழுத்தறிவித்தவரானதால் உங்களுக்கு முதல் மடல் எழுதி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  பழைய தட்டச்சுக்களில் எழுத்துக்கள் "களை"யே இல்லாமல் இருக்கும். எப்போது படித்து முடிப்போம் என்றிருக்கும். அவ்வாறில்லாமல் அழகி-யில் எழுதும்போது எழுத்துக்கள் திருத்தமாக வருகின்றன. மேலும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இது உங்கள் சாதனை. உங்கள் நிலாச்சாரல் நேர்காணலைப் படித்தேன். மிக உயர்ந்த சிந்தனைகள். வாழ்க! வளர்க!!

  சாதனையாளர்களை ஊக்குவிப்பது பற்றி தங்கள் கருத்துக்கள் படித்தேன். இங்கு புனேயில் பார்வை இழந்த ஒரு பெண் எம்.சி.ஏ படித்துள்ளார். வேலைக்காக மனு போட்டும் கிடைப்பது கடினமாக உள்ளது. நீங்கள் அனுமதி வழங்கினால் அவரது பயோடேட்டாவை அனுப்புகிறேன். அவருக்கு நீங்கள் உற்சாகப்படுத்தி எழுதினால், இந்த மென்பொருள் வடிவமைப்பு போன்ற துறைகளில் அவரை ஈடுபடுத்திக் கொள்ள மிகவும் பயன்படும்.

  மீண்டும் நன்றி வணக்கம்.
  C P Chandrasekaran

 • திரு. ஜெய் ஸ்ரீநிவாஸன், கனடா
  அன்புள்ள அழகி,

  இத்துணை காலம் உன்னை கையகப்படுத்தாமல் விட்டது என் துரதிர்ஷ்டம்.. இப்பொழுதுதான் எனக்கு நேரம் வந்தது போலும்! நாலே நாட்களில் என் மனதை கொள்ளை கொண்டாள் அழகி!

  வெகுசிறிய முயற்சியில் அழகியை எல்லா அப்ளிகேஷனிலும் உபயோகித்து பார்த்து விட்டேன். எல்லாம் நன்றாக வருகிறது.

  மிக்க நன்றி! வாழ்க அழகி.... வளர்க அழகியின் புகழ்!! தொடர்க அழகியின் சேவை!!

  இப்படிக்கு
  அழகியின் அடிமை ஜெய் ஸ்ரீநிவாஸன், கனடா

 • திரு. தமிழன் அழகேசன், தமிழ்நாடு
  நன்றி நன்றி நன்றி

  என் கணினியில் தமிழை மிக சுலபமாக்கிய அழகிக்கும், அவளின் பெற்றோருக்கும், மற்றும் அவளின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  உங்கள் சேவைக்கு என் பாராட்டுதலையும் மகிழ்ச்சியையும் கூறி விடை பெறுகிறேன்.

  இக்கண்
  தமிழன் அழகேசன்

 • திரு. துரை.மணிகண்டன், கச்சமங்கலம், தமிழ்நாடு
  தஞ்சை மண் ஈன்றெடுத்த தவப்புதல்வனே,

  தமிழுக்குத் தொண்டு செய்தோன் செத்ததில்லை
  தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ

  என்று பாரதிதாசன் பாரதியைப் புகழ்ந்து பாடினான்.

  நான் இருவரையும் பார்த்ததில்லை. இன்று திரு.விசுவநாதனைப் பற்றி அறிந்தவுடன் இதனை உணர்கிறேன்.

  வாழ்க உன் தமிழ்த் தொண்டு, வளர்க உன் சேவைத் தொண்டு

  அன்புடன்
  தஞ்சை. துரை.மணிகண்டன்

 • திரு. வைத்யநாதன், சென்னை
  திரு விஸ்வநாதன் அவர்களுக்கு,

  ... தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் காப்பிரைட்டர் (Copywriter) என்ற முறையில் நான் தங்களின் அழகான அழகி என்னும் படைப்பினால் பெரிதும் பலன்பெற்று வருகிறேன். எனக்கு சமீபத்தில் கிடைத்த வேலைகளை மிக எளிதாகச் செய்துமுடிக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக அழகி அமைந்தது.

  அழகியை உருவாக்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இங்ஙனம்
  வைத்யநாதன்

 • திரு. சா யோ தயானந்தன், இலங்கை
  அன்புள்ள திரு.விஸ்வநாதன் அவர்கட்கு,

  நான் அண்மையில் அழகி மென்பொருளை தரவியக்கம் செய்து அதன் பயன்பாட்டை உய்துணர்ந்துள்ளேன். அழகி மென்பொருள் பல இணையங்களில் சரியாக வேலை செய்கின்றது. உங்கள் சேவையைத் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும்.

  இப்படிக்கு
  சா யோ தயானந்தன்

 • திரு. ரமேஷ் சதாசிவம், சென்னை
  வணக்கம், தங்கள் மென்பொருள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இறைவனைப் பற்றிய என் கவிதைகளை அழகி மூலமாக தட்டச்சு செய்து என் blogspot-ல் ஏற்றியுள்ளேன். தமிழில் தட்டச்சு செய்வதை எளிமையாக்கி விட்டீர்கள். உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். தங்கள் சேவை தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  தங்கள் உழைப்பால் பயன்பெற்ற,
  ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்
  (எனது தளங்கள்: http://iamhanuman.blogspot.com, http://smilemakerkrishna.blogspot.com)

 • கவிஞர் திரு. சக்திதாசன், இலண்டன்
  இன்னும் பல சாதனைகள் விஷி
  மண்ணில் நீ படைக்கும்
  நேரம்
  கண்ணில் நீரோடி இவன் உன்னை
  விண்ணில் மின்னும்
  நட்சத்திரமாய்
  பண்ணால் வாழ்த்தும்
  காலமுண்டு

 • திருமதி. பாகம் பிரியாள், பாண்டிச்சேரி
  அழகியைப்பற்றி:

  தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. ஆனால், அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்பொழுது பயன்பாட்டில் இருந்த வந்த மென்பொருளைப் பயன்படுத்தி வந்தாலும் ஸ்ரீ, ஞா போன்ற வார்த்தைகளை தட்டச்சு செய்வது சிரமமாய் இருந்தது. 2007-ல் நண்பர் ஒருவர் அழகியை அறிமுகப் படுத்தினார். அழகியின் சிறப்பு அம்சம் அதன் எளிமை. கணினியின் பயன்பாடு முழுமையாகத் தெரியாதவர்களும், அவர்கள்(விஸ்வநாதன்) சொல்லியுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்தால், அழகி நம் கணினியை அழகாக்குவாள்.

  ... ... காந்தி போட்ட நோட்டுக்காக உலகமே ஆலாகப் பறந்து கொண்டிருக்கையில், கணினி மற்றும் கன்னித் தமிழின் மேல் உள்ள காதலால் அழகியை இலவசமாக தந்து கொண்டிருக்கும் திரு.விஸ்வநாதன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்டைக் கவிதையாய் ஆக்கி விட்டேன்.

  அழகியைப் பற்றி மலர்ந்த கவிதை இதோ!

  அகரத்தில் ஆரம்பித்த அவள் பயணம் இன்று
  சிகரத்தை நோக்கி வீறு நடையாய் விருதுகளோடு!

  மொழியைத் தாயாகக் கொள்ளும் மரபை அடியொற்றி
  மென்பொருளுக்கு அழகியே அழகிய பெயரானது!

  தமிழ் கூறிடும் நல்லுலகிற்கு மற்றொரு மைல்கல்லாய்
  தனிச் சிறப்பாய் அருமை அழகி அவள் திகழ்கிறாள்!

  பிறந்த இடம் சிங்காரச் சென்னை என்றாலும்
  புகுந்த இடமோ தமிழ் இதயமெனும் பெரிய இடம்!

  தமிழ் வளர்த்த சங்கரனுக்கு மூன்றாம் கண்.
  தமிழ் வளர்க்கும் அழகிக்கும் சின்னம் கண்!

  விரலசைப்பில், வேண்டியது பெற விரும்பியது தர
  வழி வகை செய்து தரும் அட்சய பாத்திரம் அவள்!

  மூன்றெழுத்துதான் என்று நினைக்க வேண்டாம்
  மோதுபவரை வீழ்த்தவும் அவளிடம் ஆயுத எழுத்து உண்டு!

  கட்டுரை, மின்னஞ்சல், கவிதை -எது வேண்டும் என்றாலும்
  கருத்துக்களைக் கோர்க்க கை கொடுப்பாள் அவள்!

  எங்கிருந்தாலும் தீந்தமிழ் என்னும் மாலையில்
  அனைவரையும் இணைக்கும் அழகு கண்ணி (கன்னி) அவள்!

  அழகியாய்ப் பிறந்து, "மழலை"யாய் வளர்ந்து "இல்லம்" புகுந்த
  அவள் நம் உள்ளத்திலும் அமர்ந்து விட்டாள் அழகாய்!

  பாகம் பிரியாள்

 • திரு. காழியூரார் ('நம்பிக்கை' குழுமத்தில் எழுதும், பலரின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய, திரு. காழியூரார்)
  அன்பு இரமண ப்ரிய விஸ்வநாதருக்கு,
  ...
  ..
  என்னுடைய இந்த மெயிலில் ஒரு விசேஷம் இருக்கிறது. கண்டுபிடித்தீர்களா? இது அழகியில் தட்டச்சியது.

  இரமண பிரியரின் அழகி ஒரு டிவைன் ஸாஃப்ட்வேர் இல்லையோ? :)

Note

Testimonials are a source of inexpressible happiness/satisfaction for a creator but at the same time a source of that ever-to-be-eschewed 'sense of doership' too. But, testimonials do serve as catalysts for a creator to give more and more goodness# to the society by continuing to enhance his/her creation, even amidst all the obstacles and hardships. Reading the testimonials serve as catalysts to the users too - to explore the features of Azhagi/Azhagi+ as much as they can and thus reap as much benefits as they can (not just for themselves but for this society as a whole).

So, with "societal benefits" in mind, I have posted above a few samples out of the many appreciative e-mails I have received from various quarters, from around the globe - regarding Azhagi's and Azhagi+'s immense 'usefulness', ease of use, speed and unique/special features. All said and done, for everything related to Azhagi/Azhagi+, thanks to the Lord Almighty. To the Lord alone. For ever. I 'strive' to remain, as ever, an insignificant entity.

If you have anything to say/report about Azhagi/Azhagi+ (comments, remarks, criticisms, bugs, etc.), kindly mail to [email protected].

Love all Serve all.

Kind regards
B.Viswanathan

(#)
"ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம்தான்!" - மஹா பெரியவா

"We can be good, and can do good, only when we act and live in the exalted state which is bereft of the egoistic notion of actorship. Real good flows out of us, only when we have transcended the individual sense and have come to dwell in the supreme and universal consciousness of God." - Swami Ramdas

Azhagi - God's Own App
Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail