azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Let us consider chamatkara, acts that attract and cause wonder. You see a flower. You long to hold it in your hand only when its colour or fragrance is attractive. You enter the market and see heaps of fruits. If the fruits are not attractive, you have no urge to eat them and benefit from them. Attraction is the very nature of the Divine. Once the person is drawn near, the process of samskara (transformation) starts. Without this, man remains fallow and feeble. He has no dignity or personality. A worthless steel lump is transformed by skilful manipulation and reconstruction into a watch that is worth several hundred rupees; this is the result of samskara, which turned it into a useful tool for indicating time. Thus man can also be transformed into a noble, efficient, happy and disciplined member of society by the implanting of good thoughts, good feelings, good deeds and good emotions. Such transformed persons will spontaneously engage themselves in the task of promoting human welfare. They will be promoters of the ideals of brotherhood of man and fatherhood of God. (Divine Discourse, Nov 23, 1976)
When you are immersed in worldly affairs, He brings tears to your eyes. When you are immersed in spirituality, He wipes away your grief. - BABA
மனதைக் கவர்ந்து ஆச்சரியமூட்டும் செயல்களான சமத்காரங்களை எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு பூவைப் பார்க்கிறீர்கள். அதன் நிறமும் நறுமணமும் வசீகரமாக இருக்கும்போது மட்டுமே அதைக் கையில் பிடித்துக்கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் சந்தையில் பழங்கள் குவித்து வைத்திருப்பதைப் பார்க்கிறீர்கள். பழங்கள் உங்களைக் கவரும் வண்ணம் இல்லாவிட்டால் அவற்றைச் சாப்பிட்டு பின் அவை மூலம் பலன் பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்காது. ஆகர்ஷணம் எனும் ஈர்ப்பு தெய்வீகத்திற்கே உரிய இயல்பு ஆகும். ஒருவர் தெய்வீகத்திற்கு அருகில் ஈர்க்கப்பட்டவுடன், ‘சம்ஸ்காரம்’ எனும் நல்மாற்றம் ஆரம்பமாகிறது. இது இல்லாமல், மனிதன் பண்படாதவனாகவும் பலவீனமானவனாகவுமே இருப்பான். அவனுக்கு கண்ணியமோ, தனித்தன்மையோ இருக்காது. மதிப்பற்ற ஒரு இரும்புத் துண்டை திறமையாகக் கையாண்டு மீட்டுருவாக்குவதன் மூலம் அது பல நூறு ரூபாய் மதிப்புள்ள கடிகாரமாக மாற்றப்படுகிறது. அது நேரத்தைக் காட்டும் ஒரு பயனுள்ள கருவியாக மாற்றப்பட்டது சம்ஸ்காரத்தின் விளைவே. இங்ஙனம், நல் எண்ணங்கள், நல் உணர்வுகள், நற்செயல்கள் மற்றும் நல் உணர்ச்சிகளை பதிப்பதன் மூலம் சமுதாயத்தின் ஓர் உன்னதமான, திறமையான, மகிழ்ச்சியான, ஒழுக்கமான உறுப்பினராக மனிதனையும் நல்மாற்றம் செய்ய முடியும். இத்தகைய நல்மாற்றமடைந்த மனிதர்கள், மனித நலனை மேம்படுத்தும் பணியில் தன்னியல்பாகவே தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ‘மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள், இறைவனே அனைவருக்கும் தந்தை’ என்ற இலட்சியக் கொள்கைகளை முன்நிறுத்தி செயல்படுபவர்களாக இருப்பார்கள். (தெய்வீக அருளுரை, நவம்பர்23, 1976)
நீங்கள் உலக விவகாரங்களில் மூழ்கும்பொழுது, இறைவன் உங்களைக் கண்ணீர் சிந்த வைக்கிறான். மாறாக, நீங்கள் ஆன்மீகத்தில் மூழ்கும்பொழுது, அவன் உங்கள் கண்ணீரைத் துடைக்கிறான். - பாபா