first release - 2023
first release - 2022
Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail fs Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail fs Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail
first release - 2011
first release - 2000

thumb_up

Food for your mind and spirit

Related pages: The SELF, azhagi.com/baba, Motto.php, Spread.php, Contribute.php

As of today (11-September-2019), 'Azhagi' user Sri Varagooran Narayanan (ஸ்ரீ வரகூரான் நாராயணன்) sir perhaps might have written around 1500 divine stories related to Sri Maha Periyavaa, using Azhagi, which sure must have been read by crores of people across the world by now (via## Facebook, Whatsapp, Blogs, etc. etc.), thus serving as a great and eternal nourishment for one's mind and spirit. Thanks a TON to Sri Varagooran Narayanan Sir (ஸ்ரீ வரகூரான் நாராயணன்) for ALL the "Periyavaa Katturaigal" he has written so far, using Azhagi, which are nourishing the minds of this world society monumentally and will continue to nourish. Thanks a TON to the Lord Almighty. The screenshots below from 5 out of the 1000s of Azhagi's Facebook Group threads pertain to years 2015-2019.

Hara Hara Shankara
Jaya Jaya Shankara

Dated: 9-September-2019


Dated: 4-September-2018
Sri Maha Periyavaa divine stories - Food for your mind and spirit

Dated: 23-December-2017
Sri Maha Periyavaa divine stories - Food for your mind and spirit

Dated: 27-Oct-2016
Sri Maha Periyavaa divine stories - Nourishment for one's mind and spirit

Dated: 22-May-2015
Sri Maha Periyavaa divine stories - Food for your mind and spirit

Source links for above screnshots: Source1, Source2, Source3, Source4, Source5

(##) One of the around 1500 Sri Maha Periyavaa divine stories written by Sri Varagooran Sir, hereunder (just exactly as recd. in Whatsapp):
[You can read many more such divine stories written by Sri Varagooran Narayanan Sir, if you search like this in Periyavaa Facebook Group]

    "அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்து விடும்..கவலைப்படாமல் வாருங்கள்!" ---'வாலி'

    திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மகன் திரும்பிவர அருளிய மகாபெரியவா.

    வழி காட்டியவர்-கடைசிப் பாரா பாருங்கள்.

    நன்றி-குமுதம் லைஃப்-19-09-2018 தேதியிட்டது
    தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
    தொகுப்பு-நாககுமாரி

    அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.

    (இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர்தான்!)

    இவர்களுள் கே.வி.மகாதேவன் அவர்கள் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

    கே.வி.மகாதேவன் அவர்களின் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல்,கொள்ளாமல் வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான்.

    துன்பத்தைத் துடைத்துக் கொள்ள கே.வி.எம்.. அவர்களுக்கு இசை கொஞ்சம் கை கொடுத்தது. ஆனால் அவரது மனைவியோ, என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தார்.(கையறு) அப்போது அவருக்கு ஆறுதலும்,தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர்.

    "காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே,'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு 'வாலி' உதவுவார்!" என்றும் சொன்னார்.

    மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம்,திருமதி கே.வி.எம். அவர்கள் விஷயத்தைச் சொல்ல, "அடடே காஞ்சிப் பெரியவரைப் பார்க்கப் போவதென்பது கரும்பு தின்பது மாதிரி. எனக்கென்ன கசக்குமா? நாளைக்கே புறப்படுங்கள்.சென்று வருவோம்!" என்றார் கவிஞர்

    மறுநாள், தேனம்பாக்கம் எனும் இடத்தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும் மகாபெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றையும் சொன்னார்கள்.

    அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார்..

    மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே...ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் அவர்கள்.

    வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்." அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்துவிடும் ......கவலைப்படாமல் வாருங்கள்!" என்றார்.

    அவர்கள் வீட்டை நெருங்கியபோது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கியிருந்தது. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை,பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது.

    ஹிப்பிகளோடு சேர்ந்துவிட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பானோ....மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய திருமதி கே.வி.எம். அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான்.

    கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக்கொண்டு தேம்பினார்,தாய்.

    "இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிடணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்!" என்று சொன்னான் அவர்களின் மகன்.

    மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்....இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம். அவர்களுக்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர..ஹரஹர சங்கர..'!

    இன்னொரு முக்கியமான விஷயம். திருமதி கே.வி.எம். அவர்களிடம், 'காஞ்சி மகானை தரிசித்தால் பிரச்னை கண்டிப்பாகத் தீரும்' என்று ஆலோசனை சொன்னவர் யார் தெரியுமா?

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

    You can read more divine stories as above, written by Sri Varagooran Sir, if you search like this in Periyavaa Facebook Group.



My kind and humble request to Sri Varagooran Narayanan Sir
Sri Maha Periyavaa divine stories - Food for your mind and spirit

    "எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!"

    (பாமர ஆசாமியிடம் பரமாசார்யா)

    (துவாதசி பாரணையும் நெல்லிக்காயும்)

    கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
    தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
    நன்றி-05-10-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

    மகாபெரியவா எந்த விரதமானாலும் சரி,துளிக்கூட நியம நிஷ்டை தவறாம அனுஷ்டிப்பார்.சில விரதங்கள் இருக்கிற சமயத்துல கூடவே மௌன விரதத்தையும் சேர்ந்து அனுஷ்டிப்பார் . ஒரு சமயம் ஏகாதசி விரதம் இருந்துட்டு, மறுநாள் துவாதசி அன்னிக்கு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் பரமாசார்யா.

    வழக்கமா துவாதசி அன்னிக்கு மகா பெரியவாளைப் பார்க்க வர்றவா பலரும் நிறைய கனிவர்க்கங்களைத்தான் வாங்கிண்டு வருவா. ஏன்னா, முதல்நாள் உபவாசமிருந்த பெரியவா மறுநாள் பாரணை பண்றச்சே அந்தப்பழங்கள்ல ஒரு விள்ளலையாவது எடுத்துண்டா பெரும் புண்ணியம் கிடைக்குமேன்னுதான்.

    அதே மாதிரி அந்த துவாதசியிலயும் நிறையபேர் வகைவகையான பழங்களை எடுத்துண்டு வந்து பெரியவாளுக்கு சமர்ப்பிச்சிருந்தா.அந்த சமயத்துல சாதாரணமா இருந்த பக்தர் ஒருத்தர், பெரியவா முன்னால் வந்து நின்னு நமஸ்காரம் பண்ணினார்.அவர் கையில் மஞ்சள் பை ஒண்ணு இருந்தது.

    நமஸ்காரம் செஞ்சவருக்கு குங்குமமும் கல்கண்டும் குடுத்தார் மகாபெரியவா. அதை வாங்கிண்டு நகர ஆரம்பிச்சார். அப்போ மகாபெரியவா, "கொஞ்சம் நில்லு" அப்படின்னு உரத்த குரல்ல சொல்ல, அந்த ஆசாமி சட்டென்னு நின்னு திரும்பிப் பார்த்தார்.

    "என்ன நீ இப்படிப் பண்றே? எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!" அப்படின்னார் பெரியவா.

    தன் கையில் இருந்த மஞ்சள்பையைக் கொஞ்சம் தயக்கத்தோட பார்த்த அந்த ஆசாமி,"இல்ல,சாமீ அது வந்து....!" வார்த்தைகளை முடிக்காம இழுத்தார்.

    "என்ன...இங்கே ஆப்பிள், ஆரஞ்சுன்னு குவிஞ்சு இருக்கே. இதுல நாம எடுத்துண்டு வந்ததுக்கு என்ன மதிப்பு இருக்கப்போறதுன்னு நினைக்கறியா? இதெல்லாத்தையும்விட அதுதான் ஒசந்தது. அதுவும் துவாதசி அன்னிக்குக் கொண்டு வந்திருக்கே.குடு அதை" என்று சொன்னார் பரமாசார்யா.

    தன்கையில இருந்த பையை பவ்யமா பெரியவா கிட்டே நீட்டினார் அந்த ஆசாமி.பக்கத்துல இருந்த சீடரைப்பார்த்தார் மகாபெரியவா. அதைப் புரிஞ்சுண்ட சீடர் மூங்கில் தட்டு ஒண்ணை எடுத்து அந்த ஆசாமி பக்கமா நீட்டி அதுல அந்தப் பையில இருந்த வஸ்துவை கொட்டச் சொன்னார்.

    மஞ்சள் பையை மூங்கில் தட்டுல கவிழ்த்துக் கொட்டினார் அந்த ஆசாமி. அதுலேர்ந்து குண்டு குண்டான நெல்லிக் காய்கள் அழகா கொட்டி, தட்டை நிரப்பித்து.

    இன்னிக்கு பிக்ஷைல இதை அவசியம் சேர்க்கணும்னு சொல்லிடு" சீடரிடம் சொன்னார் பெரியவா.

    எத்தனையோ பணக்காரா எடுத்துண்டு வந்து குவிச்சிருந்தரகம்ரகமான கனிவர்க்கம் எல்லாம்,'இந்த நெல்லிக்காய்க்குக் கிடைச்ச பாக்யம், தங்களுக்குக் கிடைச்சுலையே!'ன்னு தோணித்து அங்கே இருந்தவா எல்லாருக்குமே.

    அற்பமா தான் நினைச்சதை ஏத்துண்டு அற்புதமா ஆக்கிட்ட ஆசார்யாளை மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுட்டுப் புறப்பட்டார் அந்த ஆசாமி.

    துவாதசி அன்னிக்கு நெல்லிக்காய் கொண்டு வந்து குடுக்கணும்னு அந்தப் பாமர ஆசாமிக்கு எப்படித் தோணித்து? அவர் நெல்லிக்காய் கொண்டு வந்துட்டு தராமாப் போறார்னு பரமாசார்யாளுக்கு எப்படித் தெரிஞ்சுது.எல்லாம் அந்தப் பரந்தாமனுக்கே வெளிச்சம்.

    (the above posted, as recd. in Whatsapp)



    கட்டுரையாளர்; ரா.கணபதி.
    புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
    தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

    பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீஸி.எஸ்,விக்குப் ( விச்வநாதய்யர்)பொத்துக்கொண்டு வந்து விட்டதாம்.
    "எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா கிடக்கிறது இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் இத்தனை யானையையும், ஒட்டையையும், ஜனங்களையும் கட்டித்தீனி போடுவதென்றால் எப்படி?" என்கிற ரீதியில் பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

    பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக " நீ ஏன் பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப் பொறப்பட்டிருக்கோம். நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய அளப்பா" என்றாராம்.

    மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை. ஆனால் சொல்லத் தெரிந்தது,

    மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப்பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான். வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.

    "நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா(இதை ஸி.எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!. மடத்து ஜாகையிலே எல்லாத்தையும் சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச் சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

    பெரியவாள், "அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!.

    "பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா'"
    (the above posted, as recd. in Whatsapp)

You can read many more such MahaPeriyavaa divine stories written using Azhagi by Sri Varagooran Narayanan Sir, if you search like this in Periyavaa Facebook Group

Azhagi - God's Own App
Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail