azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Dec 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Dec 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The body is a chariot. The charioteer is the principle of Buddhi (intelligence). The senses are the horses. The reins that regulate and restrain the horses are the manas (mind). When the mind wavers and wanders, not having stability of purpose, the horses run helter-skelter, endangering even the charioteer, Buddhi (Intellect). Speech is an important function of the senses and serves the whims of the mind. So, one must control the mind and not pollute it with greed for sense pleasures. Nor should the mind be tossed about on waves of 'Yes' and 'No', of acceptance and rejection, of resolutions and hesitations. The mind must act as an associate of the Buddhi. Speech subserving the mind and mind subserving intellect - this is the way to bring about Prashanti, Supreme Peace! And note this: Slowly and steadily, instruct the intellect to turn towards Atma. Speech with mind, mind with intellect and intellect illumined by the Atma — this ensures you attain your genuine goal! (Divine Discourse, Nov 23, 1984)
To control the mind, we should control the five senses. Only then will we be able to realise God. - BABA
தேகம் ஒரு ரதம் போன்றது. இதன் சாரதியே புத்தி. இதில் பூட்டப்பட்ட குதிரைகளே புலன்கள். இந்தக் குதிரைகளை இழுத்துக் கட்டுப்படுத்தும் கடிவாளமே மனமாகும். புத்திக்கு ஸ்திரத்தன்மை இல்லையென்றால் இந்தக் குதிரைகள் விஷய வாசனைகளின் பின்னால் தறிகெட்டு ஓடி, சாரதியான புத்திக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். புலன்களில் பிரதானமானது வாக்கு (நாக்கு). மனதின் தினுசான விருப்பங்களுக்கு எல்லாம் அது ஒத்து ஊதுகிறது. எனவே, ஒருவர் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், புலன் இன்பங்களின் மீதான பேராசையால் அதை மாசுபடுத்தக்கூடாது. 'ஆம்' மற்றும் 'இல்லை', ஏற்பு-நிராகரிப்பு, தீர்மானங்கள்-தயக்கங்கள் என்ற அலைகளில் மனதை அலைக்கழிக்கக் கூடாது. புத்தியின் கூட்டாளியாக மனம் செயல்பட வேண்டும். வாக்கு மனதிற்கு நல்வழியில் உதவும் வகையிலும், மனம் புத்திக்கு நல்வழியில் உதவும் வகையிலும் இருத்தல் வேண்டும் - இதுவே ப்ரசாந்தியை (பரம அமைதியை) கொணர்வதற்கான வழி. மற்றும், குறிப்பாக, படிப்படியாக புத்திக்கே புத்தி சொல்லி, அதை ஆத்மாவின் மீது நிலைகொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். வாக்கு மனதுடன், மனம் புத்தியுடன், ஆத்மாவால் ஒளியூட்டப்பட்டு மிளிரும் புத்தி - இதுவே நீங்கள் உங்கள் உண்மையான இலக்கை அடைவதை உறுதி செய்கிறது! (தெய்வீக அருளுரை, நவம்பர்23, 1984)
மனதைக் கட்டுப்படுத்த நாம் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகே நாம் இறைவனை உணர முடியும். - பாபா