azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
A person stands knee-deep in the river Ganges or Godavari, and utters hymns in praise of the river. He lifts up in his palm sacred water of the river and pours it back as his offering to the deity the river represents. Its water into itself - God's gift to God again! That’s all one is capable of; that is all one needs to do. He endowed you with this wonderful body, this sweet tongue, this amazing instrument called mind! He granted you intelligence, powers of analysis and synthesis, the capacity to receive and give up, to remember and forget. Acknowledge these gratefully and use them to the best advantage. Use them to see Him everywhere in all beings, to seek Him through all the ups and downs, joys and griefs, doubt and decisions of life. These dual impacts are a result of wavering of the mind. The mind revels in diversity of name and form; it must be drilled into the recognition and enjoyment of unity! (Divine Discourse, Nov 22, 1970)
The sense of ego separates the individual from the Divine. When the individual offers everything to God, this ego barrier is removed. - BABA
கங்கையிலோ கோதாவரியிலோ ஒருவர் இறங்கி முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, நதியைப் போற்றி மந்திரங்களை உச்சரிக்கிறார். நதியிலிருந்து உள்ளங்கைகளில் புனித நீரை எடுத்து மீண்டும் நதியிலேயே அதை விட்டு அந்த நதியின் தேவதைக்கு அதை அர்ப்பணித்து விடுகிறார். நதி நீரிலிருந்து பெற்ற நீர் அதற்கே அர்ப்பணம்; இறைவன் அருளியதை இறைவனுக்கே அர்ப்பணம்! ஒருவரால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்; ஒருவர் செய்ய வேண்டியதும் அவ்வளவுதான். இந்த அற்புதமான தேகத்தையும், இனிய நாவையும், மனம் என்ற இந்த பிரமிக்கத்தக்க கருவியையும் இறைவன் உங்களுக்கு அளித்துள்ளான்! அவன் உங்களுக்கு புத்தி, ஆய்ந்து தொகுக்கும் ஆற்றல்கள், பெறுதல்-விடுத்தல், நினைவில் கொள்ளுதல்-மறத்தல் ஆகிய திறன்களை வழங்கியுள்ளான். இவற்றை நன்றியுடன் ஏற்று அவற்றை அதிசிறந்த நன்மைக்குப் பயன்படுத்துங்கள். மேலும் இவற்றை, எங்கும் எல்லா உயிரினங்களிலும் இறைவனைக் காண்பதற்கும், வாழ்க்கையின் எல்லா ஏற்ற-இறக்கங்கள், சுக-துக்கங்கள், சந்தேகங்கள்-முடிவுகள் ஆகியவற்றினூடே அவனை நாடி அடைவதற்கும் பயன்படுத்துங்கள். இந்த இரட்டைத் தாக்கங்கள் மனச்சஞ்சலத்தின் விளைவுகளே. நாம ரூபங்களின் பன்முகத்தன்மையில் மனம் களிக்கிறது; மாறாக, ஏகத்துவத்தை உணர்ந்து அனுபவிப்பதற்கு அதற்குத் தொடர்ந்து தீவிர பயிற்சியளிக்கப்பட வேண்டும்! (தெய்வீக அருளுரை, நவம்பர்22, 1970)
'நான்' எனும் உணர்வு மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடுகிறது. ஒருவர் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவுடன், இந்த 'நான்' எனும் தடை நீக்கப்பட்டு விடுகிறது. - பாபா