azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 17 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 17 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Only the One exists. There is no second. In such a situation, there is nothing to be known. There is no knowledge, knowing or knower (in that state). In comprehending the One, the nature of the many has to be properly understood. Every man has to recognise the Divinity that is present in all human beings. God is one. That One is the Indweller in all beings. Did the Divine fragment Himself in a myriad of ways? The answer is: without fragmenting Himself, the Divine is present in all beings. In his ignorance, man notices only the manifoldness around him. This may be illustrated this way. The sun's image can be seen in an ocean, a river, a lake, a pond or a well. Everywhere the sun appears to be shining. Are there so many different suns? No. The objects reflecting the image of the sun are varied and different from one another. Likewise, names and forms may be different, but in all beings, the same God, without being divided, shines as the Indweller. Thus, although bodies may appear with different names and forms, the Divine in them is one. (Divine Discourse, Feb 20, 1993)
From where did the word ‘we’ come? It has come from ‘I’. Without ‘I’, there can be no ‘we’. Thus, ‘I’ is the one and only entity. - BABA
இருப்பது ஒன்றே ஒன்றுதான். இரண்டாவது என்பதே இல்லை. அத்தகைய நிலையில், தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமே இல்லை. அறிவு, அறிந்து கொள்வது, அறிந்து கொள்பவர் - இவை மூன்றுமே அந்நிலையில் இல்லை. எனவே, ஏகத்துவத்தை அறிந்து கொள்வதில், அநேகத்துவத்தின் தன்மையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதரிடத்தும் பொதிந்திருக்கும் திவ்யத்துவத்தை ஒவ்வொரு மனிதனும் விசாரணை செய்து அறிந்துகொள்ள வேண்டும். இறைவன் ஒருவனே. இத்தகைய ஒருவனே எல்லா உயிரினங்களிலும் உள் உறைகின்றான். இப்படிப்பட்ட இறைவன் எண்ணற்ற வகையில் தன்னை துண்டுதுண்டாக ஆக்கிக் கொள்கிறானா? இல்லை. துண்டுதுண்டாகத் தன்னை ஆக்கிக்கொள்ளாமலேயே, இறைவன் எல்லா உயிரினங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றான். அஞ்ஞானப் பார்வையினால் மனிதன் அதனை அநேகத்துவமாக பாவிக்கிறான். இதை இவ்வாறு விளக்கலாம். கடல், நதி, ஏரி, குளம், கிணறு போன்றவற்றில் சூரியனின் பிம்பத்தைக் காணலாம். எல்லா இடங்களிலும் சூரியன் பிரகாசிப்பது போல் தெரிந்தாலும் அத்தனை சூரியன்கள் உள்ளனவா? இல்லை. சூரியனின் ரூபத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் பல்வேறானவை, ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. அவ்வாறே, ரூபநாமங்கள் வெவ்வேறாக இருக்கலாம், வேறுபட்டிருக்கலாம், ஆனால் அனைத்து உயிரினங்களிலும் ஒரே இறைவன் தான், பிரிக்கப்படாமல் உள்ளுறைபவனாக பிரகாசிக்கிறான். இவ்வாறு, உடல்கள் வெவ்வேறு ரூபநாமங்களுடன் தோன்றினாலும், அவற்றில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இறைவன் ஒருவனே. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி20, 1993)
‘We' – ‘நாம்' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இது ‘I' - ‘நான்’ என்பதிலிருந்து வந்துள்ளது. ‘I’ - ‘நான்; இல்லாமல் ‘We' – நாம் இருக்க முடியாது. எனவே, இருப்பது ‘I’ - ‘நான்' என்ற ஒன்றே ஒன்றுதான். - பாபா