azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Believe that the Lord’s Name is the boat, which will take you across the sea of worldly life. The Name is more efficacious than the contemplation of the Form. Draupadi did not send a chariot to bring Krishna to her rescue; she uttered the Name in agony and Krishna responded and saved her from imminent dishonour. In the Treta yuga, in Ramayana, Nala and his monkeys were building a bridge over the sea to Lanka; the boulders on which they inscribed the sacred name Rama, floated on the waters, but they found that the boulders floated away due to wind and waves. They did not form a continuous bridge for the army to pass over. Some ingenious person gave a suggestion to write ‘RA’ on one boulder and ‘MA’ on another and they found that the two stuck hard together. The name will serve as a float for you too; it will keep you attached to God and bring on you His Grace! (Divine Discourse, Oct 24, 1965)
We who are crossing the ocean of Samsara need to cultivate the art of swimming through Bhagavat chintana (contemplation on God). - BABA
இறைவனுடைய திருநாமமே சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி என்பதை நம்புங்கள். இறைவனுடைய ரூபத்தைத் தியானிப்பதை விட அவனுடைய திருநாமஸ்மரணை அதிகம் பலனளிக்க வல்லதாகும். திரௌபதி கிருஷ்ணருக்கு ஒரு ரதத்தை அனுப்பி தன்னைக் காப்பாற்ற வருமாறு அழைக்கவில்லை; அவள் தாளாத வேதனையில் அவரது திருநாமத்தை உரக்கச் சொல்லி அழைத்தவுடன், கிருஷ்ணர் விரைந்து வந்து அவளை மானபங்கத்திலிருந்து காப்பாற்றினார். திரேதாயுகத்தில், ராமாயணத்தின் போது, நளனும் அவனது வானரர்களும் கடலின் மேல் இலங்கைக்கு பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர்; ஒவ்வொரு பாறையின் மீதும் ஸ்ரீராமரின் திருநாமத்தை எழுதிக் கடலில் போட்டனர்; அப்பாறைகள் நீரில் மிதந்தாலும், அவை காற்றாலும் அலைகளாலும் அங்குமிங்கும் சிதறடிக்கப்படுவதைக் கண்டனர். அவை, வானரசேனை கடந்து செல்வதற்கான தொடர்ச்சியான பாலத்தை உருவாக்கவில்லை. அறிவாளி ஒருவர், ஒரு பாறையில் ‘ரா’ என்றும், மற்றொன்றில் ‘மா’ என்றும் எழுதுமாறு கூறிய ஆலோசனைப்படி செய்தவுடன், இரண்டு பாறைகளும் ஒன்றோடு ஒன்று உறுதியாக ஒட்டிக்கொண்டு விட்டதைக் கண்டனர். உங்களுக்கும் இறைவனுடைய திருநாமம் ஒரு மிதவை போலப் பயன்படும்; அது உங்களை இறைவனுடன் இணைந்திருக்கச் செய்து, அவனுடைய அருளையும் பெற்றுத் தரும்! (தெய்வீக அருளுரை, அக்டோபர்24, 1965)
சம்சாரக் கடலைக் கடக்க வேண்டியவர்களாகிய நாம், அதனை பகவத்சிந்தனையின் மூலம் நீந்திக் கடக்கும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். - பாபா