azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
There is a soiled and tattered currency note with you. No one is prepared to accept it from you. But when it is tendered to the Reserve Bank, which issued it, it is bound to accept it and issue a new note in return. Likewise, who is competent to accept one's bad thoughts, perverse feelings and evil intentions? Only the Almighty can accept them. He is the Spiritual Reserve Bank that will accept the soiled notes of your mind and give in return good currency (in the form of good thoughts). Hence, offerings should be made only to those who are competent to receive them. All bad thoughts and feelings should be offered to God so that we may receive, by His grace, good thoughts and feelings in return. Spirituality, thus, means transforming one's life into an ideal one by offering one's bad qualities to the Lord and receiving from Him good qualities in return. (Divine Discourse, May 24, 1992)
The real significance of good culture lies in giving up bad thoughts and bad actions and cultivating sacred thoughts and performing noble deeds. - BABA
உங்களிடம் அழுக்கடைந்த கிழிந்த ரூபாய் நோட்டு உள்ளது. அதை யாருக்காவது கொடுத்தால் யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அதை வெளியிட்ட ரிசர்வ் வங்கியிடம் கொடுத்தால் அதை ஏற்று அதற்குப் பதில் புதிய நோட்டை கொடுத்தாக வேண்டும். அதேபோல், நம்மிடமுள்ள கெட்ட எண்ணங்களையும், அசிங்கமான உணர்வுகளையும், தீய நோக்கங்களையும் யாரிடம் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள்? சர்வவல்லமை படைத்த இறைவன் மட்டுமே! அழுக்கடைந்த நோட்டுகளை ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக நல்ல எண்ணங்கள் என்ற நல்ல நோட்டைக் கொடுக்கும் ஆன்மிக ரிசர்வ் வங்கி அவன் மட்டுமே. யாருக்கு எதைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்களோ அவர்களிடம்தான் கொடுக்க வேண்டும். எனவே எல்லா கெட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து, அவனருளால் நல்ல எண்ணங்களையும் உணர்வுகளையும் பெற வேண்டும். ஒருவரின் கெட்ட குணங்களை இறைவனுக்குச் சமர்ப்பித்து, அதற்குப் பதிலாக அவனிடமிருந்து நல்ல குணங்களைப் பெற்று, ஒருவரின் வாழ்க்கையை இலட்சியமான ஒன்றாக நல்மாற்றம் செய்வதே ஆன்மிகமாகும். (தெய்வீக அருளுரை,மே24, 1992)
கெட்ட எண்ணங்களையும், தீய செயல்களையும் விட்டுவிட்டு, புனிதமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, உன்னதமான செயல்களைச் செய்வதில்தான் கலாச்சாரத்தின் உண்மையான முக்கியத்துவம் உள்ளது. - பாபா