azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
God's love is unbounded. It knows no growth or diminution. Worldly love is momentary and fickle. Divine love is unchanging and eternal. God is the embodiment of love. His infinite love is offered to all in equal measure. Some may feel that they had experienced God's love for a time and had been deprived of it later. This reflects only their own feelings and not the attitude of the Lord. Nature is like a clean mirror which reflects your feelings and attitudes. It is your own actions and thoughts, whether good or bad, which are reflected back to you. The Lord's love remains the same always. Pleasure and sorrow are not inherent in the nature of man. They are products of the mind. Bliss is the true nature of man. But it can be realised only when the love of God is experienced. The sense of "my-ness" has to be totally eradicated. You must strive for the welfare of all. This is Bharat's message from times of yore. Fill your hearts with this sacred feeling. Banish from your minds all thoughts of hatred and envy. (Divine Discourse, Jul 18, 1989)
Make love the basic impulse for all your actions. Share your love with others. Be unselfish. - BABA
இறைவனுடைய ப்ரேம தத்துவம் அகண்டமானது. அது குறைவதோ பெருகுவதோ இல்லை. இந்நாளில் நம்முடைய ப்ரேமை ஒரு க்ஷணத்தில் தோன்றி, மறு க்ஷணத்தில் மறைந்து விடுகிறது. ஆனால் இறைவனுடைய ப்ரேமை அப்படிப்பட்டதல்ல; அதற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ப்ரேமையே இறைவனுடைய ஸ்வரூபம். இறைவனுடைய ப்ரேமை எப்படிப்பட்டவருக்கும் சமத்துவமாகவே அளிக்கப்படுகின்றது. கொஞ்ச காலம் இறைவனுடைய ப்ரேமையை அனுபவித்தோம், பின்னர் கொஞ்ச காலம் இறைவனுடைய ப்ரேமை கிடைக்காமல் போய்விட்டது என்று சிலர் எண்ணக்கூடும். இது அவர்களுடைய உணர்வுகளின் பேதங்களே அன்றி இறைவனுடைய பேதங்களல்ல. ப்ரக்ருதி எனும் இயற்கை உங்களுடைய உணர்வுகளையும் இயல்புகளையும் பிரதிபலிக்கும் ஒரு தெளிவான கண்ணாடி போன்றது. நீங்கள் செய்த நல்லவை கெட்டவையே, நீங்கள் இறைவனுடைய ப்ரேமைக்கு அருகில் இருப்பதாகவோ, தொலைவில் இருப்பதாகவோ தோன்றிடச் செய்கிறது. இறைவனுடைய ப்ரேம தத்துவம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. சுகமோ துக்கமோ ஒரு மனிதனின் சுபாவம் அல்ல. இந்த சுக துக்கங்கள் மனதின் விகாரங்கள். உண்மையில் நாம் ஆனந்த ஸ்வரூபங்களே. ஆனால் இறைவனுடைய ப்ரேமையை நாம் அனுபவிக்கும் போதுதான் இதை உணர முடியும். ‘என்னுடையது’, ‘என்னுடையவர்’ என்ற சுயநல உணர்வை நாம் நிர்மூலமாக்க வேண்டும். நீங்கள் அனைவருடைய க்ஷேமத்தையும் கோர வேண்டும். இதுவே பண்டைய காலத்திலிருந்து பாரத தேசத்தின் போதனையாகும். இந்த திவ்யமான உணர்வால் உங்களுடைய இதயங்களை நிறைத்துக் கொள்வதற்கான முயற்சியை செய்யுங்கள். வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகளை நாம் ஒருபோதும் நம் இதயங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது. (தெய்வீக அருளுரை,ஜூலை18, 1989)
உங்களுடைய அனைத்து செயல்களுக்கும், ப்ரேமையை அடிப்படை உந்துதலாக ஆக்கிக்கொள்ளுங்கள். உங்களுடைய ப்ரேமையை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சுயநலமின்றி இருங்கள். - பாபா