azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The senses should not be allowed to override man. They must be instruments within the control of man. They are mere servants, orderlies, and helpers. A knife is best used to cut fruits or vegetables; you should not use it for cutting your throat. So too, your senses must be trained to be free from tamas (inertia) and rajas (passion); they must be neither dull nor dragging, neither dormant nor dangerously diverting. The Gunas must be overcome. Once a student approached a Guru and asked for the path to shanti. Guru replied that he must develop Sahana (tolerance) towards all men, all things, and all events. Nothing should arouse an interested reaction, disgust or desire. The highest alone must be sought; God alone must be desired. Prema, steady, unchanging, undiminishable, can only be Love towards the Lord of all the worlds (Vishweswara-prema). Changing love (Chala-prema) is love towards the changing world. (Divine Discourse, Oct 23, 1966)
The one who has acquired the spiritual vision has all his senses, mind and intellect under the control of the Atma. - BABA
புலன்கள் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கக் கூடாது. அவை மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கருவிகளாக இருக்க வேண்டும். அவை வெறும் வேலைக்காரர்கள், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்றவையே. கத்தியை பழங்கள் அல்லது காய்கறிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும்; உங்கள் கழுத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது. அதைப் போலவே, உங்கள் புலன்களுக்கு தமோ, ரஜோ குணங்களின்றி இருக்கப் பயிற்சியளிக்கப்பட வேண்டும்; அவை மந்தமானதாகவோ இழுத்துச் செல்லக் கூடியதாகவோ இருக்கக்கூடாது, அல்லது, செயலற்றதாகவோ பயங்கரமாக திசைதிருப்புவதாகவோ இருக்கக்கூடாது. மாறாக, குணங்கள் வெல்லப்பட வேண்டும். ஒருமுறை ஒரு சீடன் தன் குருவை அணுகி சாந்திக்கான பாதை என்ன என்று கேட்டான். எல்லா மனிதர்களிடமும், விஷயங்களிலும், நிகழ்வுகளிடமும் ‘ஸஹனம்’ எனும் சகிப்புத்தன்மையை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று குரு பதிலளித்தார். எதுவொன்றும் ஈர்ப்பையோ, வெறுப்பையோ, ஆசையையோ தூண்டுவதாக இருக்கக் கூடாது. பரம்பொருளை மட்டுமே நாட வேண்டும்; இறைவன் மட்டுமே வேண்டுமென விரும்ப வேண்டும். எல்லா உலகங்களுக்கும் அதிபதியான இறைவன் மீது கொள்ளும் ‘விஸ்வேஸ்வர ப்ரேமை’ மட்டுமே நிலையான, மாறாத, குறையாத ப்ரேமையாக இருக்க முடியும். உலகத்தின் மீதான அன்பு என்பது மாறிக்கொண்டே இருக்கும் ‘சல ப்ரேமை’ ஆகும். (தெய்வீக அருளுரை, அக்டோபர்23, 1966)
ஆன்மிகப் பார்வையைப் பெற்றவன் தன் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை ஆத்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பான். - பாபா