azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The celebration of Dasara festival is meant to purify the actions performed by the Dasendriyas (5 senses of action and 5 senses of perception). Every human being in this world must perform some karma (action). The presiding deity or driving force behind all actions is Devi (also called Durga), who is the personification of energy. She is the bestower of all kinds of energy to perform various actions. Goddess Lakshmi bestows various kinds of wealth like money, food grains, gold, different kinds of objects, vehicles for movement, etc., to human beings so that they can lead a happy life in this world. The third facet of the divine female principle is Saraswati, Goddess of learning and intellect. Thus, the Trinity of Durga (goddess of energy), Lakshmi (goddess of wealth) and Saraswati (goddess of learning and intellect) are worshipped during Dasara. This is the underlying principle of worshipping this Trinity of Durga, Lakshmi, and Saraswati during this 9-day festival. It is essential that people worship all three facets of the Divine. (Divine Discourse, Oct 09, 2008)
Only persons endowed with satwaguna (pure attributes) can have Sakshatkara (a vision of the Divine) and achieve heroic victory. - BABA
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் ஆகிய பத்து இந்திரியங்கள் ஆற்றும் செயல்களைப் தூய்மைப்படுத்துவதற்காகத்தான் தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதமான கர்மாவை செய்யத்தான் வேண்டி உள்ளது. இந்தச் செயல்களை ஆற்றுவதற்கான சக்தியினை அருளும் சக்திஸ்வரூபிணியான தேவியே துர்கா என அழைக்கப்படுகிறாள். பலவிதமான செயல்களை ஆற்றுவதற்கான எல்லா விதமான சக்தியையும் அருள்பவள் அவளே. மனிதர்கள் இந்த உலகில் சந்தோஷமான வாழ்க்கை நடத்துவதற்காக, பலவிதமான செல்வங்களான, தனம், தான்யம், தங்கம், வஸ்து, வாகனங்கள் போன்றவற்றை லக்ஷ்மி அருள்கிறாள். மூன்றாவது, சரஸ்வதியே கல்வி மற்றும் புத்தியின் அதிதேவதையாவாள். இவ்வாறு, சக்தியின் தேவியான துர்கா, செல்வத்தின் தேவியான லக்ஷ்மி, கல்வி மற்றும் புத்தியின் தேவியான சரஸ்வதி ஆகிய மூவரும் இந்த தசரா பண்டிகையின் போது ஆராதிக்கப்படுகிறார்கள். இதுவே நவராத்திரி பண்டிகையின் போது முப்பெரும் தேவியரை வழிபடுவதன் அடிப்படைத் தத்துவமாகும். எனவே திவ்யத்துவத்தின் மூன்று அம்சங்களையும் ஆராதிப்பது மனிதர்களுக்குஅத்தியாவசியம். (தெய்வீக அருளுரை, அக்டோபர்09, 2008)
சத்வகுணம் (தூய குணங்கள்) உள்ளவர்களால் மட்டுமே சாக்ஷாத்காரம் (இறை தரிசனம்) பெற்று வீர வெற்றியை அடைய முடியும். - பாபா