azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Durga represents Prakruti-mata (Mother Nature). To overcome demonic qualities arising out of the influence of Nature, the power of Nature must be invoked. This is the meaning of the worship of Durga. Nature is the protector as well as the chastiser. Lakshmi represents the protecting aspect of Nature. When Durga has destroyed the demonic qualities, Lakshmi purifies the mind. Then there is purity in speech, represented by Saraswati. The worship of Durga, Lakshmi and Saraswati is thus undertaken to get rid of the impurities in the mind and purify one's thoughts, words and deeds. Prakruti (Nature) is the embodiment of the Divine. Man perceives Nature and experiences Nature, but is unable to recognise the Divinity in Nature. To see the external manifestations of the Divine and yet fail to recognise the Divine is a sign of stupidity. (Divine Discourse, Oct 05, 1992)
Has the Lord any particular form or abode? No. He is everywhere. He is you and you are He. - BABA
இயற்கை அன்னையான ப்ரக்ருதி சக்தியே துர்கா மாதா. ப்ரக்ருதியில் இருக்கும் மனிதர்களிடம் ஆர்ப்பரிக்கும் அசுர குணங்களை அழிக்க வேண்டும் என்றால் அதனை ப்ரக்ருதி சக்தியே செய்ய வேண்டும். துர்க்கை வழிபாட்டின் பொருள் இதுவே. காப்பவளும் ப்ரக்ருதியே, தண்டிப்பவளும் ப்ரக்ருதியே. அந்த துர்க்கையின் காக்கும் அம்சமே லக்ஷ்மி ஸ்வரூபமாகும். துர்க்கை அசுர குணங்களை அழித்தவுடன், லக்ஷ்மி மனதைத் தூய்மைப்படுத்துகிறாள். வாக்கின் தூய்மையே சரஸ்வதி ஸ்வரூபம். எனவே, மனதில் உள்ள மாசுக்களை அழித்து, திவ்ய உணர்வுகளை உருவாக்கி, வாக்கை தூய்மைப்படுத்துவதற்காகவே, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தேவியரின் ஆராதனை செய்யப்படுகிறது. ப்ரக்ருதியே தெய்வத்தின் ஸ்வரூபம். மனிதன் ப்ரக்ருதியைக் காண்கிறான், அனுபவிக்கிறான், ஆனால் ப்ரக்ருதியில் உள்ள தெய்வத்தை உணர்வதில்லை. தெய்வத்தின் வெளிப்பாடுகளைக் கண்ட பிறகும் தெய்வத்தை உணராமல் இருப்பது அறிவீனம். (தெய்வீக அருளுரை, அக்டோபர்5, 1992)
இறைவனுக்கு என்று ஒரு குறிப்பிட்ட உருவமோ உறைவிடமோ உள்ளதா? இல்லை. அவன் எங்கும் நிறைந்தவன். அவனே நீங்கள். நீங்களே அவன். - பாபா