azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The lotus in the heart of man pines for the Sun, the splendour of the Lord. But to attain it is hard. Withdrawal of all affection towards the world alone can win it! God is the nearest and dearest entity, but ignorance hides Him from the eye. The love that God bears for man is unequalled; yet, He appears to man as a distant, formidable, unapproachable phenomenon. The stars appear as dots of light, for they are at a great distance from us. So too God appears insignificant or ineffective to many because they are keeping themselves too far from Him. If some people say there is no God, it only means they are at too great a distance to be aware of Him! A green gourd sinks in water; but a dry one floats. Become dry, rid yourselves of attachments, desire, anxieties, and worry. Then you can float unaffected on the waters of change and chance! (Divine Discourse, Oct 17, 1966)
Do not make God modern to suit your fancy. He is neither ancient nor modern. His countenance never changes, nor His Glory. - BABA
உங்களுடைய இதயகமலம் இறைவனுடைய மகத்துவமெனும் சூரியனுக்காக ஏங்குகிறது. ஆனால் அதை அடைவதோ கடினம். உலகத்தின் மீதான அனைத்துப் பற்றுதலையும் விட்டால் மட்டுமே அதை வெல்ல முடியும்! இறைவன் ஒருவனே நமக்கு மிகவும் நெருக்கமானவன், நேசமானவன்; ஆனால் அறியாமை அவனை நம் கண்களிலிருந்து மறைக்கிறது. மனிதன் மீது இறைவன் கொண்டிருக்கும் ப்ரேமை இணையற்றது; ஆயினும் மனிதனுக்கோ அவன் தொலைவில் இருப்பவனாகவும், பேராற்றலால் மலைக்க வைப்பவனாகவும், அணுகமுடியாதவனாகவும் தோன்றுகிறான். நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு ஒளிப் புள்ளிகளாகத் தோன்றுகின்றன, ஏனென்றால் அவை நம்மிடமிருந்து வெகு தொலைவில் உள்ளன. அதுபோலவே பலருக்கும் இறைவன் முக்கியமற்றவனாகவோ அல்லது பயனற்றவனாகவோ தோன்றுகிறான், ஏனென்றால் அவர்கள் அவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள். சிலர் கடவுள் இல்லை என்று சொன்னால், அவர்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியாத தொலை தூரத்தில் இருக்கிறார்கள் என்றே பொருள்! பச்சை சுரைக்காய் நீரில் மூழ்கி விடுகிறது; ஆனால் உலர்ந்த ஒன்றோ மிதக்கிறது. பற்றுதல்கள், ஆசைகள், சஞ்சலங்கள், கவலைகள் ஆகியவற்றை நீக்கி உலர்ந்த சுரைக்காயைப் போல ஆகி விடுங்கள். பின்னர், நீங்கள் பாதிப்பு ஏதுமின்றி சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் மாற்றங்கள் எனும் நீரில் மிதக்க முடியும். (தெய்வீக அருளுரை, அக்டோபர்17, 1966)
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இறைவனை நவீனமானவனாக ஆக்காதீர்கள். அவன் பழமையானவனும் இல்லை, நவீனமானவனும் இல்லை. அவனுடைய அருட்தோற்றமும், மகிமையும் ஒருபோதும் மாறுவதில்லை. - பாபா