azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Happiness and peace are not to be found in wealth, position or power. All these generate only fear and anxiety, not peace and happiness. Today, even highly educated persons don’t recognise this truth, they pose as devotees, and follow the example of their parents. Hiranyakashyapu tried all methods to divert his son, Prahlada, from devotion to God. The child was subjected to every conceivable kind of torture and ordeal: trampling by elephants, biting by cobras and immersion in the sea. Prahlada's devotion to the Lord saved him. Disregarding his perverse father, Prahlada held fast to the Lord. There is nothing great about being a father. No father can rejoice merely when a son is born. Only when people praise the virtues of the son will the father rejoice over his birth. A righteous son redeems himself and his family. Verily, they alone are fit to be called parents who bring up such virtuous children. Prahlada declared, "He alone is a father who tells his son: Child, realise God. He is a true Guru who leads the disciple to God." (Divine Discourse, May 06, 1992)
The only desire one must really have is for God. - BABA
சந்தோஷமும் சாந்தியும் ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் இவற்றில் இல்லை. இவை அனைத்தும் பயத்தையும் கவலையையும் உருவாக்குகின்றனவே அன்றி, சந்தோஷத்தையும் சாந்தியையும் அல்ல. இந்நாளில் மெத்தப் படித்தவர்கள் கூட இந்த உண்மையை உணர்வதில்லை; அவர்கள் தங்களை பக்தர்களாகக் காட்டிக் கொள்வார்கள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றுவார்கள், அவ்வளவுதான். ஹிரண்யகசிபு, தனது மகன் பிரஹலாதனை இறைவன் மீது பக்தி செலுத்துவதிலிருந்து திசைதிருப்ப எல்லா வழிகளிலும் முயன்றான். யானைகளைக் கொண்டு மிதிக்கச் செய்வது, நாகப்பாம்புகளைக் கொண்டு கடிக்கச் செய்வது, கடலில் மூழ்கடிப்பது என எல்லாவிதமான சித்திரவதைக்கும் கொடுமைக்கும் அந்தக் குழந்தை ஆளாக்கப்பட்டான். பிரஹலாதனின் இறைபக்தி அவனைக் காப்பாற்றியது. தனது கொடிய தந்தையைப் பற்றிக் கவலைப்படாமல், பிரஹலாதன் இறைவனை இறுகப் பற்றிக் கொண்டான். ஒரு தந்தையாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு மகன் பிறந்ததாலேயே எந்த தந்தையும் மகிழ்ச்சியடைய முடியாது. மகனின் நற்குணசீலத்தை எப்போது மக்கள் போற்றிப் புகழ்கின்றனரோ அப்போதுதான் பெற்ற தந்தை மகிழ்ச்சி அடைய முடியும். ஒரு நல்ல மகன் தன்னையும் தனது குடும்பத்தையும் கடைத்தேற்றுகிறான். உண்மையில், இப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை வளர்ப்பவர்களே பெற்றோர்கள் என அழைக்கத் தக்கவர்கள். "'குழந்தாய்! இறைவனை உணர்வாயாக. சீடனை இறைவனிடம் இட்டுச் செல்பவரே உண்மையான குரு' என்று தன் மகனுக்கு அறிவுறுத்துபவரே தந்தை என அழைக்கத் தக்கவர்," என பிரஹலாதன் உரைத்தான். (தெய்வீக அருளுரை,மே06, 1992)
உண்மையில் ஒருவருக்கு இருக்க வேண்டிய ஒரே ஆசை கடவுள் மீதான ஆசை மட்டுமே. - பாபா