azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Most men spend their lifetime allotted or earned by them partaking rich, harmful food and drink, and indulge in glamorous, more harmful pastimes. What a pathetic waste of precious life! Though belonging to animal genus, man has much more than his fellow beings in physical, mental and moral equipment. He has memory, language, conscience, reverence, awe, wonder and an inexplicable sense of discontent which is a precursor of detachment. He has the glorious chance of visualising his identity with the Mystery that’s manifested as Universe; but he’s so sunk in ignorance that he behaves like an animal and wallows in grief and vice. It’s as if fire has forgotten its capacity to burn, or water its nature to wet; man has forgotten his nature to reach out into his Godhood, his capacity to seek and secure the Truth of the Universe of which he is a part, his capacity to train himself by virtue, justice, love and empathy to escape from the particular to the Universal. (Divine Discourse, Feb 17, 1966)
Our overindulgence with the body hampers our recognition of our true destination. - BABA
பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குக் கிட்டியுள்ள வாழ்நாளை விலையுயர்ந்த, தீங்கான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதிலும், கவர்ச்சியான, கேடான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் செலவிடுகிறார்கள். விலைமதிப்பற்ற வாழ்க்கையை இவ்வாறு வீணடிப்பது எவ்வளவு பரிதாபகரமானது! மனித இனமும் விலங்கு இனங்களில் ஒன்றாக இருந்தாலும், மனிதன் தனது சக உயிரினங்களை விட உடல், மனம் மற்றும் தார்மீக உபகரணங்களை வெகுவே அதிகமாகக் கொண்டவன். நினைவாற்றல், மொழி, மனச்சாட்சி, பயபக்தி, பிரமிப்பு, ஆச்சரியம் மற்றும் அவற்றிற்கும் மேலாக பற்றின்மைக்கு முன்னோடியான 'விவரிக்க முடியாத ஓர் அதிருப்தி உணர்வையும்' உடையவன். பிரபஞ்சமாக வெளிப்பட்டிருக்கும் அந்த மறைபொருளுடன் தன்னை ஒன்றாக்கி அடையாளப்படுத்திப் பார்ப்பதற்கான மகத்தான வாய்ப்பும் அவனுக்கு இருக்கிறது; ஆனால் அவனோ அறியாமையில் ஆழ்ந்து, ஒரு மிருகத்தைப் போல நடந்து, துயரத்திலும் ஒழுக்கக்கேட்டிலும் உழன்று கொண்டிருக்கிறான். நெருப்பு தன் இயல்பான சுட்டெரிக்கும் திறனையும், தண்ணீர் தன் இயல்பான நனைக்கும் தன்மையையும் மறந்துவிட்டால்?! அது போல, மனிதன் தன் இறைநிலையை அடையவல்ல தன்னுடைய இயல்பையும், தான் ஓர் அங்கமாக விளங்கும் பிரபஞ்சத்தின் உண்மையை அறிந்து தக்கவைத்துக்கொள்ள வல்ல தன் திறனையும், ஒழுக்கம், நீதி, ப்ரேமை, பச்சாதாபம் ஆகியவற்றினால் தன்னைத்தானே பயிற்றுவித்து, தனி மனித நிலையிலிருந்து தப்பித்து விடுபட்டு பரமாத்ம நிலையை எய்தும் திறனையும் மறந்துவிட்டான். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி17, 1966)
உடலுடனான நமது அளவுக்கதிகமான ஈடுபாடு, நமது உண்மையான இலக்கை அறிந்துணர்வதற்கு தடையாக இருக்கிறது. - பாபா