azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
In his childhood, Gandhi used to be full of fear. There was a maid in his home called Rambha. Gandhi disclosed to her how he was always afraid. Rambha told him: "Child, always recite the name of Rama. By chanting Rama's name, your fear will go away." From that time Gandhi was always chanting the name of Rama. The habit of reciting Rama's name, which began in his boyhood, continued right up to the moment of his passing. Nor was that all. By adhering to the chanting of Rama's name, Gandhiji was able to achieve his aim of winning the country's freedom by non-violent means. For such a life of purity and virtue, the parents were primarily responsible. Unfortunately, today, because the parents themselves have no purity of character and lack refined qualities, and do not lead regulated lives, evil practices and wickedness are growing all over the world. (Divine Discourse, May 06, 1992)
If children are to be persons of good character and adhere to good practices, the parents should be of good character and exemplary conduct. - BABA
சிறுவயதில் காந்தி மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தார். அவருடைய வீட்டில் ரம்பா என்று பணிவிடை செய்யும் அம்மா ஒருவர் இருந்தார்கள். காந்தி தான் எப்பொழுதும் பயத்துடனேயே இருப்பதைப் பற்றி அவரிடம் சொன்னார். ரம்பா அவரிடம், “குழந்தாய்! எப்பொழுதும் ராமநாமத்தைச் சொல். ராம நாமத்தை ஜபிப்பதன் மூலம் உன் பயம் போய்விடும்” என்று சொன்னார்கள். அப்போதிலிருந்து காந்தி எப்போதும் ராமநாமத்தை உச்சரித்து வந்தார். சிறுவயதில் தொடங்கிய ராமநாமத்தை உச்சரிக்கும் பழக்கம் அவர் மறையும் வரை தொடர்ந்தது. அதுமட்டுமல்ல. ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம், காந்தியடிகள் நாட்டின் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற தனது நோக்கத்தை அகிம்சை வழியில் அடைய முடிந்தது. அத்தகைய தூய்மையான நல்லொழுக்கம் நிறைந்த வாழ்க்கைக்கு, முக்கியமாக பெற்றோர்களே பொறுப்பாவார்கள். துரதிர்ஷ்டவசமாக இன்று, பெற்றோர்களிடம் தூய்மையான குணநலனும் சீரிய பண்புகளும் இல்லை; முறையான வாழ்க்கையும் நடத்துவதில்லை; எனவேதான் உலகம் முழுவதும் தீய பழக்க வழக்கங்களும் அக்கிரமங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. (தெய்வீக அருளுரை,மே06, 1992)
குழந்தைகள் நற்குண சீலர்களாகவும், நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமானால், பெற்றோர்கள் நற்குணநலனும் முன்மாதிரியான நடத்தையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். - பாபா