azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Don’t shape your conduct with an eye on the opinion of others. Instead, follow the sweet and pleasant promptings of your own awakened conscience, your own inner Self, bravely, gladly, and steadily. Associate yourself with those who are richly endowed with truth. Spend every second of your life usefully and well. If you possibly can, render service to others. Engage yourself in nursing the sick, but when engaged in service, do not worry about the result, the act of service, or the person to whom it is rendered. The service is made holy and pure if you ignore both the good and the bad, and keep on silently repeating in your heart of hearts the mantra that appeals to you. Do not enter upon a task through momentary compulsion of some impulse; the impulse might appear very respectable, but you should not let yourself be dragged by it. You must be always vigilant in this matter, always steadfast and strong! (Ch 12, Prasanthi Vahini)
Action alone can inspire action. Example alone can instruct. Tall talk is a barren exercise. - BABA
மற்றவர்களின் அபிப்பிராயத்தை கருத்தில் வைத்து உங்கள் நடத்தையை வடிவமைக்காதீர்கள். மாறாக, உங்கள் சாத்வீக மனதின், அந்தராத்மாவின், இனிப்பான இனிமையான ஆலோசனைகளைப் பின்பற்றி பயணியுங்கள் - தைரியமாக, சந்தோஷமாக, சீராக. சத்தியசீலர்களுடன் நட்பு பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் செலவிடுங்கள். இயன்ற அளவிற்கு பிறருக்கு உதவுங்கள்; நோயுற்றவருக்கு சேவை செய்யுங்கள். ஆனால், அவ்வாறு சேவையில் ஈடுபடும்போது, அந்தச் சேவையினால் கிடைக்கும் பலன் குறித்தோ, அந்தச் சேவைப் பணியைக் குறித்தோ, அல்லது எந்த நபருக்கு அந்தச் சேவை அளிக்கப்படுகிறது என்பது குறித்தோ கவலைப்படாதீர்கள். நல்லது-கெட்டது இவ்விரண்டையுமே மனதில் கொள்ளாமல், உங்கள் இஷ்ட மந்திரத்தை மிகவே உள்ளார்ந்து உங்கள் இதயக் குகையினுள் அமைதியாக உச்சரித்துக் கொண்டே உங்கள் சேவையைச் செய்தால், அந்தச் சேவை புனிதமாக்கப்படுகிறது, பவித்ரமாகிறது. திடீரெனத் தோன்றும் ஏதோ ஓர் உந்துதலுக்கு அடிபணிந்து எந்தப் பணியையும் செய்யக் கூடாது. அந்த உந்துதல் எவ்வளவு கௌரவமானதாகத் தோன்றினாலும் அதன் பின்னால் போய் விட உங்களை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்போதும் சிரத்தையுடன் உறுதியாய் இருக்க வேண்டும்! (பிரசாந்தி வாஹினி,அத்தியாயம்-12)
ஒரு நற்செயலே இன்னொரு நற்செயலாற்றுவதற்கு உத்வேகமளிக்க முடியும். முன்னுதாரணமாகத் திகழ்பவர்களே அறிவுறுத்த முடியும். ஆடம்பரப் பேச்சு என்பது வீணான முயற்சியாகும். - பாபா