azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Today, man practices meditation and performs japa, but along with them the animal qualities are also allowed to grow. As long as these qualities remain, the observance of religious practices is worthless. All such spiritual practices amount to practising deception on the Divine itself. Therefore, true Sadhana (spiritual practice) means getting rid of one's animal qualities such as cruelty, wickedness, etc. Two qualities make a man alien to God: Asuya and Ahamkara (envy and egoism). Envy and Egoism are two pests which destroy the tree of life. They deprive man of his essential human nature. With these bad qualities, people get divorced from the company of the good. The essential purpose of Vinayaka Chathurthi festival is to teach an individual to avoid the company of bad people and cultivate the company of the good. What does the term ‘Ganapati’ signify? ‘Ga’ means Buddhi (intellect). ‘Na’ means Vijnana (Wisdom). ‘Ganapati’ means one who is the Lord of intellect and wisdom. He is also the Lord of all Ganas (spiritual entities). Ganas also symbolise the senses. Ganapati is thus the Lord of the senses. (Divine Discourse, Aug 31, 1992)
Religious festivals are observed all over the world for the purpose of raising humanity to a higher level of consciousness and conduct. - BABA
இன்று மனிதன் தியானம் செய்கிறான், ஜபங்கள் செய்கிறான், ஆனால் அவற்றுடன் கூடவே மிருக குணங்களையும் வளர்த்துக்கொள்கிறான். இந்த குணங்கள் இருக்கும் வரை, எத்தனை சாதனைகள் செய்தாலும் எல்லாம் பயனற்றதே. இத்தகைய ஆன்மிக சாதனைகள் அனைத்தும் இறைவனையே ஏமாற்றுவதைப் போன்றதாகும். எனவே, உண்மையான ஆன்மிக சாதனை என்பது ஒருவரின் மிருக குணங்களான அநியாயம், அக்கிரமம் போன்றவற்றை விட்டொழிப்பதுதான். இறைவனிடமிருந்து மனிதனை விலக்கி வைக்கும் குணங்கள் இரண்டு. அவையே பொறாமை, அகந்தை. இவை வாழ்க்கை எனும் மரத்தை அரித்து அழிக்கக் கூடிய விஷப்பூச்சிகள் போன்றவையாகும். அவை மானவத்துவத்தையே முற்றிலுமாக அழிக்கக்கூடியவை. இந்த கெட்ட குணங்களால் மனிதர்கள் நல்லோரின் நட்பை இழந்து விடுகிறார்கள். விநாயக சதுர்த்தி பண்டிகையின் முக்கிய நோக்கமே, தீயோரின் சகவாசத்தைத் தவிர்த்து, நல்லோரின் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதை ஒருவருக்கு போதிப்பதாகும். 'கணபதி' என்ற சொல் எதைக் குறிக்கிறது? ‘க’ என்றால் புத்தி. ‘ண’ என்றால் ஞானம். 'கணபதி' என்றால் புத்திக்கும் ஞானத்திற்கும் அதிபதி என்று பொருள். அவரே அனைத்து கணங்களுக்கும் அதிபதியாவார். கணங்கள் புலன்களைக் குறிக்கின்றன. எனவே கணபதியே எல்லா புலன்களுக்கும் அதிபதியாக விளங்குகின்றார். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்31, 1992)
மனித குலத்தை உணர்விலும் நடத்தையிலும் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்துவதற்காகவே மதப்பண்டிகைகள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றன. - பாபா