azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Cast away ignorance - then you are free, liberated from all bonds at that very moment. All spiritual disciplines have this liberation as their goal. Nama-sankirtan (Heart-felt singing of divine names) too, helps you get rid of this basic ignorance. Those who rely on reason alone or on the limited laws of science argue that the repetition of the Name which is, after all, sound, cannot cleanse or correct the mind of man. But the Name is not just 'sound’. You are sitting quietly there, listening, but if someone merely says, 'scorpion’, you get frightened. Or when someone says, the juice of a lemon, your mouth starts watering. You may be sitting before a plateful of delicacies, but if someone speaks of something dirty or disgusting, you refuse the food. When words referring to worldly situations have such a transforming effect on the mind of man, words conveying spiritual and elevated meaning will certainly help in cleansing and correcting the mind of man. (Divine Discourse, Nov 14, 1976)
The Divine Name has to be sung for your own delight, to quench your own thirst, and to appease your own hunger. - BABA
அறியாமையை விலக்கி விடுங்கள் - பிறகு அந்தத் தருணமே நீங்கள் எல்லாப் பந்தங்களிலிருந்தும் விடுதலை பெற்று விடுவீர்கள். அனைத்து ஆன்மிக சாதனைகளும் இந்த மோட்சத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமசங்கீர்த்தனமும் இந்த அடிப்படை அறியாமையைப் போக்க உதவுகிறது. பகுத்தறிவு அல்லது அறிவியலின் வரையறுக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருப்பவர்கள், வெறும் ஒலியாக மட்டுமே இருக்கும் இறைநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால், மனிதனின் மனதைத் தூய்மைப்படுத்தவோ திருத்தவோ முடியாது என்று வாதிடுகின்றனர். ஆனால் இறைவனுடைய திருநாமம் வெறும் ‘ஒலி’ மட்டுமல்ல. உதாரணத்திற்கு, நீங்கள் அங்கே அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; திடீரென யாராவது 'தேள்' என்று சும்மா சொன்னால் போதும், நீங்கள் அரண்டு போய் விடுகிறீர்கள்; அல்லது எலுமிச்சஞ்சாறு என்று யாராவது சொன்னவுடன் உங்கள் நாக்கில் நீர் ஊறுகிறது. நீங்கள் அறுசுவை உணவுகள் நிறைந்த தட்டின் முன்னால் அமர்ந்திருக்கலாம்; யாராவது ஏதாவது அசுத்தமானதை அருவருப்பானதைப் பற்றிப் பேசிவிட்டால், நீங்கள் அந்த உணவை உட்கொள்ள முடிவதில்லை. உலகியலான வார்த்தைகளே மனிதனின் மனதில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் போது, அருளும் பொருளும் செறிந்த வார்த்தைகள் நிச்சயமாக மனிதனின் மனதைத் தூய்மைப்படுத்தவும் திருத்தவும் உதவும். (தெய்வீக அருளுரை, நவம்பர்14, 1976)
உங்களுடைய ஆனந்தத்திற்காகவும், ஆன்ம வேட்கையைத் தணிப்பதற்கும், அருட்பசியைத் தீர்ப்பதற்கும் நாமசங்கீர்த்தனம் செய்யப்பட வேண்டும். - பாபா