azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The path of devotion cannot be defined and demarcated as such and such. Since it has many forms, roads, and types of experience, it is impossible for anyone to describe it accurately and fully. Each devotee gets bliss only through their individual experience. Through the experience of other devotees, at best they can get only encouragement and guidance. The limited soul is immersed in the limitless love of the Lord, and how can words describe that experience called by the Upanishads as the unbroken uniflow of sweetness? One cannot express that state of unbounded devotion in human language. By outward signs that can be cognized by the senses, one can feel that the devotee is in a high state of bliss, but who can gauge the depth of that joy? It has no relation with the senses at all. Devotion has to be realized in your own experience, though great souls can illumine the path a little for you by their examples. With their help, you can grasp something of the path but always remember that words fail when they approach the Beyond. (Ch 9, Prasanthi Vahini)
The basic quality of devotion is the yearning for realising oneness with the Divine. - BABA
பக்தி மார்க்கம் என்பது இப்படிப்பட்டது தான் என வரையறுத்து விவரிக்க முடியாது. இது பல விதங்களாக, பற்பல பாதைகளும் அனுபவ வகைகளும் கூடிய ஒன்றாக இருப்பதால், இதனை எவராலும் துல்லியமாகவும் முழுமையாகவும் அறுதியிட்டு கூற இயலாது. ஒவ்வொரு பக்தரும் அவரவரின் தனிப்பட்ட அனுபவத்தின் மூலம்தான் பேரானந்தம் அடைகிறார்கள். பிற பக்தர்களின் அனுபவங்கள் மூலம் ஒருவர் அதிகபட்சம் ஊக்கம் மட்டும் வழிகாட்டல் பெறலாம். அவ்வளவே. பக்தி என்பது வரையறைக்குட்பட்ட ஜீவாத்மாவை எல்லையற்ற பரமாத்ம ப்ரேமையோடு பிணைக்கக் கூடியதாகும். அப்படிப்பட்ட பக்தி தரும் பரமானந்தம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. இதனையே உபநிஷதங்கள் ‘அகண்ட ஏக ரஸம்’ அதாவது, இடையறாத இனிய ரசம் என்று உரைத்தன. அப்படிப்பட்ட அபார பக்தியின் அனுபவத்தைத் தெளிவாக விவரிப்பது என்பது மனித மொழிக்கு சாத்தியமில்லை. புலன்களால் அறியக்கூடிய வெளிப்புற அறிகுறிகளால், ஒரு பக்தன் உயர்ந்த ஆனந்த நிலையில் இருப்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியுமே தவிர அந்த மகிழ்ச்சியின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? அதற்கும் புலன்களுக்கும் ஒருதுளியும் சம்பந்தமே கிடையாது. மஹான்கள் தங்களின் உதாரணச் செயல்கள் மூலம் உங்களுக்கான பாதையை சிறிது வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும். மற்றபடி, பக்தி என்பது உங்கள் சொந்த அனுபவத்தில் உணரப்பட வேண்டும். மஹான்களின் துணையுடன், பவித்ரமான பக்தியைப் பற்றி ஏதோ கொஞ்சம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இறைநிலையை அணுகும்போது அதனை எடுத்துரைப்பதற்கான திறன் வார்த்தைகளுக்கு இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். (பிரசாந்தி வாஹினி,அத்தியாயம்-9)
பக்தியின் அடிப்படை தன்மை, இறைவனோடு ஒன்றாகிவிட வேண்டுமென்ற பெரும் துடிப்பு.