azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
When a man falls into a well, of what use is it if he controls his voice and his emotions and whispers quietly, "I have fallen into this well, I have fallen into this well. I am in great danger. Please save me"? No one will be able to hear or save him. He must shout full-throated, with all the anguish he is experiencing and with the extreme desire to be saved, "I HAVE FALLEN INTO THE WELL! SAVE ME! SAVE ME SOMEONE!" Then only can he hope to get succour. Similarly, when you are caught in the coils of this world when you have fallen into this deep well of worldly misery, shout with all your might, with all your heart, that you may be saved by God. There is no use muttering faintly and half-heartedly, "Save me, save me; I am floundering in this samsara (worldly life)." When the prayer comes shrieking through the heart, help is assured. (Divine Discourse, Nov 14, 1976)
Wake up every day, to the singing of the Glory of God for if God does not exist, what is it that exists? – BABA
ஒருவன் கிணற்றில் விழுந்தவுடன், "நான் கிணற்றில் விழுந்துவிட்டேன், கிணற்றில் விழுந்துவிட்டேன், நான் பேராபத்தில் இருக்கிறேன், தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று தன் குரலையும் உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு மெல்லிய குரலில் முணுமுணுத்தால் என்ன பயன்? அவன் முணுமுணுப்பதை யாராலும் கேட்கவோ, அவனைக் காப்பாற்றவோ முடியாது. “நான் கிணற்றில் விழுந்துவிட்டேன்! என்னைக் காப்பாற்றுங்கள்! யாராவது வந்து காப்பாற்றுங்கள்!" என்று, தான் அனுபவிக்கும் அனைத்து வேதனைகளுடனும், காப்பாற்றப்பட வேண்டும் என்ற தீவிர தாபத்துடனும் அவன் உரத்த குரலில் கத்த வேண்டும். அப்போதுதான் அவனுக்கு உதவி கிடைக்கும். அதுபோலவே, இந்த உலகத் துன்பமெனும் ஆழமான கிணற்றில் நீங்கள் விழுந்து, அந்தச் சூழலில் சிக்கித் தவிக்கும்போது, உங்கள் முழு சக்தியோடு, முழு மனதோடு கூக்குரலிடுங்கள்; இறைவனால் காக்கப்படுவீர்கள். மாறாக "என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள், நான் இந்த சம்சாரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அரைமனதுடன் ஈனஸ்வரத்தில் முணுமுணுப்பதால் எந்தப் பயனும் இல்லை. பிரார்த்தனை இதயத்திலிருந்து பீறிட்டு எழுமானால் உதவி நிச்சயம்! (தெய்வீக அருளுரை, நவம்பர்14, 1976)
ஒவ்வொரு நாளும் இறைவனின் மகிமை பாடப்படுவதைக் கேட்டுக்கொண்டே விழித்தெழுங்கள்; ஏனெனில், இறைவன் இல்லையென்றால், வேறு என்னதான் இருக்கிறது? - பாபா