azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The letters in the name Krishna - Ka, ra, sha, na and a - are interpreted as signifying glorious attributes of Krishna. 'Ka' represents "Kamala kanta", Lord of Lakshmi. Other meanings given to the letter are: Kamaleswara and Kamala garbha (Various names of the Lord alluding to the Kamala or Lotus flower). He’s also known as Kamala-bandhavudu, Kinsman of the Lotus. The inner significance of these interpretations is that when Divinity manifests within us, the heart blooms like a lotus before the sun. "Ka" thus symbolises Sun principle also. "Ra" represents principle of delight. "Sha" represents Vishnu, source of all wealth and prosperity. "Na" signifies Narasimha avatara, combination of man and animal in an integral unity. "A" reveals Akshara swarupa of the Lord, His imperishable and eternal nature. Going by the letters in the name alone, scholars derived divine attributes of Krishna as an Avatar, as the very embodiment of bliss (Ananda)! (Divine Discourse Aug 27, 1986)
The devotee must acquire the yearning that will melt the heart of God. Even butter which is so soft melts only when heat is applied. - BABA
கிருஷ்ணா என்ற பெயரில் உள்ள எழுத்துக்கள் - க, ர, ஷ, ந, அ ஆகியவை, கிருஷ்ணரின் கல்யாண குணங்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. 'க' என்பது லக்ஷ்மிபதியான ‘கமலாகாந்தனை’க் குறிக்கிறது. இந்த எழுத்திற்கு வழங்கப்படும் மற்ற அர்த்தங்கள்: கமலம் எனும் தாமரை மலரோடு இணைந்து வரும் இறைவனின் பல்வேறு திருநாமங்களாகிய 'கமலேஸ்வரன்', 'கமலகர்பன்' போன்றவை. மேலும் அவன் 'கமலபாந்தவன்' - தாமரையின் உறவினன் என்றும் அழைக்கப்படுகிறான். இந்த விளக்கங்களின் உட்பொருள் என்னவென்றால், தெய்வம் நமக்குள் தோன்றிடும்போது, சூரியனைக்கண்டு மலரும் தாமரையைப் போல இதயமும் மலர்கிறது என்பதாகும். எனவே 'க' என்பது சூரிய தத்துவத்தைக் குறிக்கிறது. 'ர' என்பது ரமிப்பதைக் குறிக்கிறது. 'ஷ' என்பது அனைத்து செல்வச் செழிப்பிற்கும் மூலாதாரமான விஷ்ணுவைக் குறிக்கிறது. 'ந' என்பது மனிதனும் மிருகமும் கலந்த கலவையான நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கிறது. 'அ' என்பது இறைவனின் அழியாத, நித்திய இயல்பான அக்ஷர ஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறது. பெயரில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே ஆனந்த ஸ்வரூபமாகிய கிருஷ்ணாவதாரத்தின் தெய்வீகக் குணங்களை ஆன்றோர்கள் விளக்கிக் கூறுகின்றனர்! (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்27, 198)
இறைவனின் இதயத்தை உருகச் செய்யும் அளவிற்கு பக்தி-சரணாகத உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். மிக மிருதுவான வெண்ணெயை உருக்குவதற்குக் கூட அதனை சூடாக்க வேண்டியுள்ளது. - பாபா