azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
A teacher should have sacred feelings and undertake sacred actions and never entertain bad habits. Why? Because it is quite natural for the students to follow their teacher. The teacher is one who shapes the future of students. So, teachers should never indulge in bad habits like smoking, drinking and eating non-vegetarian food. Students observe the habits of their teachers. If the teacher himself indulges in these bad habits, he will not have the right to advise his students to leave these vices. Not merely this, a teacher should never utter a lie and should never resort to stealing. Teachers should speak words born out of sacred feelings. Virtues, good intellect, truth, devotion, discipline, duty - these are attributes expected of a teacher. Only then will students emulate him. We cannot estimate the contributions of a teacher to society. It is the teacher who can build a society or ruin it. Teachers carry with them many responsibilities. They should have a good mind to discharge these responsibilities. (Divine Discourse, Sep 11, 1998)
The motto, “I shall be the ideal student, for my pupils to emulate,” must inspire the teacher. Such a teacher has surely recognised their duty. – BABA
ஒரு ஆசிரியர் புனிதமான உணர்வுகளோடு புனிதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும்; கெட்ட பழக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஏன்? ஏனெனில் மாணவர்கள் தங்கள் ஆசிரியரைப் பின்பற்றுவது மிகவும் இயல்பானது. மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பவர் ஆசிரியரே. எனவே, ஆசிரியர்கள் புகைபிடித்தல், மது அருந்துதல், புலால் உண்ணுதல் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஆசிரியரே இந்தத் தீய பழக்கங்களில் ஈடுபட்டால், இந்தப் பழக்கங்களை கைவிடுமாறு தனது மாணவர்களுக்கு அறிவுரை கூற அவருக்கு உரிமை இருக்காது. இது மட்டுமல்ல, ஒரு ஆசிரியர் ஒருபோதும் பொய் சொல்லவோ, திருடவோ கூடாது. ஆசிரியர்கள் புனித உணர்வுகளில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளையே பேச வேண்டும். நற்பண்புகள், நற்புத்தி, உண்மை, பக்தி, ஒழுக்கம், கடமை - இவையே ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் பண்புகளாகும். அப்போதுதான் மாணவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள். சமுதாயத்திற்கு ஒரு ஆசிரியரின் பங்களிப்பை நாம் மதிப்பிட முடியாது. ஒரு சமுதாயத்தை உருவாக்கவோ அழிக்கவோ ஒரு ஆசிரியரால் முடியும். ஆசிரியர்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன. இந்தப் பொறுப்புகளை ஆற்றுவதற்கு அவர்கள் நல்ல மனதுடன் இருக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர்11, 1998)
ஒரு ஆசிரியர் ‘நானும் எனது மாணவர்கள் பின்பற்றுவதற்கு ஏற்ற லட்சிய மாணவன்' எனும் நிலையில் இருந்து போதிக்கும்போது தான் அவர்தம் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றியவராகிறார். - பாபா