azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
A synonym for sacrifice (tyaga) is Bali. Bali means offering, dedication, sacrifice and tax levy. What tax? Bali means that which is to be given as an offering in human life. Ancients regarded bali as offering living objects as sacrifice. This isn’t the correct meaning of bali. Bali is recognition of Divinity in man. People pay water tax to authorities who make water available at their dwelling from distant sources. Likewise, people pay dues for the electricity they receive. What tax do you pay to God for implanting divinity in you when you consider yourself to be remote from God because of involvement in worldly affairs? You pay for small amounts of water supply and electrical energy. But what do you pay for the heavy downpour of rain which you get from God? God fills tanks and rivers with water. He provides man with life-giving oxygen in the air he breathes. Sun illumines the whole world with his light. What is the tax we pay for all these services? The arpitam (feeling of offering to God) is the tax. That has been called bali. One should not be frightened by the term bali. It means only offering one's self to the Divine. (Divine Discourse, Sep 05, 1995)
You have to unify your senses, life principles, your speech and offer yourself to God. - BABA
தியாகம் என்பதற்கு இணையான சொல் ‘பலி’. பலி என்றால் காணிக்கை, அர்ப்பணித்தல், தியாகம் செய்தல் மற்றும் வரி செலுத்துதல். என்ன வரி? பலி என்றால் மனித வாழ்க்கையில் காணிக்கையாகக் கொடுக்கப்பட வேண்டியது என்று பொருள். பண்டைய காலத்தவர்கள் உயிருள்ளவற்றைக் காணிக்கையாக அளிப்பதையே பலியாகக் கருதினர். பலி என்பதன் சரியான பொருள் இதுவல்ல. பலி என்றால் மனிதனில் உள்ள தெய்வத்தை உணர்வதாகும். தொலைதூர நீர்நிலைகளிலிருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் குடிநீர் வரி செலுத்துகிறார்கள். அதேபோல், மக்கள் தாங்கள் பெறும் மின்சாரத்திற்கும் வரி செலுத்துகின்றனர். உலக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக இறைவனை விட்டு விலகி இருப்பதாக நீங்கள் கருதும் நிலையில் உங்களுக்குள் தெய்வீகத்தை விதைத்ததற்காக நீங்கள் இறைவனுக்கு என்ன வரி செலுத்துகிறீர்கள்? ஏதோ கொஞ்சம் குடிநீரும் மின்சாரமும் பெற்றதற்கே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். ஆனால் இறைவனிடமிருந்து நீங்கள் பெறும் கனமழைக்கு நீங்கள் என்ன விலை கொடுக்கிறீர்கள்? இறைவன் ஏரிகளையும் ஆறுகளையும் நீரால் நிரப்புகிறான்; மனிதன் சுவாசிக்கும் காற்றில் உயிர் கொடுக்கும் பிராணவாயுவை வழங்குகிறான்; சூரியன் தன் ஒளியால் உலகம் முழுவதையும் ஒளிரச் செய்கிறான்; இந்த சேவைகள் அனைத்திற்கும் நாம் செலுத்தும் வரி தான் என்ன? ‘அர்ப்பிதம்’ அதாவது, இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்ற உணர்வே அந்த வரி. அதுவே பலி என்று அழைக்கப்படுகிறது. பலி என்று சொன்னவுடனே பயப்படக் கூடாது. தன்னையே இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்பதே இதன் பொருளாகும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 05, 1995)
உங்களுடைய புலன்கள், வாழ்க்கைக் கோட்பாடுகள், உங்கள் பேச்சு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உங்களையே கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். - பாபா