azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Training is essential even for the proper pursuit of sense pleasure, for it is the wild untrained search for such pleasure that promotes anger, hatred, envy, malice, and conceit. To train the senses along salutary lines and to hold them under control, certain good disciplines like repetition of the name (japa), meditation (dhyana), fasts (upavasa), worship at dawn and dusk, etc. are essential. But however much their value is praised and their practice recommended, people don’t develop a taste for them. This is because the desire for sensory pleasure has struck deep roots in the human heart. When one is asked to do spiritually salutary acts, one has no inner prompting at all. Still, one shouldn’t give up in despair. Until the taste sprouts, the disciplines have to be strictly followed. This taste is the result of training. No one has it from the very beginning, but constant practice will create the zest! (Ch 1, Bhagavatha Vahini)
The mind must be progressively turned towards God until it merges in God. – BABA
உலக இன்பங்களை முறையாக அனுபவிக்கக்கூட பயிற்சி அவசியம். உலக இன்பங்களுக்கான முறையற்ற பயிற்சியற்ற தேடலே கோபதாபங்கள், வெறுப்பு, பொறாமை, ஆடம்பரம் முதலான துர்குணங்கள் பெருகுவதற்கு மூலகாரணம். உலக இன்பங்களின் மீதான பற்றுதல்களைக் கட்டுப்படுத்தவல்ல சில பவித்ரமான ஆன்மிக சாதனைகளான ஜபம், தியானம், உபவாசம், காலை மாலை இறைவழிபாடு முதலானவற்றில் எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும், அதன் பெருமையை எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் அவற்றின் மீது சுவை ஏற்படுவதில்லை. காரணம், உலக இன்பங்களுக்கான ஆசை இதயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும்போது, பவித்திரமான கர்மாக்களின் மீதான விருப்பம் எழுவதில்லை. அதற்காக விரக்தியில் அவற்றை விட்டுவிடக் கூடாது. அதற்கான சுவை ஏற்படும் வரை ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆரம்பத்தில் மனிதனுக்கு எதன் மீதும் சுவை ஏற்படாது என்றாலும், நிலையான பயிற்சி தானாக பேரார்வத்தை உண்டாக்கும். (பாகவத வாஹினி,அத்தியாயம்-1)
இறைவனுடன் ஐக்கியமாகும் வரை மனதை படிப்படியாக இறைவன் மீது திருப்ப வேண்டும். - பாபா