azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

God is above and beyond the limits of time and space. He is beyond all characteristics and qualities, and no list can describe Him fully. For Him, all beings are equal. The difference between man, beast, bird, worm, insect, and even a god is but a difference of the ‘vessel’ (upadhi). God is like the electric current that flows through various contrivances and expresses itself in many different activities. There is no distinction in the current; it’s the same. To speak of it as different is to reveal one’s ignorance. So too, one single God activates every vessel and gives rise to manifold consequences. The wise see only one uniform current; ignorant feel that they are all distinct. God appreciates the consciousness of unity as the basic motive of acts. He doesn’t appreciate activity itself being one without variety; variety suits various needs. (Ch 1, Bhagavatha Vahini)
The same God shines in and through everyone, whatever be the creed, colour, tribe or territory. – BABA
இறைவன், தேச, கால எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன், குணங்களற்றவன், குணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். அவனுக்கு அனைத்து உயிரினங்களும் சமமே. மனிதன், அசுரன், தெய்வம், பிராணிகள், பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், கிருமிகள் ஆகியவை ரூப நாமங்களில் வெவ்வேறானாலும், ஜீவபாவத்தில் அனைத்தும் ஒன்றே. மின்சாரம், வெவ்வேறு கருவிகளில் பலவிதமாகப் பயன்படுகிறது; அதற்காக மின்சாரத்தில் பேதம் காண்பது அஞ்ஞானமே. அதேபோல, ஒரே பரமாத்மா, ஒவ்வொரு உடலிலும், ஜீவதத்துவத்தை ஒவ்வொரு மார்க்கத்தில், ஒவ்வொரு பலனை வழங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றது. பாமரனின் பார்வையில் அவை வெவ்வேறாகக் காணப்பட்டாலும், பரமாத்மாவின் பார்வையில் அவை சமமே. இறைவன் பாவ அத்வைதத்தை, அதாவது கர்மங்களின் அடிப்படை நோக்கமாக, உணர்வுகளின் ஒருமையை எதிர்பார்க்கிறானே தவிர, கர்மங்களிலேயே ஒருமையை எதிர்பார்க்கவில்லை. (பாகவத வாஹினி,அத்தியாயம்-1)
குலம், நிறம், இனம், தேசம் ஆகியவை எதுவாக இருந்தாலும், ஒரே இறைவன் தான் அனைவருள்ளும், அனைவரின் மூலமாகவும் பிரகாசிக்கிறான். - பாபா