azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! The power of speech gifted to mankind is very important and majestic. It gives him all the wealth. We should talk sweetly and softly in an acceptable manner. Only such sweet talk will give us affluence and prosperity. Words can win many friends and relations, and even kingdoms. We may have a few relations, but with our sweet talk, we can develop good relationships with the entire world. Sacred talk will give us all education and elevate us to exalted positions. We should also know that words spoken with bad thoughts and feelings will not only lead you to bondage but also put you to death. Good and bad are present in words we utter. For the one with sweet words, the universe itself becomes the mansion! He will feel the caste of humanity prevailing everywhere. To attain Divinity, one must take to the spiritual path. Good words coupled with humility will take you to higher levels! (Divine Discourse Sep 11, 1998)
Words can plunge you into prison or release you into freedom. - BABA
ப்ரேமையின் திருவடிவங்களே! மனித குலத்திற்கு அருளப்பட்ட பேச்சாற்றல் மிக முக்கியமானது, சிறப்பானது ஆகும். அது அவனுக்கு எல்லா செல்வங்களையும் தருகிறது. இனிமையாகவும் இதமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பேச வேண்டும். இத்தகைய இனிய பேச்சுதான் நமக்குச் செழுமையையும் வளத்தையும் தரும். வார்த்தைகள் பல நண்பர்களையும் உறவுகளையும், ஏன் ராஜ்ஜியங்களையும் கூட வென்றிட வல்லது. நம்மிடையே சில உறவுகள் மட்டுமே இருக்கலாம், ஆனால் நம் இனிய பேச்சால், உலகமனைத்துடனும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள முடியும். புனிதமான பேச்சு நமக்கு எல்லாக் கல்வியையும் தந்து நம்மை மேன்மையான நிலைக்கு உயர்த்தும். கெட்ட எண்ணங்களுடனும் உணர்வுகளுடனும் பேசப்படும் வார்த்தைகள் உங்களை பந்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உயிரையே மாய்க்க வல்லது என்பதையும் நாம் அறிய வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இனிய சொற்களைப் பேசுபவருக்கு இந்த பிரபஞ்சமே மாளிகையாகிறது! எங்கும் மனிதகுலம் ஒன்றே வியாபித்திருப்பதாக அவர் உணர்வார். தெய்வத்தை அடைவதற்கு ஒருவர் ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டும். பணிவுடன் கூடிய நல்ல வார்த்தைகள் உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்! (தெய்வீக அருளுரை, செப்டம்பர்11, 1998)
வார்த்தைகளால் உங்களை பந்தத்தில் ஆழ்த்தவோ அல்லது பந்தவிமோசனம் அளிக்கவோ முடியும். - பாபா