azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Avoid in your behaviour, actions, and speech all traces of the desire to cause pain to others, to insult others, or to cause loss or misery to others. Find out the best means of reforming yourself thus; practice this type of living, desist from injury to yourself and your own good, and always walk in the path of truth. That is verily the path of beauty; that is conduct which is really charming! For this, large-heartedness is essential. People can acquire it only if they have (1) an inborn desire (samskara) for it and (2) devotion in every act. Through devotion to the Lord, one gets humility, fear of sin, and faith in scripture. Through these qualities, the littleness of the mind is wiped out and people become large-hearted. Therefore, Oh ye seekers! First, direct your efforts toward acquiring faith in God and having fear of sin. These two will promote humility; and, remember, humility is peace! (Ch 15, Prasanthi Vahini)
A true human being is one who embodies good habits, helps ever, and hurts never. - BABA
உங்கள் நடத்தை, செயல்கள் மற்றும் பேச்சில், மற்றவர்களுக்கு பாதிப்புண்டாக்க வேண்டும், பிறரை அவமதிக்க வேண்டும் அல்லது பிறருக்கு நஷ்டம் கஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையின் அனைத்து தடயங்களையும் தவிர்த்திடுங்கள். இவ்வாறு, உங்களை நீங்களே சீர்திருத்துவதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிந்து, இந்த வகையான வாழ்வு முறையைப் பயிற்சி செய்து, உங்களுக்கும் உங்கள் சொந்த நலனுக்குமே தீங்கு விளைவிப்பதைத் தவிர்த்து, எப்போதும் சத்தியத்தின் பாதையிலேயே நடந்திடுங்கள். அதுவே அழகிய வாழ்க்கைப்பாதை; உண்மையான போற்றத்தக்க நடத்தை! இதற்கு, மிகப்பெரிய மனசு அவசியம். அப்படிப்பட்ட மனதை அடைந்திட - முதலாவது: முற்பிறவிகளின் புண்ணியபலன் மூலம் இயல்பாகவே உள்மனதில் பிறக்கும் அதற்கான ஆசை (ஸம்ஸ்காரம்); இரண்டாவது: ஒவ்வொரு செயலிலும் பக்திபூர்வமாக இருத்தல் - இவையிரண்டும் இருந்தால் மட்டுமே முடியும். கடவுள் பக்தியின் மூலம், ஒருவர், பணிவு, பாபபீதி, வேதங்களில் நம்பிக்கை ஆகிய நற்குணங்களைக் கிடைக்கப் பெறுகிறார். இந்தக் குணங்கள் மூலம், சிறுமை மனதைக் களைந்து, மக்கள் பெரிய மனதுடையவர்களாக மாறுகிறார்கள். ஆதலால், ஆன்மிக சாதகர்களே! முதலில், கடவுள் நம்பிக்கையை வளர்த்துக் கொளவதற்கும், பாப பீதி கொண்டிருப்பதற்கும், உங்கள் முயற்சிகளை வழிநடத்துங்கள். இவ்விரண்டும் பணிவை உங்களில் ஊக்குவித்து வளர்க்கும். பணிவே சாந்தி! - இதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். (பிரசாந்தி வாஹினி,அத்தியாயம்-15)
நன்னடத்தையின் திருவுருவாகி, ஒருபொழுதும் புண்படுத்தாமல், எப்பொழுதும் உதவி செய்து கொண்டிருப்பவரே உண்மையான மனிதராவார். - பாபா