azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

You must know how to pass every day in the best possible way without wasting precious time. You must also know that everything happens according to the Divine Will. The Divine cannot be expected to act according to your thoughts or desires. God is fully aware of the needs of the family, country, and the world at large, and confers the requisite benefits at the appropriate time. Let us take an example of how one gift of nature proves beneficial to some people, while it is not so for some others. Suppose a marriage function is being celebrated in one house, and the family prays for the rain to stop to facilitate them. At the same time, a neighbour who has cultivable land, which is dry, prays for the rain to continue to pour in torrents to facilitate his cultivation of the land. God is impartial and will not submit to a particular individual's needs. He weighs the needs of all and maintains a balance. (Divine Discourse, Apr 21, 1998)
A true devotee leads a sacred life which is sanctified when he faces obstacles and problems with full faith in the Divine. - BABA
விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்காமல் ஒவ்வொரு நாளையும் சிறந்த முறையில் எப்படிக் கழிப்பது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அனைத்தும் இறைவனது சங்கல்பத்தின்படியே நடக்கும் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப இறைவன் செயல்படுவான் என்று எதிர்பார்க்க முடியாது. இறைவன், குடும்பம், நாடு மற்றும் உலகத்தின் தேவைகளை முழுமையாக அறிந்தவன்; தேவையான நன்மைகளை உரிய நேரத்தில் செய்பவன். இயற்கையின் ஒரு பரிசு சிலருக்கு எவ்வாறு நன்மை பயக்கிறது என்பதையும், அதேசமயம் வேறு சிலருக்கு அவ்வாறில்லை என்பதையும் விளக்க ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு வீட்டில் திருமண விழா கொண்டாடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பம் தங்களுக்கு வசதியாக இருக்க வேண்டுமே என்பதற்காக மழை வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறார்கள். அதே சமயம், வறண்டு போன விவசாய நிலம் உள்ள அண்டை வீட்டுக்காரர், தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்கு ஏற்ப அடைமழை தொடர்ந்து பொழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். இறைவன் பாரபட்சமற்றவன்; ஒரு குறிப்பிட்ட நபரின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய மாட்டான். அனைவரின் தேவைகளையும் சீர்தூக்கிப் பார்த்து சமநிலையைப் பேணுபவன் அவன். (தெய்வீக அருளுரை, ஏப்ரல்21, 1998)
ஒருவன் இறைவன் மீதான பரிபூரண நம்பிக்கையுடன் தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளும்போது அவன் வாழ்க்கை புனிதமடைகிறது; ஒரு உண்மையான பக்தன் அத்தகைய புனிதமான வாழ்க்கையையே வாழ்கிறான். - பாபா