azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
To light the lamp of Divinity in you, you have to get rid of ego, attachment, and hatred and develop love. I am the ideal example in this regard. How? During darshan, you remain seated where you are and I Myself come to you, bend My back, stretch My hand, and take your letters. Instead, out of ego, I could as well sit at one place and tell you to come to Me and give your letters. You would certainly do that. I don’t do like that because I don’t have even a trace of ego. Just as I come to you and serve you, you also should go to others and serve them without ego. This is the ideal I want to demonstrate. I act in such an egoless manner to set an ideal before you. (Divine Discourse, Aug 22, 1996)
Your ego and attachment are verily the noose that holds your neck tightly and causes your death. - BABA
உங்களிடம் உள்ள திவ்யத்துவம் எனும் ஜோதி ஒளிர்வதற்கு, நீங்கள் அகந்தை, பற்றுதல், வெறுப்பு ஆகியவற்றை விட்டொழித்து, ப்ரேமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நானே ஒரு இலட்சிய உதாரணம். தரிசனத்தின் போது, நீங்கள் எங்கு அமர்ந்திருக்கிறீர்களோ அங்கேயே இருக்கிறீர்கள்; நானே உங்களிடம் நடந்து வந்து, குனிந்து, கைநீட்டி, உங்களுடைய கடிதங்களைப் பெற்றுக்கொள்கிறேன். அதற்கு பதில், அகந்தையினால் நான் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, உங்களுடைய கடிதங்களை என்னிடம் வந்து கொடுக்கச் சொல்லலாம். என்னால் அப்படிச் செய்ய முடியும். ஆனால் என்னிடம் இம்மியளவும் அகந்தை இல்லாததால் அவ்வாறு செய்வதில் எனக்கு விருப்பமில்லை. நான் எவ்வாறு உங்களிடம் வந்து சேவை செய்கிறேனோ, அதேபோல நீங்களும் மற்றவர்களிடம் சென்று அகந்தையின்றி அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இந்த இலட்சியத்தைத்தான் நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். உங்கள் முன் ஒரு இலட்சியத்தை நிலைநாட்டவே, நான் இப்படிப்பட்ட அகந்தையற்ற விதத்தில் செயலாற்றுகிறேன். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்22, 1996)
உங்களுடைய அகந்தையும் பற்றுதலும் உங்கள் கழுத்துக்கு பாசக்கயிறாகவே மாறி, உங்கள் வாழ்வையே முடித்துவிடுகிறது.