azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
A beggar calls himself an anatha (one without a master or anyone to support him), while asking for alms. This is not correct. For everyone, God is the Natha (support or master). It is only God who is Anatha, because there is no one above Him. Tyagaraja considered Rama as his saviour and protector and did not care for the wealth of the world. He considered service at Rama's feet as the greatest treasure. Kabir was a poor weaver and he used to share his food with others. When the King sent gold and provisions to him through his officials, Kabir exclaimed: "For whom has the king sent all these?" They said: "The King sent these things to you as you are anatha (helpless)." He replied: "I am not without support. Rama is my Natha (master). You cannot say I have none to support me. It is only Rama who has none to support Him. Give these to Him." Kabir said, Anatha means God. We should understand the correct meanings of words. (Divine Discourse, May 20, 1993)
When you have love in your heart, you do not need to worry about anything. God will always be with you, in you, around you and will look after you in all respects. - BABA
ஒரு பிச்சைக்காரன் நம் வீட்டுக்கு வந்து "அம்மா! நானொரு அநாதை. எனக்கு கொஞ்சம் சோறு போடுங்கள்" என்று கேட்கிறான். தான் அநாதை என்று சொல்வது சரியல்ல. அனைவரின் நாதனும் அதிபதியும் இறைவனே. இறைவன் ஒருவனே அநாதை; ஏனென்றால் அவனுக்கு மேலே யாரும் இல்லை. தியாகராஜர் ஸ்ரீராமனை உயிராகக் கருதி, 'நிதி மிக சுகமா, ஈஸ்வர சந்நிதி மிக சுகமா' என்று கேட்டு, எனக்கு ஹரிதான் வேண்டும், சிரி எனும் செல்வம் வேண்டாமென உதறித்தள்ளினார். கபீர் ஒரு ஏழை நெசவாளி; இருந்தாலும் வீடு தேடி வருபவர்களுக்கு பிச்சை எடுத்தாவது உணவை வழங்குவது வழக்கம். ஒருநாள் அரசர், தனது சிப்பாய்களின் மூலம் அனாதையான அவருக்கு தனம், தானியம், செல்வத்தை அனுப்பினார். கபீர் "யாரய்யா இதையெல்லாம் அனுப்பியது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நீங்கள் ஆதரவற்ற அநாதை என்பதால் அரசர் இவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளார்" என்றனர். அவர் அதற்கு, "நான் அநாதை இல்லை. ஸ்ரீராமச்சந்திரனே என் நாதன். எனக்கு நாதன் இருப்பதால் நான் அநாதை இல்லை. ஸ்ரீராமனுக்கு மட்டுமே வேறு நாதன் இல்லை. எனவே அவரே அநாதை; அவருக்கே இவற்றை சமர்ப்பணம் செய்யுங்கள்” என்று பதிலளித்தார். அநாதன் யார் என்றால் இறைவனே என்று பொருள். நாம் வார்த்தைகளின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். (தெய்வீக அருளுரை, மே 20, 1993)
உங்கள் இதயத்தில் ப்ரேமை இருந்தால், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இறைவன் எப்பொழுதும் உங்களுடனும், உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் இருந்து, எல்லாவிதத்திலும் உங்களைப் பார்த்துக் கொள்வான். - பாபா