azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

One should understand the great significance of human life, which is superior to that of all other species. Because of the body consciousness, man is forgetting his inherent Divinity. You study a great deal about Prakriti (Nature) and worldly things, and lead an artificial life, without realising that the heart is the seat of Divinity. If you allow bad feelings to enter the heart, it will be polluted and the Divine will have no place therein. The whole world today is replete with pollution of not only the individual senses but also the five elements. The air is impure; water is polluted and everything you see or hear or touch is polluted. How can you expect to have peace in the world? Vedanta teaches that we should go beyond the mind and realise the inner vision to prevent bad feelings entering the heart and polluting the seat of God. (Divine Discourse, May 20, 1993)
It is only when man has pure feelings within him that his actions can be pure. When he is polluted within, all his actions will be impure. - BABA
மற்ற எல்லா உயிரினங்களையும் விட உயர்ந்த மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். உடல் பற்றின் காரணமாக, மனிதன் தன் உள்ளார்ந்த தெய்வீகத்தை மறந்து விடுகிறான். இதயமே இறைவனின் இருப்பிடம் என்பதை உணராமல், நீங்கள் ப்ரக்ருதி (இயற்கை) மற்றும் உலக விஷயங்களைப் பற்றி பெரும் அளவில் படித்து, செயற்கையான வாழ்க்கையை நடத்துகிறீர்கள். கெட்ட உணர்வுகளை இதயத்திற்குள் நுழைய அனுமதித்தால், அது மாசடைந்து விடும்; பின்னர் இறைவனுக்கு அதில் இடமிருக்காது. இன்று உலக முழுவதிலும் ஐம்புலன்கள் மட்டுமின்றி பஞ்சபூதங்களும் மாசடைந்துள்ளன. காற்று தூய்மையற்றதாக இருக்கிறது, நீர் மாசடைந்துள்ளது மற்றும் நீங்கள் பார்ப்பவை, கேட்பவை, தொடுபவை அனைத்தும் மாசடைந்துள்ளன. பின்னர், உலகில் சாந்தி நிலவ வேண்டுமென நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? இதயத்தில் கெட்ட உணர்வுகள் நுழைந்து, இறைவனின் இருப்பிடத்தை மாசுபடுத்துவதைத் தடுப்பதற்கு, நாம் மனதிற்கு அப்பாற்பட்டுச் சென்று அகப்பார்வையை வளர்த்துக் கொள்ளவேண்டுமென வேதாந்தம் போதிக்கிறது. (தெய்வீக அருளுரை,மே20, 1993)
மனிதனுக்குள் தூய்மையான உணர்வுகள் இருந்தால் மட்டுமே அவனது செயல்கள் தூய்மையானவையாக இருக்கும். அவனுடைய அகம் மாசடைந்திருந்தால், அவனது செயல்கள் அனைத்தும் தூய்மையற்றதாகவே இருக்கும். - பாபா