azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Vedas and Puranas deserve to be read and heard. God’s name is to be recited and listened to. For some ailments, medicines are prescribed for external application while for others, they are given for internal use. But for this universal ailment of the cycle of birth and death (bhava-roga), listening to spiritual discourses (sravana), singing God’s name (kirtana), and other medicines are prescribed for external and internal use. One has to utter as well as hear the Lord’s name. An aspirant might win God’s grace, the guru’s grace, and the grace of devotees of the Lord, but all this grace is of no avail if another grace is not secured, the grace of their own inner consciousness (antah-karana). Without this grace, the aspirant falls into perdition, for all the rest are of no account whatsoever. (Ch 21, Prema Vahini)
In the pursuit of the spiritual path, first of all the mind should be brought under control. - BABA
வேதங்களும் புராணங்களும் பாராயணம் செய்வதற்குத் தகுந்தவை, கேட்பதற்கும் தகுந்தவை. இறைவனுடைய திருநாமத்தை வாயாரச் சொல்ல வேண்டும், காதாரக் கேட்க வேண்டும். நோய்களின் நிவாரணத்திற்காக சில மருந்துகள் வெளிப்புறத்தில் பூசுவதற்கும், சிலதை உட்கொள்வதற்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. அவ்வாறே, இந்த பவரோகம் எனும் பிறப்பு-இறப்பு என்ற நோய் சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கு, ஸ்ரவணம், கீர்த்தனம் இவ்விரண்டையும் செய்ய வேண்டும். ஒருவர் இறைவனது திருநாமத்தை உச்சரிப்பதோடு, கேட்கவும் வேண்டும். ஓர் ஆன்மிக சாதகன், இறையருள், குருவருள், பக்தர்களின் அருள் ஆகியவற்றை அடைவதில் வெற்றி பெறலாம், ஆனால் இவ்வெல்லா அருளும் பயனற்றதாகும், மற்ற ஓர் அருள் கிடைக்காமல் போனால், அது அவர்களின் சொந்த உள் உணர்வின் (அந்தக்-கரணத்தின்) அருள். இந்த ஓர் அருள் இல்லையென்றால், ஓர் ஆன்மிக சாதகன் அழிவினில்தான் விழுகிறார்; ஏனெனில், மற்றவை யாவும் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப் படமாட்டாது, ஏதாயினும். (ப்ரேம வாஹினி,அத்தியாயம்-21)
ஆன்மிகப் பாதையில் செல்வதற்கு, முதன்முதலில் மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். - பாபா