azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
If one escapes only from the responsibilities of life in society, peace cannot be enjoyed; it will never come. But, if desires (vasanas) are controlled and eliminated, there is no need at all to run away. Content with what one has, refusing to be worried by the absence of things that one hasn’t, and trying as far as possible to reduce and eliminate desires and passions and hatreds, one should strive to cultivate truth, righteousness, love, and patience (sahana). Cultivate them, and at the same time, practise them systematically. This is the real duty of humanity, the real purpose of human birth. If the above-mentioned four qualities are cultivated and practised by each, there will be no envy between people, selfish grabbing will cease, the interests of others will be respected, and world peace can be stabilised! (Ch 15, Prasanthi Vahini)
Renunciation is to be able to consider sorrow and joy with the same vision. - BABA
சமுதாயத்தில் உள்ள ஒருவர் வாழ்க்கையின் பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடிவிடுவதால் சாந்தியை அனுபவிக்க முடியாது; அது ஒருபோதும் வராது! ஆனால், ஆசைகளைக் கட்டுப்படுத்தி நீக்கிவிட்டால் ஓடி ஒளியவேண்டிய அவசியமில்லை. தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து, தன்னிடம் இல்லாத பொருட்களுக்காகக் கவலைப்படாமல், முடிந்த அளவு ஆசை, காமம் மற்றும் வெறுப்பைக் குறைத்து, அவற்றை நீக்கி அழிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்; சத்யம், தர்மம், ப்ரேமை, பொறுமை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு, முறையாக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே மனிதனின் உண்மையான கடமையாகும்; பிறவி எடுத்ததன் காரணமுமாகும். ஒவ்வொருவரும் மேற்கூறிய நான்கு பண்புகளை வளர்த்துக்கொண்டு கடைப்பிடித்தால், ஒருவருக்கொருவர் இடையே வெறுப்பில்லாமல், சுயநலத்தை அறவே ஒழித்து, பிறர் நலத்தை மேம்படுத்தி, உலக அமைதியை நிலைநாட்ட முடியும். (பிரசாந்தி வாஹினி,அத்தியாயம்-15)
சுகதுக்கத்தை சமமாக பாவிப்பதே துறவு எனப்படும். - பாபா