azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The true devotee always dwells in God, and has no time to know or feel welfare or worries. Attaining the Lord is the one and only idea in the mind. It is hard to understand this nature, except by examples. A small child runs about in fear shouting, “mommy, mommy!”, searching for its missing mother. The mother takes the child in her arms and places it on her lap. The child stops crying and is free from all fear. But can the child calculate and find out the difference between its previous state and its present relief? No. Nor is it necessary to do so. Also, the one who seeks always to serve the Lord will immerse themself in God when the glorious chance comes. In that Presence, no anxiety or trouble can disturb a person. Anxiety and trouble pester only until the moment of attainment; then, all attention is diverted to the experience. The past struggle and travails are forgotten. Therefore, aspirants and devotees must ignore and forget all the thousand troubles that have gone before and be engaged only in the thoughts of the Lord. (Ch 8, Prasanthi Vahini)
Human birth is meant to experience divinity and not to crave for fleeting pleasures. - BABA
ஒரு உண்மையான பக்தனின் எண்ணங்கள் முழுவதும் எப்போதும் இறைவன் மீதே இருக்கும். தன்னுடைய சௌக்கியம், கஷ்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பக்தனுக்கு நேரமே இருக்காது. இறைவனை அடைவதைத் தவிர வேறெந்த எண்ணமும் தோன்றாது. தகுந்த உதாரணங்கள் இன்றி இந்த இயல்பைப் புரிந்து கொள்வது கடினம். ஒரு சிறு குழந்தை காணாமல் போன அதன் தாயைத் தேடிக்கொண்டு, “அம்மா! அம்மா!” என்று பயத்தில் அலறி அழுதுகொண்டு அலைகிறது. தாய் அந்தக் குழந்தையைத் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டு, அவளுடைய மடியில் வைத்துக் கொள்கிறாள். குழந்தை அழுவதை நிறுத்திவிட்டு பயமற்று இருக்கிறது. தன்னுடைய முந்தைய நிலைக்கும், தனது தற்போதைய கவலையற்ற நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குழந்தையால் கணக்கிட்டுப் பார்க்க முடியுமா? முடியாது! அவ்வாறு செய்யவேண்டிய அவசியமும் இல்லை! எப்போதும் இறைவனுக்கு சேவை செய்ய விழையும் ஒருவர் அந்த மகத்தான வாய்ப்பு கிட்டும் போது இறைவனில் மெய்மறந்து விடுவார்கள். அந்த சாந்நித்தியத்தில் எந்தக் கவலையும் துன்பமும் ஒருவரை பாதிக்க முடியாது! கவலையும் பிரச்சினையும் அந்த நிலையை அடையும் தருணம்வரை மட்டுமே தொந்தரவு செய்கின்றன; பின்னர், கவனமனைத்தும் அந்த அனுபவத்தின் பக்கம் திரும்பி விடுகிறது. முந்தைய போராட்டங்களும் துன்பங்களும் மறந்து போய்விடுகின்றன. எனவே, அனைத்து ஆன்மிக சாதகர்களும் பக்தர்களும், தாங்கள் முன்னர் அனுபவித்த ஆயிரக்கணக்கான அனைத்து துன்பங்களையும் உதாசீனப்படுத்தி மறந்துவிட்டு, இறைவனைப் பற்றிய சிந்தனைகளில் மட்டுமே ஈடுபட்டு இருக்க வேண்டும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-8)
மானிடப்பிறவி என்பது தெய்வத்துவத்தை உள்ளனுபவிப்பதற்காக கிடைத்துள்ளதே தவிர தோன்றி மறையும் சுகங்களுக்காக ஏங்குவதற்கு அல்ல. - பாபா