azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Man has to progress every moment; a stagnant style of living does not benefit him. How long can we tolerate a boy staying in the same class at school? He must proceed from one class to the next higher one, year after year. The spiritual aspirant too should not stagnate in one sadhana. From the master-servant relationship with God, he must advance to the body-limb relationship and reach the stage of merging in the All-inclusive One - that is to say, from dualism, through conditioned non-dualism to monism or non-dualism. In the initial stages, man worships portraits or idols of God in all the sixteen forms of reverential homage such as preliminary concentration (dhyanam), invocation (avahanam), and so on. Good character, good conduct and virtuous life are essential qualifications for the aspirant. Of course, floral offerings are commendable. The sixteen items are good. But, one should progress from this stage to the awareness of the Atma. (Divine Discourse, Oct 06, 1981)
When you claim to be Sai devotee, justify the claim by cultivating flowers of virtues and offering them to God. – BABA
மனிதன் ஒவ்வொரு கணமும் முன்னேற வேண்டும்; தேக்கமுற்ற வாழ்க்கை முறை அவனுக்கு உகந்ததல்ல. பள்ளியில் ஒரு மாணவன் ஒரே வகுப்பிலேயே இருப்பதை எவ்வளவு காலம் நாம் சகித்துக் கொள்ள முடியும்? அவன் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த உயர்வகுப்பிற்கு ஆண்டுதோறும் முன்னேறிச் செல்ல வேண்டும். ஆன்மிக சாதகனும் ஒரே சாதனையிலேயே நின்று விடக்கூடாது. அவன், இறைவனோடு எஜமானன்-சேவகன் என்ற உறவு நிலையிலிருந்து, உடலின் பிரிக்கமுடியாத அங்கம் என்ற நிலைக்கு முன்னேறி, பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலையை அடைய வேண்டும்; அதாவது, த்வைத நிலையிலிருந்து, விசிஷ்டாத்வைத நிலைக்கும், பின் அதிலிருந்து அத்வைத நிலைக்கும் சென்றடைய வேண்டும். ஆரம்ப கட்டங்களில் மனிதன், இறைவனின் திருவுருவப்படங்கள் அல்லது விக்ரஹங்களை, தியானம், ஆவாஹனம் போன்ற சோடச உபசாரங்கள் எனும் பதினாறு விதமான ஆராதனை முறைகளில் போற்றி வழிபடுகிறான். நற்குணம், நன்னடத்தை, நல்லொழுக்கமான வாழ்க்கை ஆகியவை ஆன்மிக சாதகனின் இன்றியமையாத தகுதிகளாகும். மலர்களால் அர்ச்சிப்பது போற்றத்தக்கதே. பதினாறு விதமான ஆராதனைகளும் சிறந்தவையே. ஆனால், இந்த நிலையிலிருந்து ஆத்மாவை உணரும் நிலைக்கு ஒருவர் முன்னேற வேண்டும். (தெய்வீக அருளுரை, அக்டோபர்06, 1981)
நல்லொழுக்கங்கள் எனும் மலர்களை வளர்த்துக் கொண்டு அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்தால் மட்டுமே நீங்கள் உங்களை சாயி பக்தர்கள் என்று கூறிக்கொள்ள முடியும். - பாபா