azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Each religion emphasises one Name and one Form of God and recommends them for acceptance. Some even insist that God has no other Name or Form. But, the Reality is beyond name and form, It has Akshara (the indestructible, eternal) as the characteristic and Om as the Form. You reach the Akshara stage, the stage of attributeless unity, in three steps of Sadhana: (i) I am Thine, (ii) Thou art mine, and (iii) Thou art myself. Through Sadhana, one must transcend the duality of I and You. I is only the reflection of You in this body. The consummation is reached when duality is superseded. That is why it has been declared, "It is good to be born in a church; but, it is not good to die in it." That is to say, before life ends one must go beyond the limits set by institutionalised religion and reach the vast limitless expanse of the Aathman, which pervades all. (Divine Discourse, July 29, 1969)
God is beyond all ages and all forms. Only love is His true form. The same love is present in all forms that you see. - BABA
ஒவ்வொரு மதமும் இறைவனுக்கு ஒரு நாமத்தையும் ஒரு ரூபத்தையும் வலியுறுத்தி, அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கிறது. சிலர் இறைவனுக்கு எந்த நாமமோ ரூபமோ இல்லை என்று கூட வலியுறுத்திச் சொல்கின்றனர். ஆனால், மெய்ப்பொருள் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டது; அக்ஷரம் - அதாவது அழிவில்லாதது, சாசுவதமானது என்ற இயல்பையும், ‘ஓம்’ என்ற ப்ரணவ ரூபத்தையும் உடையது. நீங்கள் ‘அக்ஷரம்’ எனும் நிர்குணமான ஏகத்துவ நிலையை ஆன்மிக சாதனையின் மூன்று படிகளில் அடைகிறீர்கள்: (1) நான் உன்னுடையவன் (2) நீ என்னுடையவன் (3) நீயே நான். ஆன்மிக சாதனையின் மூலம் ஒருவர் ‘நான்’, ‘நீ’ என்ற இருமை நிலையைக் கடந்து செல்ல வேண்டும். ‘நான்’ என்பது இந்த தேகத்தில் உள்ள ‘நீ’ என்பதன் பிரதிபலிப்பே. இந்த பூரணத்துவம், இருமை நிலையைக் கடந்து சென்றவுடன் அடையப்படுகிறது. அதனால்தான், “தேவாலயத்தில் பிறப்பது நல்லது; ஆனால் அதில் இறப்பது நல்லதல்ல” என்று கூறப்படுகிறது. அதாவது, வாழ்க்கை முடிவடைவதற்கு முன் ஒருவர் மதத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரந்த எல்லையற்ற ஆத்ம நிலையை அடைய வேண்டும். (தெய்வீக அருளுரை,ஜூலை29, 1969)
இறைவன் எல்லாக் காலங்களுக்கும் ரூபங்களுக்கும் அப்பாற்பட்டவன். ப்ரேமையே அவனுடைய உண்மையான ரூபம். அதே ப்ரேமைதான் நீங்கள் காணும் அனைத்து ரூபங்களிலும் இருக்கிறது. - பாபா