azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Every object in nature, every incident in time, is really speaking, teaching you a lesson. Dakshinamurty was one morning walking in slow steps along the sea-beach. He looked at the waves and drew a lesson therefrom. The waves were slowly and systematically, carrying towards the shore a bit of straw, passing it on from one crest to another, until it was deposited on land! The sea is a broad expanse, it is deep and mighty. But yet, it is constantly engaged in cleaning itself from all extraneous things. It knows that, you must not neglect a desire, for the simple reason that it is a menial straw. Force it back, on to the shore, where it can do no harm. Eternal vigilance is the price of peace and happiness. Dakshinamurty exclaimed, "Wonderful! The Sea has taught me a great lesson." - the lesson that danger lurks, when desire raises its head. (Divine Discourse, July 29, 1969)
By decreasing our desires and by promoting sacrifice in us, we will be able to rise to the heights of glory and do good for our country.
இயற்கையின் ஒவ்வொரு பொருளும், காலத்தின் ஒவ்வொரு நிகழ்வும், உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஒருநாள் காலை பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மெதுவாகக் கடற்கரையில் நடந்துகொண்டு இருந்தார். அங்கு அலைகளைப் பார்த்து அவற்றிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டார். அந்த அலைகள் சருகு ஒன்றை மெதுவாகவும் முறையாகவும் மாற்றி மாற்றி எடுத்துச் சென்று கரையில் கொண்டு போய் சேர்த்து விட்டன! கடல் பரந்து விரிந்த ஆழமான வலிமைமிக்க ஒன்றாகும். அப்படி இருந்தபோதிலும், தேவையற்ற குப்பைகள் தன்னிடம் சேராமல் நீக்கிக் கொண்டே இருப்பதில் இடையறாது ஈடுபட்டு இருந்தது. எந்த ஒரு ஆசையையும் ஏதோ துச்சமான சருகு போன்றது தானே என எண்ணி உதாசீனப்படுத்தக் கூடாது என்பதை அது அறிந்திருந்தது. அதைக் கொண்டு போய் நமக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாத தொலைவில் வைத்துவிட வேண்டும். சுக சாந்தியுடன் இருப்பதற்கு எப்போதும் விழிப்புடன் இருந்தாக வேண்டும். பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வியப்புடன், “ஆஹா பிரமாதம்! கடல் எனக்கு மிகச் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டது!” என்றார். ஆசை தலைதூக்கும் போது அபாயமும் காத்துக் கொண்டு இருக்கும் என்பதே அந்தப் பாடம். (தெய்வீக அருளுரை,ஜூலை29, 1969)
நம்முடைய ஆசைகளைக் குறைத்துக்கொண்டு தியாக உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம், நாம் புகழின் உச்சத்திற்கு உயர்ந்து நம் நாட்டிற்கு நன்மை செய்ய முடியும். - பாபா