azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

I am told that you are aspirants of spirituality (sadhakas), and so I shall speak to you about sadhana (spiritual practice). Well. What is sadhana fundamentally? It is 'upavasa', 'upasana’. Upa means near, Asana means sitting and Vasam means residing. We sit near a cooler so that we may feel cool. We sit near God, so that we might derive some Godly qualities and get rid of ungodly characteristics. God is not an external contrivance or convenience like the air cooler. He is the Antaryamin, the Inner Director, the Inner Reality, the Unseen Basis on which all this seeable world is built. He is like the fire-principle that is latent in wood, which can be made manifest, when one piece is rubbed vigorously against another. The heat that is produced consumes the wood in fire! Satsangh (Company of the good and the godly) makes you meet with other individuals of a like nature, and creates the contact that manifests the Inner Fire! (- Divine Discourse, May 10, 1969)
It is not enough if you merely associate with sacred company; suffuse your heart with sacred teachings of such exalted company. – BABA
நீங்கள் ஆன்மிக சாதகர்கள் என்பதால் நான் உங்களிடம் ஆன்மிக சாதனையைப் பற்றிப் பேசப் போகிறேன். நல்லது, அடிப்படையில் ‘சாதனை’ என்றால் என்ன? அது ‘உபவாசம்’, ‘உபாசனை’ எனப்படுகிறது. ‘உப’ என்றால் அருகில், ‘ஆசனம்’ என்றால் அமர்வது, "வாசம்" என்றால் வசிப்பது. நாம் குளுமையை அனுபவிப்பதற்காக குளிர்சாதனத்துக்கு அருகில் அமர்கிறோம். நாம் சில சத்குணங்களைப் பெறவும், தீய குணங்களை அகற்றவும் தெய்வத்தின் சாந்நித்யத்தில் அமருகிறோம். இறைவன் குளிர்சாதனத்தைப் போல ஒரு கருவியோ, வசதியோ அல்ல. அவரே அந்தர்யாமி, சூத்ரதாரி, சர்வாந்தராத்மா, அனைத்து உலகிற்கும் ஆதாரமாக விளங்குபவர். மரக்கட்டையுள் உறையும் அக்னி தத்துவம் போன்றவர் அவரே; அதுவே ஒரு மரக்கட்டையை மற்றொன்றோடு தீவிரமாகக் கடையும்போது நெருப்பாக வெளிப்படுகிறது. இவ்வாறு உருவாகும் வெப்பம் அந்த மரக்கட்டையையே நெருப்பில் சுட்டெரித்து விடுகிறது! சத்சங்கம், உங்களை ஒருமித்த நல்மனம் கொண்டோரோடு இணைத்து, அந்தத் தொடர்பினால் உங்களுள் இருக்கும் அந்தராக்னியை வெளிப்படச் செய்கிறது! (தெய்வீக அருளுரை,மே10, 1969)
நீங்கள் சத்சங்கத்துடன் இணைந்திருந்தால் மட்டும் போதாது; அத்தகைய உன்னதமான சத்சங்கத்தின் புனிதமான போதனைகளில் உங்களுடைய இதயத்தை தோய்ந்திருக்கச் செய்யுங்கள். - பாபா