azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

One must always have calm thoughts. Only then can one’s mind have equanimity. It is just a question of the discipline of the mind — difficult in the beginning, but once mastered, capable of conquering all troubles and worries! An unruffled mind is very necessary for every aspirant who is marching forward; it is a very beneficial quality. Such a mind gives real strength and happiness. Strive to gain it. Even if calamity befalls, you should not lose heart. The mind must ever be pure, untarnished, and calm, full of courage. No weeping for the past, no faltering in performance of task at hand - that’s the mark of an aspirant. Elation at profit, joy, and cheer; dejection at loss and misery — these are natural characteristics common to all mortals. What, then, is the excellence of aspirants? They should not forget the principle: Be vigilant and suffer the inevitable gladly. When difficulties and losses overwhelm you, do not lose heart and precipitate some action, but meditate calmly on how they came to be. Try to discover some simple means of overcoming or avoiding them, in an atmosphere of peace. (Ch 6, Prasanthi Vahini)
Peace is essential for sharpness of intellect. Haste and worry confuse the intelligence. - BABA
ஒருவர் எப்போதும் சாந்தமான சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின்னரே மனம் சமநிலை கொண்டதாக மாறும். அப்படிப்பட்ட சாதனையில் மனதை வைக்க வேண்டும்; இது ஆரம்பத்தில் கடினமானதே, ஆனால் இதை சாதித்தவுடன், எல்லா பிரச்சனைகளையும் கவலைகளையும் வெல்லலாம்! சாதனையில் வளரவேண்டிய ஒவ்வொரு ஆன்மிக சாதகருக்கும் சலனமடையாத மனம் மிகவும் அவசியம்; அது அவர்களுடைய சத்குணங்களில் ஒன்றாகும். இப்படிப்பட்ட மனம் கொண்டவருக்கு உண்மையான சக்தியும் சௌக்கியமும் கிட்டும். அதனைப் பெறப் பாடுபடுங்கள். சாதகனுக்கு ஆபத்து ஏதேனும் வந்தாலும் மனம் தளரக் கூடாது. மனதை எப்போதும் பரிசுத்தமாக, மாசற்றதாக, அமைதியாக, தைரியம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும். கடந்ததை எண்ணிக் கவலைப்படாமல், செய்யவேண்டிய பணியில் குறையேதும் வைக்காமல், சாதனையைச் செய்ய வேண்டும். லாபம், சௌக்கியம், சந்தோஷம் ஆகியவற்றுக்கு ஆனந்திப்பது, கஷ்ட நஷ்டங்களுக்கு துக்கப்படுவது, இவை அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான இயல்புகளே. அப்படியானால், ஆன்மிக சாதகர்களின் சிறப்பு என்ன? இருப்பதை விழிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும், தவிர்க்க முடியாததை அனுபவித்தாக வேண்டும் எனும் தத்துவத்தை மறக்கக் கூடாது. கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்படும்போது, மனம் தளர்ந்து அவசரப்பட்டு செயலில் இறங்க வேண்டாம்; அவை எப்படி வந்தன என்பதை சாந்தமாக யோசியுங்கள். அமைதியான சூழலில் அவற்றைக் கடப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ சில எளிய வழிகளைக் கண்டறிய முயன்றிடுங்கள். (பிரசாந்தி வாஹினி,அத்தியாயம்-6)
புத்திகூர்மைக்கு சாந்தி அத்தியாவசியம். அவசரமும் கவலையும் புத்தியைக் குழப்பிவிடும். - பாபா