azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The purpose for which I have come is not to fulfil small desires or attend to the small incidents. There are great truths which I have to establish. There is a considerable change in human outlook which I have to bring about. No one can stop Me or deter Me from fulfilling the tasks for which I have come, namely the establishment of the one Eternal Truth. You have a part to play in the fulfilment of the Sai mission which is ahead of us. Establishment of dharma is the task to which we have to attend to immediately and I hope that you will all play your part, however small it may be, in fulfilling the Sai work. Since everything depends on truth, such truth is not something which has to yield to anyone. Untruth has to subordinate itself to almost everyone with whom it comes into contact. Truth will never be subservient to anyone. This form is the form of Sathya Sai who is the Embodiment of Truth. (Ch 32, Summer Showers 1974)
Sai’s Love and Grace is more soothing and comforting than the sight of a beautiful flower or the sweet smile of an innocent child. - BABA
நான் அவதாரம் எடுத்து வந்திருப்பதன் நோக்கம் ஏதோ சிறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அல்லது சிறு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கோ அல்ல. நான் மாபெரும் பணிகளை சாதிக்க வேண்டியுள்ளது. நான் மனிதர்களின் மனோபாவத்தில் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியுள்ளது. உலகில் சத்தியத்தை ஸ்தாபித்து நிலைநிறுத்த வேண்டும் எனும் என் அவதார நோக்கத்தை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. இனி நிகழப் போகும் சாயியின் அவதாரப் பணியில் நீங்கள் பங்கு கொள்ள வேண்டும். நாம் உடனடியாக செய்ய வேண்டிய பணி தர்மத்தை நிலைநாட்டுவதாகும்; அனைவரும் ஒன்றுசேர்ந்து சாயியின் பணியை நிறைவேற்றுவதில் உங்கள் பங்கு எவ்வளவு சிறிதானாலும், அதை நீங்கள் சரிவர ஆற்றுவீர்கள் என நான் நம்புகிறேன். அனைத்தும் சத்தியத்தையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால், அத்தகைய சத்தியம் யாருக்கும் தலைவணங்காது. அசத்தியம் தான் அனைவரிடமும் அடிபணிய வேண்டும். சத்தியம் யாருக்கும் அடிபணியாது. இந்தத் திருவுருவம் சத்தியத்தில் சயனித்து இருப்பதால் ‘சத்ய சாயி’ எனும் திருப்பெயரைத் தாங்கியுள்ளது. (அத்தியாயம் 32, கோடையருள் மழை 1974)
சாயியின் அன்பும் அருளும், அழகான மலரை விட, குழந்தையின் புன்சிரிப்பை விட மிக இனிமையானது, இதமானது. - பாபா