azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
The distinction between a human and a demon arises only from qualities. Demons do not have any peculiar physical traits as portrayed in cinemas and books. They are humans also. It is only by qualities that a human becomes a demon. In the Bhagavatam there is a nice example. Krishna was God Himself. His parents, Devaki and Vasudeva, were true humans. And Devaki’s brother, Kamsa, was a demon. Thus, all three categories — divine, human and demon — can exist even within the same family! Kamsa was a demon because of his anger and cruelty. Devaki and Vasudeva were humans for their kindness and compassion. Possessing Divine traits, which are beyond all attributes, Krishna was God. (Ch 8, Summer Showers 1995)
Give up the company of the worldly minded, the association with those infected by demonic qualities. Seek always the company of the wise and the good. - BABA
மனிதனும் ராட்சசனும் குணங்களாலேயே வேறுபடுகின்றனர். திரைப்படங்களிலும் புத்தகங்களிலும் சித்தரிக்கப்படுவதைப் போல ராட்சசர்களுக்கென்று தனிப்பட்ட உருவம் கிடையாது; அவர்களும் மனிதர்களே. குணங்களாலேயே ஒரு மனிதன் ராட்சசன் ஆகிறான். பாகவதத்தில் ஒரு நல்ல உதாரணம் உள்ளது. கிருஷ்ணர் தெய்வத்தின் ஸ்வரூபம். அவருடைய பெற்றோர் தேவகியும் வசுதேவரும் மனித ஸ்வரூபம். மேலும் தேவகியின் சகோதரனான கம்சன் ஒரு ராட்சசன். எனவே, ஒரு குடும்பத்திலேயே மூன்று வகையினராக - தெய்வம், மனிதன், ராட்சசன் ஆகியோர் இருக்கலாம்! கோபம் மற்றும் குரூர குணத்தால் கம்சன் ஒரு ராட்சசனாக இருந்தான். தேவகியும் வசுதேவரும் தயை தாட்சண்யம் கொண்டவர்களாக இருந்ததால் மனிதர்களாக இருந்தனர். எல்லா குணங்களுக்கும் அப்பாற்பட்ட திவ்யத்துவத்தை கொண்டிருந்ததால் கிருஷ்ணர் தெய்வமாக இருந்தார். (அத்தியாயம் 8, கோடையருள் மழை 1995)
உலகியலான மனம் கொண்டவரின் நட்பையும், அசுர குணம் கொண்டவரின் சேர்க்கையையும் விட்டுவிடுங்கள். எப்போதும் நல்லோருடனும் சத்சங்கத்திலும் இணைந்திருங்கள். - பாபா