azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Prahlada told Hiranyakashipu that God is present everywhere, as scientists talk about the atom. “Do not fall into doubt that He is here but not there. Wherever you look, you will find Him,” he said. Hiranyakashipu said, “Really? Is God present everywhere? Fine, show Him to me.” Prahlada replied, “Father! Steeped in slavery to the senses and in body-consciousness, you want to see God. It is impossible. You struggle hard to earn fame and worldly security but you do not yearn for God. God grants whatever you want. You desire that your power and fame increase. You live under the dominance of ego and attachment. As long as the feelings of ‘I’ and ‘Mine’ prevail, it is impossible for you to grasp the Atma principle.” Even today, men search for God while identifying with the body and reinforcing their feelings of “I” and “Mine”. They will not find God, no matter how long they try. The principle of the non-dual Atma must first be understood. You must offer yourself to God! What does that mean? All actions must be performed with divine feelings. (Ch 8, Summer Showers 1995)
No doubt the body is necessary for certain purposes. But it should be regarded as an instrument and all actions should be performed as offerings to the Divine. – BABA
அணு எங்கும் வியாபித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுவது போல், இறைவன் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளான் என்று பிரஹலாதன் ஹிரண்யகசிபுவிடம் கூறினான். "இறைவன் இங்கிருக்கிறான், அங்கு இல்லை என்ற சந்தேகமே வேண்டாம். நீங்கள் எங்கு தேடிப் பார்த்தாலும், அங்கு அவனைக் காண்பீர்கள்,” என்றான். ஹிரண்யகசிபு, “அப்படியா? இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறானா? சரி, அவனை எனக்குக் காட்டு" என்றான். அதற்கு பிரஹலாதன், “தந்தையே! புலன்களின் அடிமையாகவும், உடல் பற்றில் மூழ்கியும் இருக்கும் நீங்கள் இறைவனைக் காண விரும்புகிறீர்கள். இது அசாத்தியம். நீங்கள் வெறும் உலகியலான சுகசந்தோஷங்களையும் பேரும் புகழையும் பெறுவதற்குப் கடுமையாகப் போராடுகிறீர்கள், ஆனால் தெய்வ அனுக்கிரஹத்தைப் பெற முயற்சிப்பதில்லை. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே இறைவன் அனுக்கிரஹிக்கிறான். உங்கள் அதிகாரமும் புகழும் பெருக வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் அகந்தை மற்றும் பற்றுதலின் பிடியில் இருக்கிறீர்கள். ‘நான், ‘எனது’ என்ற உணர்வுகள் மேலோங்கி இருக்கும்வரை, உங்களால் ஆத்மபாவத்தைப் புரிந்து கொள்ள முடியாது” என்று பதிலளித்தான். இன்றும் கூட மனிதர்கள் உடற்பற்றுடன், “நான்” “எனது” என்ற உணர்வுகளால் கட்டுண்டு, இறைவனைத் தேடுகிறார்கள். அவர்களால் எவ்வளவு காலம் முயன்றாலும் இறைவனைக் காணமுடியாது. முதலில் ஏகாத்ம பாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களையே இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்! அப்படியென்றால்? அனைத்து செயல்களையும் இறைஉணர்வுடன் ஆற்ற வேண்டும் என்பதுதான் அதன் பொருளாகும். (அத்தியாயம் 8, கோடை அருள்மழை 1995)
சில நோக்கங்களுக்காக உடல் அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை ஒரு கருவியாகக் கருதி, அனைத்து செயல்களையும் தெய்வ அர்ப்பணமாக செய்ய வேண்டும். - பாபா