azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
When I attended a symposium in Bombay on "Science and Spirituality," a prominent scientist said that the nuclear arsenals of the big powers contained enough atom bombs to destroy the world ten times over. What is the sense in building up such arsenals? If you have destroyed the world once, what is there left for the other bombs to destroy? In the process, you would have destroyed yourself. Those engaged in research seem to be more concerned about boosting their name and fame by their research than about promoting public well-being through the results of their research. Nor do they seem to be bothered about the harmful consequences of their discoveries. There is nothing great about causing harm to others. To destroy a million persons by a single bomb is no great thing. To do good to a single individual in the world is more praise-worthy. The scientific knowledge we acquire must be used for the benefit of our fellow-men. Only that is proper education which prepares the student for enlightened action. The pursuit of the Science of the Supreme Spirit (Parartha Vijnana Shastra) is more essential than involvement with the physical sciences (Padhartha Vijnanamu). (Divine Discourse, Jun 16, 1983)
If peace is to be ensured, science has to be promoted on the right lines. – BABA
மும்பையில் "அறிவியலும் ஆன்மிகமும்" என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் நான் கலந்துகொண்ட போது, ஒரு பிரபல விஞ்ஞானி, வல்லரசுகளின் அணுஆயுதக் கிடங்குகளில் உலகை பத்து முறை அழிக்கக்கூடிய அளவுக்கு அணுகுண்டுகள் உள்ளன என்று கூறினார். இத்தகைய ஆயுதங்களைக் குவிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் ஒரு முறை உலகை அழித்துவிட்டால், பிற குண்டுகள் அழிப்பதற்கு என்ன மிஞ்சி இருக்கப் போகிறது? இந்த நிகழ்வில், நீங்கள் உங்களையே அழித்திருப்பீர்கள். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் பலனால் மக்களின் பொதுநலனை மேம்படுத்துவதை விட, தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தங்கள் பெயரையும் புகழையும் மேம்படுத்திக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள். தங்கள் கண்டுபிடிப்புகளினால் விளையும் தீமைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. ஒரு இலட்சம் பேரை ஒரே குண்டினால் அழிப்பது பெரிய விஷயம் இல்லை. உலகில் ஒரு தனி மனிதனுக்கு நன்மை செய்வது என்பது மிகவும் மெச்சத்தகுந்தது. நாம் பெறும் அறிவியல் அறிவு, சக மனிதர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். மெய்யுணர்வைப் பெறுவதற்காக ஒரு மாணவனைத் தயார்ப்படுத்துவதே சரியான கல்வியாகும். ‘பதார்த்த விஞ்ஞானம்’, அதாவது பௌதிக அறிவியலில் ஈடுபடுவதைக் காட்டிலும், ‘பரார்த்த விஞ்ஞானம்’, அதாவது பரமாத்மாவைப் பற்றிய அறிவியலை நாடுவது மிக அத்தியாவசியமாகும். (தெய்வீக அருளுரை, ஜூன் 16, 1983)
அமைதி உறுதி செய்யப்பட வேண்டுமானால் அறிவியல் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். - பாபா