azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
God is known by various names and of these, the greatest and the most fitting is Satchitanada. Sat means that which remains unchanged in all three periods of time – the past, the present, and the future. Strict adherence to truth would enable one to experience Sat. Chit means total awareness or complete knowledge. It is that which enables one to experience Divinity in all its aspects. Once Sat and Chit are experienced, Ananda or bliss would follow automatically. Everyone wants to be happy. Such a desire is natural and it springs from the fact that man’s true nature is Bliss. Bliss is God but man does not understand that. He does not understand that he originated from God, that life’s undercurrent is God, and that his final destination also is God. Man is born of Ananda, the basis of his life is Ananda, and his goal also is Ananda. The human body is temporary; the pleasure that it can give also is fleeting. Therefore, one must seek that which is permanent, that is to say, God, or Bliss, which is the same thing. (Divine Discourse, May 21, 2000)
The man who is able to get rid of attachment and hatred, egoism and acquisitiveness, will recognise his Sat-Chit-Ananda (divine) nature. - BABA
இறைவனுக்கு பல திருநாமங்கள் உண்டு; இவற்றில் பரம உத்தமமான திருநாமம் ‘ஸச்சிதானந்தம்’ என்பதே. ‘ஸத்’ என்றால் முக்காலங்களிலும், அதாவது கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் எதிலும் மாறாதது எதுவோ அதுவே 'ஸத்’. சத்திய மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே ஒருவர் இந்த ‘ஸத்’-ஐ அனுபவிக்க வேண்டும். ‘சித்’ என்றால் பரிபூரண ஞானம்; இந்த பரிபூரண ஞானத்தின் மூலமே, நாம் பரிபூரண ஸ்வரூபனான இறைவனை தரிசிக்க முடியும். ‘ஸத்’-ஐயும், ‘சித்’ஐயும் அனுபவித்தவுடன், ஆனந்தம் நம்முள் ஊற்றெடுக்கும். ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறார்கள். இத்தகைய விருப்பம் இயற்கையானதே, ஏனெனில் மனிதனின் உண்மையான இயல்பு ஆனந்தமே. ஆனந்தமே இறைவன், ஆனால் மனிதன் அதைப் புரிந்து கொள்வதில்லை. தான் இறைவனிடமிருந்தே தோன்றினோம், வாழ்க்கையின் ஆதாரம் இறைவனே, தனது இறுதி இலக்கும் இறைவனே என்பதையெல்லாம் அவன் புரிந்து கொள்வதில்லை. மனிதன் பிறந்ததே ஆனந்தத்திலிருந்து தான், ஆனந்தமே அவனுடைய வாழ்வின் அடிப்படை, அவன் இறுதியில் ஐக்கியமாவதும் ஆனந்தத்திலேயே. இந்த மனித உடல் தாற்காலிகமானது; இது தரும் ஆனந்தமும் தாற்காலிகமானதே. எனவே ஒருவர் சாஸ்வதமான ஆனந்தத்தை, அதாவது இறைவனையே நாட வேண்டும். (தெய்வீக அருளுரை, மே 21, 2000)
விருப்பு, வெறுப்பு, அகந்தை, பேராசை ஆகியவற்றை விட்டொழிக்கக்கூடிய மனிதனே தன்னுடைய ஸச்சிதானந்த இயல்பை உணர்வான். - பாபா