azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
To purify the heart, one must practise shama, dhama (self-restraint of mind and the senses) and other sadhanas which can control the senses of perception and action. These may seem difficult in the early stages but any work that is worth doing has that drawback. Take riding a bicycle, for example. You will have to go through many falls and scrapes and lose many square inches of skin before you learn to balance and pedal on an even line. But once you have mastered the art, you can ride safely without holding on to the handlebar. It is the same for a person learning to drive a car. At first, when you keep your foot on or lift it from the clutch, you cannot hold the steering wheel; when you hold the wheel and when you manage both, you forget the brake. When you attend to all three, you do not watch out for pedestrians who run across. But when you have mastered the art, you are aware of the ups and downs, the stops and lights, and the roads quite spontaneously and you can drive safe and fast conversing with the persons sitting to your left and on the back seat, and even singing a song to win their acclaim. (Divine Discourse, Apr 13, 1981)
Nothing can be accomplished without practice. Likewise, teachings of the Upanishads reveal their Truth when practised. - BABA
இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு, சமம், தமம் முதலான மனம் - புலன்களின் சுயக்கட்டுப்பாட்டையும், கர்மேந்திரியங்கள் - ஞானேந்திரியங்களைக் கட்டுப்படுத்தும் பிற ஆன்மிக சாதனைகளையும் ஒருவர் கடைப்பிடிக்கவேண்டும். ஆரம்ப கட்டங்களில் இவை கடினமாகத் தோன்றலாம், ஆனால் எந்தப் பணியை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். உதாரணமாக, சைக்கிள் ஓட்டுவதை எடுத்துக் கொள்ளுங்கள். சீராக சமநிலையில் ஓட்டுவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளும் வரை, பலமுறை விழுந்து எழுந்து, சிராய்த்துக் காயம் பட வேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் அந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவுடன் ஹேண்டில்பாரைப் பிடிக்காமலும் பாதுகாப்பாக ஓட்ட முடியும். கார் ஓட்டக் கற்றுக்கொள்பவரின் நிலையும் இது போன்றதே. ஆரம்பத்தில், நீங்கள் 'கிளட்ச்'இல் காலை வைக்கும்போதோ அல்லது எடுக்கும்போதோ, உங்களால் ஸ்டீயரிங் வீலைப் பிடித்திருக்க முடிவதில்லை; ஸ்டீயரிங் வீலைப் பிடித்துக் கொண்டு, இரண்டையும் சமாளிக்கும்போது, பிரேக்கை மறந்து விடுகிறீர்கள். இம்மூன்றிலும் கவனம் செலுத்தும்போது, சாலையின் குறுக்கே செல்லும் பாதசாரிகளை நீங்கள் கவனிப்பதில்லை. ஆனால் நீங்கள் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்ற பிறகு, சாலையின் ஏற்ற இறக்கங்கள், நிறுத்தங்கள், சிக்னல்கள், செல்லவேண்டிய பாதைகள் ஆகியவற்றை நீங்கள் தானாகவே அறிந்திருப்பீர்கள்; மேலும் உங்கள் இடப்பக்கமும், பின் இருக்கையிலும் அமர்ந்திருப்பவர்களுடன் உரையாடிக் கொண்டும், ஏன் அவர்களின் பாராட்டைப் பெறுவதற்காக பாட்டைப் பாடிக்கொண்டும் கூட பாதுகாப்பாகவும் வேகமாகவும் உங்களால் ஓட்ட முடியும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 13, 1981)
பயிற்சி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. அதேபோல், உபநிடதங்களின் போதனைகள் கடைப்பிடிக்கப்படும்போது தான் அவற்றின் உண்மை வெளிப்படுகிறது. - பாபா