azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Today the situation in society is such that people try to misuse even the good actions of others. Even if you help them, they try to harm you. No doubt, one should help even those that harm. But you must use your discrimination while helping others. Think to what extent you can help such people. I have told this story earlier also. When Mohammad Ghori attacked Prithvi Raj, he was completely defeated by him. But Prithvi Raj, being a large-hearted ruler, forgave him and let him go scot-free. Later, Mohammad Ghori again attacked Prithvi Raj and defeated him. Mohammad Ghori made Prithvi Raj captive and blinded him. He did not have gratitude toward Prithvi Raj, who had earlier allowed him to go back unharmed. You should, therefore, be cautious in practising forgiveness while dealing with a cruel person. No doubt, forgiveness is a great virtue, but it will do more harm than good if it is practised with respect to an evil-minded person. You should forgive such a person once or at most twice. Do not forgive him every time he harms you, otherwise you will be put to danger. (Divine Discourse, Jul 12, 1996)
To cleanse the mind, prayer is the water and repentance is the soap. Repentance must be followed by resolute determination not to repeat the wrong. – BABA
இன்றைக்கு சமூகத்தில் பிறர் செய்யும் நல்ல செயல்களைக் கூடத் தவறாகப் பயன்படுத்த முயலும் சூழ்நிலை உள்ளது. நீங்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், அவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்யவே முயற்சிக்கிறார்கள். தீங்கு செய்பவர்களுக்குக் கூட ஒருவர் உதவ வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு உதவும்போது உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த அளவிற்கு உதவ வேண்டும் என்று யோசியுங்கள். இந்தக் கதையை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். முகமதுகோரி பிருத்விராஜுடன் போரிட்டபோது, அவரால் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டான். ஆனால் பிருத்விராஜ், விசாலமான தயை நிறைந்த இதயம் கொண்ட மன்னனாக இருந்ததால், அவனை மன்னித்து விடுவித்துவிட்டார். பின்னர், முகமதுகோரி மீண்டும் பிருத்விராஜின் மீது படையெடுத்து வந்து அவரைத் தோற்கடித்தான். முகமதுகோரி பிருத்விராஜை சிறைப்பிடித்து, ஈவு இரக்கமின்றி கண்களைப் பிடுங்கி குருடாக்கிவிட்டான். முன்பு அவனுக்குத் தீங்கேதும் செய்யாமல் திரும்பிச் செல்ல அனுமதித்த பிருத்விராஜிடம் அவனுக்கு எந்த நன்றியுணர்வும் இருக்கவில்லை. எனவே, ஒரு கொடியவனைக் கையாளும்போது அத்தகையவனை மன்னிப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன்னித்தல் ஓர் சிறந்த நற்பண்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் தீய எண்ணம் கொண்டவனுக்கு அதை அளிப்பதாக இருந்தால், அது நன்மையை விட அதிகமான தீங்கையே விளைவிக்கும். அத்தகையவனை நீங்கள் ஒரு முறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை மன்னிக்கலாம். ஆனால் அவன் உங்களுக்குத் தீங்கு செய்யும் ஒவ்வொரு முறையும் அவனை மன்னிக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் ஆபத்திற்கு ஆளாவீர்கள். (தெய்வீக அருளுரை, ஜூலை 12, 1996)
மனதைத் தூய்மைப்படுத்துவதற்கு பிராத்தனையே தண்ணீர், கழிவிரக்கமே சோப்பாகும். கழிவிரக்கத்தைத் தொடர்ந்து, செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற உறுதியான முடிவெடுக்க வேண்டும். - பாபா