azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 31 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 31 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
One may be a simpleton without any intelligence or intellectual capabilities, but if one has fear of sin, it is enough. You may have any amount of wealth, gold and worldly possessions but if you lack fear of sin, you can only be considered as an ignoramus. Once Prahlada told his father, “Why do you kill innocent people just as you hunt wild animals in the forest? You are indulging in acts of violence in order to expand your kingdom. What do you gain by killing so many people? This is not what you are supposed to do. How can one, who has become a slave to inner enemies, conquer his external foes? You have many great enemies within you. What are they? They are desire, anger, greed, delusion, pride and jealousy. Having surrendered to these six inner enemies, you are killing innocents outside. It is a great sin.” First and foremost, kill your inner enemies like desire, anger, greed, etc. Only then can you develop fear of sin. What is the reason for the unrest prevailing in the country today? The reason is lack of fear of sin and love for God. (Divine Discourse, Jul 12, 1996)
You must watch for every chance and make the mind dwell on noble thoughts, do elevating tasks, and curb the downward pull of the ego. - BABA
ஒருவன் புத்திசாலித்தனமோ அறிவுத்திறனோ இல்லாத பாமரனாக இருக்கலாம், ஆனால் பாப பீதி ஒன்று இருந்தால் போதும். உங்களிடம் எத்தனையோ செல்வம், பொன், பொருள் ஆகியவை இருக்கலாம்; ஆனால் உங்களிடம் பாப பீதி இல்லையென்றால், நீங்கள் ஒரு பாமரனே. ஒருமுறை பிரஹலாதன் தன் தந்தையிடம், “தந்தையே! காட்டில் விலங்குகளை வேட்டையாடுவது போல் ஏன் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறாய்? உன் நாட்டை விரிவுபடுத்துவதற்காக நீ வன்முறை செயல்களில் ஈடுபடுகிறாய். இத்தனை பேரைக் கொன்று குவிப்பதால் உனக்கு என்ன லாபம்? நீ செய்யவேண்டியது இதுவல்ல. உட்பகைவர்களுக்கு அடிமையாகிவிட்ட ஒருவன், வெளிப் பகைவர்களை எப்படி வெல்ல முடியும்? உனக்குள்ளேயே பெரும் பகைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் யாரெனத் தெரியுமா? அவையே காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் ஆகும். இந்த ஆறு உட்பகைவர்களிடம் அடிபணிந்துவிட்ட நீ, வெளியில் உள்ள அப்பாவிகளைக் கொல்கிறாயே. அது பெரும் பாவம்” என்றான். முதன்முதலில், காமம், குரோதம், லோபம், மோஹம் போன்ற உங்களுடைய உட்பகைவர்களை அழியுங்கள். அப்போதுதான் நீங்கள் பாப பீதியை வளர்த்துக் கொள்ள முடியும். இன்று நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு என்ன காரணம்? பாப பீதியும், தெய்வ ப்ரீதியும் இல்லாததும் தான் இதற்குக் காரணம். (தெய்வீக அருளுரை, ஜூலை 12, 1996)
சீரிய எண்ணங்களை மனதில் கொண்டிருக்கவும், நம்மை உயர்த்தும் பணிகளைச் செய்வதற்கும், அகந்தை நம்மைத் தாழ்வடையச் செய்வதைத் தடுப்பதற்கும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்நோக்கி இருக்க வேண்டும். - பாபா